Saturday, 26 April 2008

சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுகிறது - திவயின

சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்களின் குழு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயலாற்றுவதாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் சிலர் குற்றஞ்சாட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக அரசாங்கம் உரிய முனைப்பு காட்டவில்லை என்று தெரிவித்து சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு தமது பணிகளை விட்டு விலகிக் கொண்டது.

தமது பணிகளிலிருந்து விலகிக் கொள்கின்றமை தொடர்பாக சர்தேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழுவின் தலைவர் கே.என். பகவதி தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு இலங்கை அரசாங்கம் தனது கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தது.

திரு.கே.என். பகவதி உள்ளிட்ட குழுவினருக்கு இலங்கை ஜனாதிபதி மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத் தரப்பினர் மிகக் கடுமையான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர்.

இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சிரேஸ்ட சட்டத்தரணிகளும் முக்கியஸ்தர்கள் குழு, விடுதலைப் புலிகளுக்கு சார்பான செயற்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

மூதூரில் 17 தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் விசாரணைகள் குறித்து கண்காணிப்பதற்காக இலங்கை வருகை தந்த சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு, விடுதலைப் புலிகளுக்கு சார்பாக செயற்படுவதாக சிரேஸ்ட சட்டத்தரணிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முப்படை மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்த சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் ஆணைக்குழு முயற்சித்ததாக அந்தக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.

பகவதி குழுவினர் அரச சார்பற்ற நிறுவனங்களில் கருத்துக்களுக்கு அமைய செயற்பட்டதாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: