Friday, 25 April 2008

கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றமில்லை சர்வதேச ஏ.எவ்.பி.செய்தி ஸ்தாபனம் தெரிவிப்பு















அரசு கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுள்ள போதிலும் அங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லையென ஏ.எவ்.பி.செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் வரை கிழக்கில் 212001 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் உள்ளனர் என ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவிக்கின்றது.

இவர்களில் திருகோணமலையைச் சேர்ந்த 8 ஆயிரம் பேரும் உள்ளனர்.

2006இல் இராணுவ நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் அவர்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் அரச கட்டடம் மற்றும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

கிழக்கு தற்போது அரசின் கைகளில் உள்ள போதிலும் கடந்த 10 மாதகாலமாக இவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதுடன் மனிதாபிமான அமைப்புகளில் தங்கி வாழுகின்றனர்.



சம்பூர் உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் தமது பகுதிக்குச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. அவர்களுக்கு அரசு புதிய இடமொன்றை வழங்கியுள்ளது. எனினும் அப்பகுதி அடர்ந்த காடாகவுள்ளது. அது பாதுகாப்பானதல்ல என்கின்றனர் மக்கள்.



போதிய வேலை உணவு மற்றும் குடிநீரின்மை போன்றவையே இவர்களுக்கு பாரியப் பிரச்சினையாகவுள்ளன. என அந்த செய்தி ஸ்தாபனம் மேலும் தெரிவிக்கின்றது.

No comments: