Thursday, 31 July 2008

NTT Tamil News 31.07.2008

பிள்ளையானை சந்திக்க மறுத்த இந்தியப் பிரதமர் ஹிஸ்புல்லாவை சந்திப்பார்

சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு வரவுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், தான் கொழும்பில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானைச் சந்திப்பதற்கு மறுப்புத் தெரிவித்திருக்கின்ற அதேவேளையில், கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவைச் சந்தித்துப் பேசுவதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு வரும் இந்தியப் பிரதமர் கிழக்கு மாகாண முதலமைச்சரையும் சந்திப்பார் என முதலில் வெளியான செய்திகள் தெரிவித்திருந்த போதிலும், பிள்ளையானைச் சந்திப்பதற்கு இந்திய வட்டாரங்கள் பின்னர் மறுத்துவிட்டன. கொழும்பில் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் ஆர்.சம்பந்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அறுமுகம் தொண்டமான, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ராவூப் ஹக்கீம், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் ஆகியோரைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவிருக்கின்றார்.

அமைச்சர் றிசாட் பதியுதீனுடன் நடைபெறும் பேச்சுக்களின் போது ஹிஸ்புல்லாவும் உடனிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை விட அமைச்சர் மிலிந்த மொரகொட மற்றும் அவர்களுடைய குடும்பத்தினரை இந்தியப் பிரதமர் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

15வது சார்க் மாநாட்டினால் தலைநகரின் செயற்பாடுகள் மந்தகதியில்

15வது சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரிலுள்ள முக்கிய வீதிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைவடைந்திருப்பதுடன், தலைநகரிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சார்க் மாநாட்டை முன்னிட்டு ஜூலை 30ஆம் திகதி முதல் விசேட பாதுகாப்பு நடைமுறைப்படுத்தப்படும் எனப் பொலிஸார் முன்னர் அறிவித்திருந்தனர்.


இந்த நிலையில் நேற்றையதினம் வீதிப் போக்குவரத்து ஒத்திகை நடத்தப்பட்டிருந்தது. இதனால் கொழும்பின் பல்வேறு வீதிகளில் நீண்ட தூரத்துக்கு வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததுடன், வீதிகள் மூடப்பட்டமையால் வாகனங்களில் பயணித்தவர்கள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் வீதிகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சார்க் மாநாட்டை முன்னிட்டு தலைநகரின் சில வீதிகள் மூடப்பட்டதால் அந்தப் பகுதிகளிலுள்ள அலுவலகங்களின் செயற்பாடுகள் மந்த கதியில் இடம்பெற்றதுடன், சில வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.

பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக மக்கள் தமது சாதாரண நடமாட்டத்தைக் குறைத்துக்கொண்டதால் வீதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ளது.

இதேநேரம், சார்க் மாநாட்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் கம்பஹாவிலுள்ள 35 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அனைத்துப் பாடசாலைகளும் 4ஆம் திகதி இரண்டாம் தவணைக்காக மூடப்படவிருந்த நிலையில், கொழும்பு மற்றும் கம்பஹா பகுதியிலுள்ள சில பாடசாலைகள் நேற்றைய தினமே மூடப்பட்டுள்ளன.

பம்பலப்பிட்டியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் புகையிரத சேவை

பாதுகாப்புக் காரணங்களுக்காக காலியிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் செல்லும் புகையிரதங்கள் நாளை 1ஆம் திகதி முதல் பம்பலப்பிட்டியுடன் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

காலியிலிருந்து புறக்கோட்டை செல்லும் புகையிரதங்களில் பயணிப்பவர்கள் நேற்றும், இன்றும் பம்பலப்பிட்டியில் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதிலும் புகையிரதம் புறக்கோட்டைக்குப் பயணிப்பதற்கு அனுமதிக்கப்பட்டது.

எனினும், நாளை முதல் 4 ஆம் திகதிவரை காலியிலிருந்து புறக்கோட்டை நோக்கிச் செல்லும் கரையோரப் புகையிரத சேவை பம்பலப்பிட்டியுடன் மட்டுப்படுத்தப்படும். பயணிகள் பம்பலப்பிட்டியில் இறக்கப்பட்டு அங்கிருந்து பாதுகாப்புடன் பேரூந்துகளில் அழைத்துச்செல்லப்படுவார்கள் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கை: விரைவில் கைச்சாத்து

சிறிலங்காவுடன் பாகிஸ்தான் பாதுகாப்புக் கூட்டுறவு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடவிருப்பதாக கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

இந்த பாதுகாப்பு கூட்டுறவு உடன்படிக்கைக்கான நகல் திட்டம் ஒன்று பாகிஸ்தானால் சிறிலங்காவிடம் கையளிக்கப்பட்டிருப்பதாகவும், இரு தரப்பினரும் இது தொடர்பாக ஆராய்ந்து வெகு விரைவில் இவ்வவுடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் நடைபெறும் சார்க் மாநாட்டில் பங்கு கொள்வதற்காக கொழும்பு வந்திருக்கும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்டும் ஷா மஹமூட் குவெஷி இது தொடர்பாக தெரிந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் சிலரிடம் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

பாதுகாப்பு உடன்படிக்கைக்கான நகல் திட்டம் சிறிலங்கா அதிகாரிகளுடைய பரிசீலனைக்காக இப்போது சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

சிறிலங்கா நெருக்கடிகளை மற்றும் சவால்களை எதிர்கொண்டிருந்த தருணங்களில் பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு சார்ப்பாகவே இருந்துள்ளது என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

சிறிலங்காவுக்கான ஆயுத மற்றும் பயிற்சி வசதிகள் உட்பட அனைத்து வகையான பாதுகாப்பு உதவிகளும் தொடர்ந்தும் வழங்கப்படும் எனவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்களவருக்குப் புரியும் மொழியில் பேசுங்கள்

(இந்தக் கட்டுரையில் உள்ளவை, கட்டுரை ஆசிரியரின் தனிப்பட்ட கருத்துகளே)

திருப்பதிக்கு இலங்கைக் குடியரசுத் தலைவர் ராஜபக்சே வருகிறார். கோயிலில் வழிபாடு செய்கிறார். இந்திய அரசு அவருக்கு முழுமையான பாதுகாப்புக் கவசத்தை வழங்குகின்றது.

அதே நாள், அதே நேரம், நாகப்பட்டின மீனவர்கள் வேதாரணியக் கரையோரத்தில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். ராஜபக்சே முப்படைத் தலைவராக இருக்கும் இலங்கைக் கடற்படை, தமிழக மீனவர்களை நோக்கி வருகிறது.

மீன்பிடிப் படகுகளை நோக்கித் துப்பாக்கியால் சரமாரியாகச் சுடுகிறது. இருவர் படகுக்குள்ளேயே பிணமாகிக் கிடக்கின்றனர். மீனவர் பலருக்குப் படுகாயங்கள் ஏற்படுகின்றன. மீன்பிடிப் படகுகளைக் குண்டுகள் துளைக்க, தண்ணீர் உள்ளே குபுகுபுவெனப் பாய்கிறது. படகு மூழ்குகிறது. மீன்பிடி வளைகள் அறுந்து தொங்குகின்றன.

அந்தப் படகுக் கூட்டம், சிதறி ஓடுகிறது. குண்டடிபட்ட படகுகளைக் கட்டி இழுத்துக் கொண்டு வேதாரணியக் கரைக்கு வருகிறது. கடற்படையின் தலைவருக்குத் திருப்பதியில் பாதுகாப்பு. கடற்படையோ தமிழக மீனவரைக் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொல்கிறது.

சரியாக மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு நாள். நிகழ்விடம்: கொழும்பு - இலங்கைக் குடியரசுத் தலைவர் மாளிகை. இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணன், இந்திய அயலுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனன், மற்றும் இலங்கை வெளியுறவுத் துறையின் மூத்த அதிகாரிகள், இந்தியாவின் மூத்த படைத் தளபதிகளுள் ஒருவர் யாவரும் கூடிப் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் தெற்காசிய மாநாட்டிற்காகக் கொழும்பு வரும்பொழுது, எவ்வாறு பாதுகாப்பு வழங்கலாம் என்பதையும் அவர்கள் பேசுகிறார்கள். அதே நாள், அதே நேரம், நிகழ்விடம்: திருப்பாலைக்குடிக் கடல். இராமேச்சரத்திற்கு வடக்கே கச்சத் தீவுக்கு மேற்கே. சிலநூறு படகுகள் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றன.

அங்கு, சந்தியாகு என்ற மீனவர் பிணமாகச் சுருண்டு விழுகிறார். இலங்கைக் கடற்படை சுட்டதால் பல படகுகள் சேதம் அடைந்தன. அல்லோல கல்லோலத்துடன் அனைத்துப் படகுகளும் சந்தியாகுவின் உடலுடன் இராமேச்சரம் வருகின்றன.

தில்லியும் கொழும்பும் பேசிக்கொண்டிருக்கலாம்; ஒருவருக்கொருவர் பாதுகாப்பு கொடுத்துக் கொண்டிருக்களாம்; தமிழக மீனவர்களைத் தமிழகக் கடல் எல்லைகளுக்கு உள்ளேயே சுட்டு வீழ்த்த இலங்கை கடற்படை தயங்காது. ஏனென்றால் இலங்கை கடற்படைக்கும் தெரியும்; முப்படைத் தலைவர் ராஜபக்சேவுக்கும் தெரியும்; தமிழக மீனவர்களைத் தமிழகக் கடல் எல்லைக்குள் எத்தனை முறை சுட்டாலும் தில்லி திரும்பி பார்க்காது என்று.

சில ஆண்டுகளுக்கும் முன் தமிழகக் கடல் எல்லைக்குள் சிங்களக் கடற்படை வந்தது. பாம்பன் தீவை நோக்கி நகர்ந்தது. இராமேச்சுவரத்திற்கு வடக்கே உள்ள ஓலைக்குடா மீனவ கிராமத்துக்குள் கரையேறியது. வீரர்கள் திபுதிபுவென கிராமத்துள் புகுந்தனர். மீனவக் குடும்பங்களை நோக்கிச் சுட்டனர். குடிசைகளை எரித்தனர். படகுகளை வெடிவைத்து உடைத்தனர். அந்தக் கிராமத்தையே சூறையாடினர். சில மணி நேரத்தில் இலங்கைக்குத் திரும்பிச் சென்றனர்.

அடுத்த நாள் பரபரப்புச் செய்திகளை நாளிதழ்கள் வெளியிட்டன. தமிழகத்தின் கிராமம் ஒன்றில் அந்நியப் படை புகுந்தது, சுட்டது, சூறையாடியது, எரித்தது, மீனவர்களை விரட்டியது, என்றெல்லாம் இந்த நாளிதழ்களில் செய்தி வந்தாலும் தில்லி திரும்பிப் பார்க்கவில்லை. கொழும்பை வினவவில்லை, கவலை தெரிவிக்கவில்லை, எச்சரிக்கவில்லை, பதிலடி கொடுக்கும் கனவுகூடக் காணவில்லை.

தாக்குபவர்கள் சிங்களவர்கள்; அழிந்து மடிபவர்கள், கடலிலே நீர்ப் புதைகுழி காண்பவர்கள், அப்பாவித் தமிழர்கள்.

தமிழகக் கடல் எல்லைகளுக்குள் சிங்களக் கடற்படைக் கப்பல்கள் ஆயுதப் பாணிகளாய் அத்துமீறி நுழைகின்றனர். தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கின்றனர். சுட்டும் வெடிவைத்தும் அடித்தும் மீனவர்களைக் காயப்படுத்துகின்றனர். தமிழக எல்லைக்குள் வைத்து இம்மீனவர்களைச் சிறைப் பிடிக்கின்றனர். இலங்கைத் தீவுக்குள் கொண்டு சென்று கொடுஞ்சிறைக்குள் அடைக்கின்றனர். மீன்பிடி வலைகளை அறுத்து அழிக்கின்றனர். மீன்பிடிப் படகுகளைத் துளைத்து மூழ்கடிக்கின்றனர். மிதக்கும் படகுகளைக் கைப்பற்றி இலங்கையில் சேர்க்கின்றனர்.

மாலையில் படகில் புறப்பட்டு, இரவெல்லாம் கடலில் ஓடி ஓடி உழைத்து, வலை விரித்து, மீன் பிடித்து, படகுக்குள் சேர்க்கும் மீன்கள் யாவையும் நடுக்கடலில் வைத்துச் சிங்களக் கடற்படை கைப்பற்றி, மீனவப் படகுகளைக் கையறு நிலையில் தமிழகத்திற்கு அனுப்புகிறது.

1983இல் தமிழரின் இறைச்சிக் கறி இங்கே விற்கப்படும் என்று பல இடங்களில் பெயர்ப் பலகை எழுதிக் கடைகளை வைத்தவர்கள் சிங்களவர். கொழும்பிலும் சிங்கள ஊர்களிலும் அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்றவர்கள். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தமிழர்களின் சொத்துகளைச் சூறையாடியவர்கள்.

தமிழர் இலங்கையில் இருந்தாலென்ன, தமிழகத்தில் இருந்தாலென்ன, வேரொடும் வேரின் மண்ணோடும் சாய்த்து வீழ்த்தி அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பது சிங்கள மக்களின் தலையாய கருத்து.

60 ஆண்டு காலமாக இலங்கையில், தமிழர்களைக் காலத்துக்கு காலம் வேட்டையாடுவதும் கொன்று குவிப்பதும் அவர்களுக்குப் பொழுதுபோக்கு. காடையர்கள் தாக்குவார்கள்; அரசக் காவலர்கள் கண்மூடி இருப்பார்கள். அரசக் காவலர்கள் தாக்குவார்கள்; படைவீரர் கண்மூடி நிற்பார்கள். தரைப்படையும் கடற்படையும் வான்படையும் கொண்டு படை வீரர்களே தமிழர்களை அழிப்பார்கள்; அரசுத் தலைவர்கள் கண்மூடி நிற்பார்கள்.

எவ்வித தூண்டுதலுமற்ற இந்த வன்முறையை ஈழத் தமிழர்கள் அறவழிப் போராட்டங்கள் மூலம் சந்திக்க முயன்றார்கள். ஊர்வலங்கள் போனார்கள்; மாநாடுகள் நடத்தினார்கள்; தீர்மானங்கள் இயற்றினார்கள்; உண்ணா நோன்பு இருந்தார்கள். ஆனாலும் தமிழர்கள் பேசிய இந்த மொழி சிங்களவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் புத்தர்கள்; அறநெறி அண்ணல் புத்த பெருமானின் வழி நிற்பவர்கள்; ஆனாலும் அறவழிப் போராட்ட மொழியைப் புரிந்துகொள்வதைத் தெரிந்துகொண்டே மறுத்தனர்.

அறவழிப் போராட்டங்களுக்குப் பதில் அளிக்கும் முகமாக, வன்முறை மொழியில் சிங்களவர் பேசினர். நூலகங்களைக் கொளுத்தினர்; தமிழர்களைத் தேடித் தேடிக் கொன்றனர். அறவழி மொழியைப் புரிந்துகொள்ள மறுத்தனர்.

எந்த மொழியில் பேசினால் அவர்களுக்குப் புரியுமோ எனச் சினந்து எழுந்த ஈழத் தமிழ் இளைஞர்கள் வன்முறை வழியை நாடினர். கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கொலைக்குக் கொலை என்ற மொழியை 1971 முதலாகச் சிங்களவர்களிடம் தமிழர் பேசத் தொடங்கினர். வன்முறையின் வலிமை அடிப்படையில் அரசியல் தீர்வுக் கேட்டுத் தமிழர் பேசியதும் சிங்களவர் புரிந்துகொண்டனர்.

சிங்கள அரசும், அதன் முப்படையும், முப்படைத் தலைவருமான ராஜபக்சேவும் புரிந்துகொள்ளும் ஒரே மொழி துப்பாக்கிக் குண்டு மொழி. எனவே அவர்களே தமிழர்களோடு அந்த மொழியில் தான் பேசுகின்றனர்.

இந்தியக் குடிமக்களின் வரிப்பணத்தில் இயங்கும் இந்தியக் கடலோரக் காவற்படை இதுவரை தமிழகக் கடல் எல்லைக்குள் வந்த சிங்களக் கடற்படையை விரட்டியதாக, எச்சரித்ததாக, சுட்டதாக வரலாற்றுப் பதிவே இல்லை. 25 ஆண்டுகளுக்கு மேலாக வட கடலிலும் தென் கடலிலும் இந்தியக் கடலோரக் காவற்படை நிலைகொண்டுள்ளது.

கடலிலும் கரையிலும் சமகாலத்தில் பயணிக்கக்கூடிய ஊவர் படகு போன்ற மிக நவீன கப்பல்களைக் இந்தியக் கடலோரக் காவற்படை வைத்திருக்கிறது. இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளித் தளத்திலிருந்து பறந்து சென்று கண்காணிக்கும் விமானங்களை வைத்திருக்கிறது. கடல் மட்டத்திலும் நிலத்திலும் வான் வெளியிலும் நடமாடக்கூடிய நகர்வன அனைத்தையும் கண்காணிக்கக்கூடிய ஊடுருவும் கதிர்க் கருவிகளை வைத்திருக்கிறது.

இவற்றிக்கு உதவியாக, விண்ணில் இருந்து கண்காணிக்கும் செய்மதிகள் தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கின்றன. இத்தகைய அதிநவீன வானூர்திகளையும் கப்பல்களையும் கருவிகளையும் இந்தியக் கடலோரக் காவற்படை வாங்குவதற்குத் தமிழக மக்களும் வரிப்பணம் கொடுக்கிறார்கள்.

ஆனாலும் தமிழகக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்களை அந்நியப் படை வந்து வாரந்தோறும் குருவிகளைச் சுடுவது போல் சுட்டுக் கொல்கிறது. நாளொன்றுக்குப் பல கோடி ரூபாய்களைச் செலவுக்காக விழுங்கும் இந்தியக் கடலோரக் காவற்படையினால் இந்தியக் குடிமக்களைக் காக்க முடியவில்லை. கேட்டால், இலங்கைக் கடற்படையோடு தொடர்பாக இருக்கிறோம், காலத்துக்குக் காலம் இணைப்புக் கூட்டங்களை நடத்துகிறோம், தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.

இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடலோரக் காவற்படையும் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன என்றால், தமிழக மீனவர்களைக் கண்ட இலங்கைக் கடற்படை முதலில் தகவலைத் தெரிவிக்க வேண்டியது இந்திய கடலோரக் காவற்படையிடம் அல்லவா?

தமிழகப் படகுகள் சந்தேகத்திற்கு இடமான முறையில் இன்ன இன்ன இடங்களில் நடமாடுகின்றன; அவர்களைத் திருப்பி அழையுங்கள் அல்லது சோதனைக்கு உள்ளாக்குங்கள் என்று இலங்கை கடற்படைத் தளபதி தன்னோடு இணக்கமாக இருக்கும் இந்தியக் கடலோரக் காவற்படைத் தளபதியிடம் சொல்ல வேண்டாமா?

இலங்கைக் கடற்படையினர் அவ்வாறு சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சட்டம் ஒழுங்கைப் பேணும் இயல்பான மொழியைப் பேசுபவர்கள் அல்ல சிங்களக் கடற்படையினர். தமிழர்களைக் கண்டாலே குண்டு மழையைப் பொழிந்து துப்பாக்கி மொழியைப் பேசி, தமிழர்களை அழித்துவிட வேண்டும் எனத் தமக்குத் தாமே சட்டம் இயற்றி வைத்திருப்பவர்களே அவர்கள்.

இணக்க நடைமுறைகள் அவர்களுக்குத் தெரியாது. உடன்பாடுகளை எழுதுவதும், ஒப்பமிட்ட மை காயும் முன்பே, அந்த உடன்பாடுகளைக் கிழித்தெறிவதும் அவர்களுக்குக் கைவந்த கலை. அவர்களுக்குத் தெரிந்த ஒரே மொழி, துப்பாக்கி மொழி. அவர்களுக்கு தெரிந்த ஒரே விதி, தமிழர்களை அழித்து ஒழிக்க வேண்டும் என்ற விதி.

தமிழர்கள் இளிச்ச வாயர்கள்; பயந்தாங்கொள்ளிகள்; என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்வார்கள். அவர்களை அச்சுறுத்தலாம், மிரட்டலாம், விரட்டலாம், கொள்ளையடிக்கலாம், சூறையாடலாம், அடித்துக் காயப்படுத்தலாம், கொலையே செய்யலாம். இந்தச் சொல்லாட்சிகளே அவர்கள் மொழியில் இருக்கின்ற ஒரே ஒரு தொகுப்புச் சொல்லாட்சிகள். வேறு சொல்லாட்சிகள் அவர்கள் மொழியில் இல்லை.

இந்தியர்களே, தமிழர்களே, பொறுத்தது போதும் என்ற தொடரை அடுத்து என்ன சொல்வீர்கள்? பொங்கி எழுவோம் என்றுதானே சொல்வீர்கள்? எந்த மொழியை இலங்கை அரசும் அதன் கொடூரப் படையும் புரிந்துகொள்ளுமோ, அந்த மொழியில் பேசுங்கள்.

வடகடலிலும் தென்கடலிலும் தமிழகக் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமைகளை 2000 ஆண்டுக்கு முற்பட்ட பட்டினப் பாலை கூறியது; நேற்று வந்த மகாகவி பாரதியும் கூறிச் சென்றார். பராம்பரீயம் மிக்க இந்த மீன்பிடி உரிமைகளும் புனிதமானவை. தமிழக மீனவர்களின் உயிர்களும் உடைமைகளும் புனிதமானவை.

மத்திய கிழக்கிற்குப் பணிப்பெண்கள் செல்வதை நிறுத்த விசேட திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளுக்குத் தொழில் புரியச் செல்லும் பணிப்பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் கணிசமான அளவு குறைத்துவிடத் திட்டமிடப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்; தெரிவித்தது.

அதற்கு மாற்றீடாக நன்கு பயிற்றப்பட்ட ஆண், பெண் தொழிலாளர்களை கனடா, அவுஸ்திரேலியா போன்ற மேற்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்காக அனுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பணியகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தால் நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை யொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்கவே மேற்படி தகவலைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது:-

“இலங்கை நாட்டவர்கள் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கே தொழில் தேடிச் செல்கின்றனர். அங்கு செல்கின்ற வீட்டுப் பணிப்பெண்கள் அதிக துன்பங்களை எதிர்நோக்குகின்றனர். அவர்கள் வேலை செய்யும் வீடுகளில் நடக்கும் கொடுமைகள் வெளியில் வருவதில்லை.

பிரச்சினைகளுக்குள்ளாகும் அதிகமான பணிப்பெண்கள் தினமும் அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் தஞ்சம் புகுகின்றனர்.

இந்த நிலையைத் தடுத்து நிறுத்தி பயிற்றப்பட்ட ஆண்ää பெண் தொழிலாளர்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் தொழிலாளர்கள் நல்ல நிலையை அடைவர்.

அதன் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையை ஐந்து வருடங்களுக்குள் குறைத்துவிட நாம் தீர்மானித்திருக்கிறோம்.

மாறாக, பயிற்றப்பட்ட தொழிலாளர்களை மேற்கத்தேய நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் அதிகளவு வேலை வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.”

இலங்கை கடற்படையினரால் 80 இந்திய மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சுமார் 80 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை தாக்கப்பட்டதாக தமிழகத்தின் ராமேஸ்வர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1974 ஆம் ஆண்டு இந்தியாவினால் இலங்கைக்கு பொறுப்பளிக்கப்பட்ட கச்சத்தீவு பகுதியில் இந்த 80 மீனவர்களும் 20 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருக்கையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்ள்ளது.

இதன் போது பல மீனவர்கள் இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பிப்பதற்காக கடலில் குதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணித்தியாலங்களின் பின்னரே இவர்களை நீந்தி கரையை வந்தடைந்ததாக ராமேஸ்வர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல்களை கண்டித்து கடந்த ஒரு மாதக்காலமாக மீனவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர் இந்திய மத்திய அரசாங்கத்தின் உறுதிமொழியை அடுத்தே தொழிலுக்கு திரும்பினர். இந்தநிலையிலேயே இன்று இந்த தாக்குதலை இலங்கை கடற்படையினர் நடத்தியுள்ளனர்.

மகிந்தவின் சாக் கொண்டாட்டம் தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் படி 500 பேருக்கு சாக் சாப்பாடு, மது வகைகளுக்கு தனிக்கணக்கு

மகிந்தவின் சாக் கொண்டாட்டம் தலைக்கு 10 ஆயிரம் ரூபாய் படி 500 பேருக்கு சாக் சாப்பாடு, மது வகைகளுக்கு தனிக்கணக்கு

இலங்கை மக்களின் வரிப்பணத்திலிருந்து 2880 மில்லியன் ரூபாய்கள் சாக் களியாட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது வெளிவிவகார அமைச்சின்வீண் விரயம் இந்நிலையில் சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு இரவு விருந்துபசாரமொன்று வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

இரவு விருந்துபசாரத்தின்போது ஒருவரது உணவுக்காக 10 ஆயிரம் ரூபாவை செலவிடுகின்றது. அத்துடன் மகிந்தவின் சகோதரரால் தலைக்கு 4000 ரூபாய் படி 200 பேர் தனிப்பட்ட விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்

400 invitees at the BMICH (Committee Room A)

வண்ண ஒளியமைப்பு மற்றும் ராக் இசைக்காக 2.5 மில்லியன் செலவு

100 வெளிநாட்டு அமைச்சர்களின் செயலாளர்களுக்கு 10 நாட்களுக்கு சின்னமன் கிராண்ட் மற்றும் ட்ரான்ஷ் ஏசியா விடுதிகளில் தங்குவதற்காக 10 மில்லியன் செலவு

certain ministers and government top bureaucrats are trying to grab a lion’s share for throwing dinner parties and other extravaganza paying exorbitant rates.

அது மட்டுமல்லாமல் இவ்விருந்துபசார நிகழ்வுக்கான ஆடம்பர செலவாக 25 மில்லியன் ரூபாவை செலவிடுகின்றமை ஏற்றுக்கொள்ள முடியாத பாரதூரமான விடயமாகும். இது எமது நாட்டுக்கு ஏற்றதான விடயமல்ல.

பொது மக்களின் பணத்தை கண்ணை மூடிக் கொண்டு விரயமாக்கும் அரசாங்கம் பொது மக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்.

கொழும்பு நகரத் தமிழ் வர்த்தகர்களுக்குத் தொலைபேசி அச்சுறுத்தல்கள்: பிரதி அமைச்சர் இராதாகிருஷ்ணன்


கொழும்பு நகர வர்த்தகர்களுக்குத் தொலைபேசிகள் மூலம் விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்துத் துரித நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதியமைச்சர் பீ இராதாகிருஷ்ணன் காவல்துறை மா அதிபரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

கொழும்பு நகர வர்த்தகர்கள் தமக்கு அண்மைக் காலமாக அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதியமைச்சரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கவனஞ் செலுத்துவதாகக் காவல்துறை மா அதிபர் உறுதி அளித்துள்ளதாகப் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 6 ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருபத்தைந்துதினங்கள் நடைபெறவுள்ளது.

உற்சவத்தையொட்டிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ. சரவணபவ தெரிவித்துள்ளார்.

முக்கிய உற்சவமான மஞ்சத்திருவிழா 15 ஆம் திகதியும், கைலாசவாகன திருவிழா 25 ஆம் திகதியும் சப்பரத்திருவிழா 28 ஆம் திகதியும் இடம்பெறும். தேர் உற்சவம் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் மறுநாள் தீர்த்தோற்சவமும் இடம்பெறும்.

மணலாற்றில் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலில் பெல் 212 ரக உலங்கு வானூர்தி கடும் சேதம்

மணலாற்றுப் பகுதியில் சிறிலங்காப் வான் படையினருக்குச் சொந்தமான பெல் 212 ரக உலங்கு வானூர்தி ஒன்று விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி எறிகணையில் சிக்கி கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மணலாற்றுப் பகுதியில் இடம்பெற்ற மோதல்களின் போது காயமடைந்த படையினரை அநுராதபுர மருத்துவமனைக்கு ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட்ட இந்த உலங்கு ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகிய பெல் 212 ரக உலங்கு வானூர்தி அவரச அவசரமாக அநுராதபுர வான்படைத் தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறீலங்காப் படையினர் கருத்துச் சொல்வதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிறீலங்கா வான்படையினரிடம் பெல் 212 ரக உலங்கு வானூர்திகள் இரண்டே இருந்துள்ளன. அதில் ஒன்றே விடுதலைப் புலிகளின் ஆட்டிலறித் தாக்குதலுக்கு உள்ளாகி பயன்படுத்த முடியாத அளவுக்கு கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

கடவத்த வாவியிலிருந்து இரு எலும்புக்கூடுகள் மீட்பு

தென்னிலங்கையில் வாவி ஒன்றிலிருந்து எலுக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. கடவத்த வாவியினுள் மீன்பிடியில் ஈடுபட்ட கடற்தொழிலாளர்கள் தங்களது வலையில் சிக்கிய உரைப்பையை திறந்து பார்த்ததில் இரு எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஐந்து முனைகளில் இராணுவம் முன்னேறுகிறது; புலிகளுக்கு இது புது அனுபவம் - 'பொட்டொம் லைன்' களநிலைவர அறிக்கை

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் இலங்கை இராணுவத்தினர் ஐந்து முனைகளினூடாக முன்னேறி வருவதாக கொழும்பு ஆங்கில வார இதழொன்றின் செய்தியாளர் ருவான் வீரக்கோன் தகவல் வெளியிட்டுள்ளார்.

பொட்டொம் லைன் வார இதழில், களமுனையிலிருந்து அறிக்கையிடப்படுவதாகக் கூறி வெளியிடப்பட்டுள்ள விசேட களநிலைவர அறிக்கையிலேயே இந்த விபரத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

4ஆவது ஈழப்போர் என்று வர்ணிக்கப்படும் இந்தச் சண்டையில் இராணுவத்தினர் ஐந்து முனைகளில் முன்னேறி வருவதாகவும், இதற்கு முன்னர் இத்தகையதொரு நடவடிக்கைக்குப் புலிகள் முகம் கொடுத்ததில்லை எனவும் ருவான் வீரக்கோன் என்ற அந்தச் செய்தியாளர் தனது களமுனை ஆய்வில் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயசிக்குறு படை நடவடிக்கையைத் தவிர, முதலாம், 2ஆம், 3ஆம் ஈழப்போர்களில் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் படை நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஒரு முனையினூடாகவே முன்னேறியதாகக் குறிப்பிடும் அவர், இதனால், புலிகளும் ஒரே முனையில் தமது பலத்தைத் திரட்டி இராணுவத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்கக்கூடியதாக இருந்ததாகவும் தனது அறிக்கையில் ருவான் குறிப்பிடுகிறார்.

வன்னிவிளாங்குளத்தைக் கைப்பற்றிய இராணுவத்தினரின் 57ஆவது படைப்பிரிவைச் சேரந்த 571, 572 மற்றும் 573ஆவது விசேட பிரிகேட் அணிகள், மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்களை நோக்கி தந்திரோபாய முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அவர் தனது அறிக்கையில் விபரிக்கிறார்.

இதுதவிர, ஏ-9 வீதியின் கிழக்குப் பக்கமிருந்து இரண்டாவது அதிரடிப்படைப் பிரிவும், மன்னாரின் வடபகுதியிலிருந்து 58வது படைப்பிரிவும், வெலி ஓயாவிலிருந்து முல்லைத்தீவை நோக்கி 59ஆவது படைப்பிரிவும் முன்னேறி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பகல் வேளையில் மட்டுமல்லாமல் இரவு வேளைகளிலும் கூட படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக களமுனையில் நிற்கும் படையினர் தன்னிடம் தெரிவித்ததாகக் குறிப்பிடும் அந்தச் செய்தியாளர், படையினர் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து காடுகளுக்குள் மறைந்திருந்து தாக்கும் உத்திகளைக் கடைப்பிடித்து வருவதாகவும் விபரித்துள்ளார்.

“இராணுவத்தினர் இப்போது முன்னணி பாதுகாப்பு நிலைகளைக் (Forward Defensive Lines)கொண்டிருப்பதில்லை. பதிலாக, முன்னணி தாக்குதல் நிலைகளையே கொண்டிருக்கின்றனர்;(Forward Offensive Lines)” என்று களமுனையிலிருக்கும் மூத்த அதிகாரியொருவர் தன்னிடம் தெரிவித்ததாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிடுகிறார்.

தற்போதைய படை நடவடிக்கையில் மாங்குளம் பிரதான மையமாக விளங்குவதாகக் குறிப்பிடும் ருவான், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய இரண்டு பிரதான நகரங்களுக்குமான பாதைகளின் மையமாக மாங்குளம் விளங்குவதால் அதைக் காப்பாற்றுவதற்கு புலிகள் கடும் பிரயத்தனம் எடுப்பார்கள் என்றும் விபரித்துள்ளார்.

மல்லாவி, துணுக்காய், மாங்குளம் ஆகிய பிரதேசங்கள் கைப்பற்றப்பட்டுவிட்டால் அதன் பின்னர் கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கு சுமார் 20 - 25 கிலோ மீற்றர்களே இருப்பதாகவும் ருவான் வீரக்கோன் தனது களமுனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானியாவில் புதிய விதிமுறைகள் அறிமுகம்

பிரித்தானியாவிலுள்ள கல்லூரிகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக பிரித்தானிய உள்விவகார அமைச்சு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கமைய உள்விவகார அமைச்சின் கீழ் செயற்படும் எல்லை முகவர்கள் மூலம் வழங்கப்படும் அனுமதியைப் பெற்ற கல்லூரிகள் மாத்திரமே வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுமதி வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை முகவர்களின் அனுமதிபெற்ற கல்லூரிகள் தமது கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்ளும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அனுசரணை வழங்க வேண்டும் எனவும், கல்வி நிலையங்கள் தமது நேர்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் காட்டவேண்டும் எனவும் பிரித்தானிய உள்விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குடிவரவு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்தின் ஒரு அங்கமாக, பிரித்தானியாவில் கல்வி கற்பதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் போதியளவு புள்ளிகளைப் பெற்றால் மாத்திரமே விண்ணப்பிக்க முடியும் என்ற புதிய விதிமுறையும் அமுல்படுத்தப்படவுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டு, உயிரளவை கொண்ட அடையாள அட்டைகளும் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய அனுமதி முறை அடுத்த வருடம் முதல் அமுலுக்கு வரும் எனவும், புத்தாக்கல் திறன் மற்றும் பல்கலைக்கழகங்கள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே பதிவுசெய்திருக்கும் கல்விப் பயிற்சி வழங்குனர்களின் பதிவுகள் மீளப்புதுப்பிக்கப்படவிருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

போலியான கல்வி நிலையங்களை நீக்குவது தொடர்பான சட்டம் கடந்த 2004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் அது நடைமுறையில் இல்லையெனவும் கூறப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட 2000 கல்லூரிகளில் 2005ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 256 கல்லூரிகள் குறித்துக் கண்காணிக்கப்பட்டிருப்பதாகவும், இவற்றில் 124 கல்லூரிகள் பாதியளவில் அல்லது முழு அளவில் செயற்படமுடியாத நிலையில் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பிரித்தானியாவுக்கு பாரிய நன்மைகளைப் பெற்றுக்கொடுக்கின்றபோதும், நல்ல மாணவர்களே தமக்குத் தேவைப்படுவதாக புதிய நடைமுறை தொடர்பாகத் தெரிவிக்கும் அறிக்கையில், பிரித்தானிய உள்விவகார மற்றும் குடிவரவுத்துறை அமைச்சர் லியாம் மைரென் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் இந்தப் புதிய விதிமுறைகளை கல்லூரிகள் வரவேற்றிருப்பதாக பி.பி.சி. செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், பிரித்தானியாவில் கல்விபயில விண்ணப்பிக்கும் மாணவர்களின் கல்வி தொடர்பான பதிவுகள் உன்னிப்பாக பரிசீலிக்கப்பட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதுடன், அனுசரணையாளரின் விபரங்களும் முழுமையாக வழங்கப்பட வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு வயற்பகுதியில் விவசாயி துப்பாக்கிச் சூட்டினால் படுகாயம்

காரைதீவு வயல் பகுதியில் விவசாயி ஒருவருக்கு துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாகச் சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனைக்குடியைச் சேர்ந்த முகம்மட் சித்தீக் (வயது 52) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கிலக்காகிப் படுகாயமடைந்துள்ளார்.

மேற்படி நபர் வயலுக்குச் சென்று கொண்டிருக்கையில் இனந்தெரியாத ஆயுததாரிகள் இத்துப்பாக்கிச் சூட்டை நடாத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது.

அவர் ஓட்டிச் சென்ற மோட்டர் சைக்கிளும் துப்பாக்கிதாரிகளினால் அபகரிக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியவர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்.

அரியாலை கிழக்கு செம்மணிப் பகுதியிலிருந்து மனித எச்சங்கள் மீட்பு- பொலிஸ் பேச்சாளர்

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்கு, செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியேட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

அரியாலை கிழக்கு, செம்மணிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த டனிஷ் அமைப்பினர் குறிப்பிட்ட இடத்திலிருந்து மனித எச்சங்களைக் கண்டுபிடித்துள்ளனர். எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து சாவிக் கோர்வைகள் மற்றும் உக்கிய நிலையிலான ஆடைகள் மீட்கப்பட்டதாக அவர் இன்று வியாழக்கிழமை கூறினார்.

கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு யாழ் மாவட்ட நீதவான் வசந்தசேனன் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் இன்று பிற்பகல் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர்.

பெண் ஒருவரின் எலும்புக்கூடுகளே மீட்கப்பட்டதாக ஆரம்பகட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், மீட்கப்பட்டிருக்கும் எலும்புக்கூடு தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. ஏ-9 வீதியிலிருந்து மிகவும் அருகாமையிலேயே இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்பொழுது எலும்புக்கூடு மீட்கப்பட்ட பகுதியிலிருந்து 400 மீற்றர் தொலைவில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோரஸ்ட் நிறுவனமும் மனித எச்சங்களை அண்மையில் கண்டெடுத்திருந்தாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

1996ஆம் 97ஆம் ஆண்டு காலப் பகுதியில் செம்மணிப் பகுதியிலிருந்து பல எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் சிறியரக ஆயுதங்களைப் பயன்படுத்தியும் தாக்குதல்களைத் தொடர்வார்கள்- வெளிவிவகார அமைச்சின் செயலாளர்

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக முழுமையாக வெற்றிகொள்ளும் காலம் நெருங்கிவருகின்றபோதும், விடுதலைப் புலிகள் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் சிறியரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களைத் தொடர்ந்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹண தெரிவித்துள்ளார்.

“விடுதலைப் புலிகளை முற்றாகத் தோற்கடிப்பது இறுதித் தீர்வாக அமையாது. ஏனெனில் அந்த அமைப்பு மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தும்” என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் கொஹண கூறினார்.

“இது எமக்குத் தொடர்ந்தும் பிரச்சினையாகவே இருக்கும்” என அவர் குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது நாளாந்தம் வான்தாக்குதல்கள் மற்றும் கடல்மார்க்கமான தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிவரும் நிலையிலேயே பாலித கொஹண இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பதாக ரொய்ட்டர்ஸ்; செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு வருடத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பகுதிகளையும் இழந்துவிடுவார்கள் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்தமாதம் கூறியிருந்தார்.

எனினும், தற்பொழுது இராணுவத்தினர் முன்னெடுத்திருக்கும் இராணுவ நடவடிக்கைகளிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காக வெடிகுண்டுகள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களால் தாக்கிவிட்டு ஓடும் நடைமுறையை விடுதலைப் புலிகள் கடைப்பிடிக்கலாம் எனவும் ரொய்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் பாலித கொஹண எச்சரித்துள்ளார்.

“எனவே, இராணுவ மற்றும் அரசியல் ரீதியான அணுகுமுறைகளை உள்ளடக்கிய வழியின் மூலமே பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாங்கள் முயற்சிக்கின்றோம். விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற குழுவினர் கிழக்கில் தேர்தலில் வெற்றிபெற்று அரசியலில் ஈடுபட்டுள்ளனர். எனவே, வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை கொலைகளில் செலவுசெய்யாமல் பயனுள்ள வகையில் செலவுசெய்யுமாறு வடக்கிற்கு செய்தியொன்றை நாங்கள் அனுப்பியுள்ளோம்” என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

மோதல்களால் சேதமடைந்த இலங்கையின் வடபகுதியை புனரமைப்பதில் வெளிநாடுகள் பாரிய பங்களிப்பைச் செய்துவருவதாகத் தனது செவ்வியில் குறிப்பிட்ட பாலித கொஹண, 26 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி இதற்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆட்கடத்தல்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லையென முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் பல மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பானவை எனவும், இவற்றில் ஒரு பகுதி மாத்திரமே உண்மை எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொய்ட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியில் மேலும் தெரிவித்தார்.

சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது தொடர்பில் இலங்கை கவனம் செலுத்துதாம்

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சிறிய அணுமின் உற்பத்தி ஆலைகளை அமைப்பது கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக் இந்தியாவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையில் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து சில நாடுகள் இது குறித்து கவனம் செலுத்தி வருகின்றன.

சிறிய ரக அணுமின் உற்பத்தி ஆலைகளின் மூலம் நாட்டின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய சில நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. இலங்கை???, துருக்கி, இந்தோனேசியா, மலேசியா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள் அணு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைகளை சில நாடுகள் இந்திய அணு நிறுவனத்திடம் ஏற்கனவே விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவுடன் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் குறைந்த செலவில் சிறிய ரக அணு மின் உற்பத்தி ஆலைகள் அமைப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக பல நாடுகள் எதிர்வு கூறியுள்ளன.

கொழும்பு வரும் மன்மோகன் சிங், முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை

கொழும்பில் நடைபெறும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்கு இலங்கை வரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கட்சித் தலைவர் ரவூவ் ஹக்கீம் தலைமையிலான நால்வர் அடங்கிய குழு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திக்கவிருப்பதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் ஹசன் அலி, கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்தார்.

இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை, இந்தியப் பிரதமருக்கு விளக்கிக்கூற எதிர்பார்த்திருப்பதாகவும், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஊடாக இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வொன்றை முன்வைப்பதன் அவசியத்தை மன்மோன் சிங்குடனான சந்திப்பில் வலியுறுத்தவிருப்பதாகவும் ஹசன் அலி கூறியுள்ளார்.

“இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு இருக்கவேண்டும். இரண்டு இனங்களிலும் பெறுமதியான உயிர்கள் இழக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் முடிவொன்றை எதிர்பார்த்துள்ளனர். மக்களைப் பாதுகாப்பதற்கு யாராவது முன்வரவேண்டும்” என முஸ்லிம் காங்கிரசின் பொதுச் செயலாளர் அந்த ஊடகத்திடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

13வது திருத்தச்சட்டமூலத்துக்கு மேலான தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டிருக்கும் ஹசன் அலி, கிழக்கு மாகாணத்தில் தற்பொழுது தோன்றியிருக்கும் நிலைமைகள் குறித்தும் மன்மோகன் சிங்கிற்கு எடுத்துக்கூற எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதேநேரம், இலங்கை வரும் இந்தியப் பிரதமரைச் சந்திக்கவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளனர்.

இதேவேளை, இலங்கை வரும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனைச் சந்திப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென கொழும்பு தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வரும் இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில், கிழக்கு மாகாண முதலமைச்சருடனான சந்திப்புக் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லையெனவும், பிள்ளையானை மன்மோகன் சிங் சந்திப்பதற்கு அரசாங்கத்திலிருக்கும் சிலர் விரும்பவில்லையெனவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உண்மைக்குப் புறம்பான தகவல்களை வழங்கிய காவற்துறை அதிகாரி – நீதிமன்றம் தண்டனை

கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட காவற்துறைப் பொறுப்பதிகாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொலை முயற்சி மேற்கொண்ட குற்றச் சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகபர் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை குறித்த காவற்துறை உத்தியோகத்தர் நீதிமன்றில் தெரிவித்ததாகக் குறிப்பிடப்படுகிறது.


புத்தளம் பிரதேச பிரபல அரசியல்வாதியின் நண்பர் ஒருவரை கைது செய்யாது நீதிமன்றிற்கு குறித்த உத்தியோகத்தர் பொய்த் தகவல்களை வழங்கியுள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதவான் காவற்துறை உத்தியோகத்தருக்கு ரொக்கப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவ அரசு முன்வரவேண்டும்: அமைச்சர்கள் குழுவிடம் மன்னார் ஆயர் வேண்டுகோள்

உக்கிரமடைந்திருக்கும் மோதல்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சமய விவகாரங்கள் அமைச்சர் பந்து பண்டார தலைமையில், அமைச்சர்களான மில்ரோய் பெர்னான்டோ, பீலிக்ஸ் பெரேரா, திஸ்ஸ கரலியத்த, ஜயதிஸ்ஸ திசேரா மற்றும் சரரணவந்த ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை மன்னார் சென்று மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.

மடு மாதா ஆலயத்தின் பிந்திய நிலைவரம் குறித்து அமைச்சர்கள் குழு கேட்டறிந்துகொண்டதாக மன்னார் ஆயர் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்கும் இடையிலான மோதல்களால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும், அவர்கள் தங்குவதற்கு கூட இடமின்றி மரங்களின் கீழ் தங்கியிருக்கும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர்களிடம் தான் சுட்டிக்காட்டியதாக மன்னார் ஆயர், பி.பி.சி. செய்திச் சேவைக்குக் கூறியிருந்தார்.

அவர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் தங்குமிட வசதிகளை மேற்கொள்ளவேண்டும் எனவும், இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் அரசசார்பற்ற நிறுவனங்களை அரசாங்கம் தடைசெய்யக் கூடாதெனவும் அமைச்சர்கள் குழுவிடம் கோரிக்கை விடுத்ததாக இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்திருந்தார். இடம்பெயர்ந்தவர்களுக்கான உரிய உதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர்கள் உறுதிமொழி வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுத்தசூனியப் பிரதேசமாக இரு தரப்பும் உறுதிமொழி வழங்கினாலே மடு உற்சவத்தை நடத்த முடியும்

மடுப் பிரதேசத்தை இராணுவத்தினர் கைப்பற்றிய பின்னர் அதனைப் புனரமைத்து தம்மிடம் ஒப்படைக்க இராணுவத்தினர் முன்வந்துள்ள போதும், விடுதலைப் புலிகளும், இராணுவத்தினரும் மடு தேவாலயம் அமைந்திருக்கும் பகுதியை யுத்தசூனியப் பிரதேசமாக ஏற்று அந்தப் பகுதியில் மோதல்கள் இடம்பெறாதென பாதுகாப்பு உறுதிமொழி வழங்கினாலே ஆகஸ்ட் மாத உற்சவத்தை நடத்தமுடியும் என அமைச்சர்கள் குழுவிடம் எடுத்துக் கூறியதாக மன்னார் மறைமாவட்ட ஆயர் பி.பி.சி.க்குக் கூறியிருந்தார்.

எனினும், மடு தேவாலயப் பகுதியின் பாதுகாப்பை இராணுவத்தினர் உறுதிப்படுத்தியுள்ளபோதும், இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருப்பதாக ஆயர் குறிப்பிட்டார்.

இதேவேளை, மடு மாதா தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளுக்கென அமைச்சர்கள் குழு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் 5 இலட்சம் ரூபா நிதியையும் கையளித்துள்ளது.

Wednesday, 30 July 2008

அண்ணன் ஆனந்தசங்கரிக்கு யு.எஸ்.ஏ. யில் ஓய்வெடுப்பதற்கு ஓர் பொன்னான வாய்ப்பு!


அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு,

நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஆகையால், தங்களின் மன ஆறுதலுக்காக, இந்தப் பதிலையும் ஆலோசனைகளையும் தெரிவித்து எழுதியுள்ளோம். இது தங்களுக்கு உகந்த ஆலோசனையாக இருக்கும் என்ற நிறைவுடன் இதை எழுதுகின்றோம்.

ஐயா, நீங்கள் பல கடிதங்களை எழுதி சிங்களப் பத்திரிகைகளுக்கும் கூலிக்கு வேலை செய்யும் சில ஊடகங்களுக்கும் அனுப்பிவைக்கிறீர்கள். பல தடவைகளில் உங்கள் கடிதங்களை சிங்கள மக்கள் பாராட்டியுள்ளார்கள்.

“நாட்டையும் மக்களையும் அழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளேன்” என்று (28-07-2008) ஆரம்பித்துள்ளீர்கள் உங்கள் கடிதத்தில் யாரால் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளீர்கள் என்று குறிப்பிடவில்லை.

ஜனாதிபதி ராஜபக்சே உங்களை அழைத்து கடிதம் எழுதும்படி நிச்சயமாக கட்டாயப்படுத்தியிருக்கமாட்டார். உங்களால் யாருக்குமே எந்தப்பயனும் இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் இப்போது பயன் கிடைப்பதாக அறிகிறோம்.

கடிதம் எழுதுவதுதான் தங்களது இப்போதைய தொழில். பல கடிதங்கள் எழுதியதும் ஐரோப்பாவுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு வருவது இப்போது தாங்கள் கடைபிடித்து வரும் புதிய கொள்கையாக உள்ளது.

முன்னர் உலகெமெல்லாம் சுற்றிவரும் “உலகம் சுற்றும் வாலிபனாக” இருந்தீர்கள். இப்போது வெறும் ஐரோப்பாவை மட்டும் சுற்றிப்பார்க்கிறீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை நழுவ விடக்கூடாது. இனி ஒரு வாய்ப்பு இதுபோல் அமையப் போவதில்லை. இந்த வாய்ப்பு ஆண்டவனுக்கு அடுத்தபடியானவரால் ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இதனை இறுகப் பற்றிக்கொள்ளவும்.

கடைசிக் காலத்தில் கிடைப்பதைச் சுருட்டிக் கொள்வோம் என்ற கொள்கையில் உறுதியாக இருக்கிறீர்கள். உங்களுக்கு நாங்கள் அறிவுரை கூறினாலும் எருமை மாட்டில் நல்ல தண்ணீரை ஊற்றியது போன்று எடுத்துக் கொள்வீர்கள். அதனால் பயன் ஒன்றும் ஏற்படபோவதில்லை.

ஆயினும் செய்தித் தாள்கள் மூலம் தங்களை, “சிறந்த நியாயவாதி” போன்று காண்பிப்பதுதான் எங்களை பதிலளிக்கத் தூண்டுகிறது. இந்தப் பதிலுக்காக சிறிதளவு நேரத்தை வீணடிக்கவேண்டியுள்ளது.

கண்ணிவெடி, சிலிப்பர்கட்டை, விதவைப் பெண்கள், கல்வி, பொதுச்சொத்து, பிச்சைக்காரர், சிங்கள மகாவித்தியாலயம், மற்றும் வடக்கில் சிங்கள உறுப்பினர்கள் இல்லாமல் போனது ஆகிய எல்லாவற்றுக்கும் பொறுப்பு தம்பி பிரபாகரன்தான் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

தம்பி பிரபாகரனைப் பார்ப்பதற்கு கிளிநொச்சிக்குச் சென்றீர்கள் ஞாபகமிருக்கிறதா? சிலிப்பர் கட்டையிலா சென்றீர்கள்? சிங்கள மகாவித்தியாலயத்தை திறந்துவைக்கும்படி பிரபாகரனிடம் கேட்டிருக்கலாமே?

அண்ணன் ஆனந்த சங்கரி அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையும் போது யாழ்ப்பாணத்தில் எத்தனை சிங்கள உறுப்பினர்கள் இருந்தார்கள் என்று சொல்ல வேண்டும்.

அப்படியென்றால், திரு. செல்வநாயகம் அவர்களின் கோரிக்கையினால்தான் சிங்களவர் வடக்கைவிட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியாயின் செல்வநாயகம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் எதற்காக இணைந்தீர்கள்?

அப்படி இணைந்தால்தான் எம்.பி. பதவி கிடைக்கும். பதவிக்காக கூட்டணியில் சேர்ந்ததை இப்போது ஒப்புக் கொள்கிறீர்கள்!

எந்த அளவுக்கு தமிழரையும், தமிழீழத்தையும் இழிவுபடுத்தி அறிக்கை விடுகிறீர்களோ அந்த அளவுக்கு உங்களுக்கு சிங்கள அரசிடமிருந்து பல சலுகைகள் கிடைக்கும். இதுவரை நீங்கள் செய்து வந்த இரகசியத் துரோகத்தனத்துக்கு பல விமானச் சீட்டுகளையும் ராஜதந்திரிக்கான பாஸ்போர்ட்டும் சில கோடி பணமும்தான் கிடைத்துள்ளது.

அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா, கோடாரிக்காம்புகளான கருணா, பிள்ளையான் போன்ற நபர்களுக்குக் கிடைத்த அளவுக்கு பெருந்தொகை கிடைக்கவில்லை.

இதோ! மீண்டும் ஒரு பொன்னான வாய்ப்பு உங்களைத் தேடி வருகிறது.

இந்த வாய்ப்பு ஆண்டவனால் (புத்தரால்) அளிக்கப்பட்டது. இறுகப் பற்றிக்கொள்ளவும். எங்கள் ஆலோசனையைக் கேட்டு பின் வரும் கோரிக்கைகளை பிரகடனம் செய்து அறிவிப்பீர்களானால் சிங்கள மக்களும் தலைவர்களும் உங்களை எங்கேயோ கொண்டுபோய்ச் சேர்த்துவிடுவார்கள்.

(01) 1955 ஆம் ஆண்டு சிங்கள மொழியை 24 மணி நேரத்தில் ஆட்சிக்குக் கொண்டு வருவேன் என்று பண்டாரநாயக்காவை இந்தப் பிரபாகரன்தான் அறிக்கைவிட்டு தூண்டிவிட்டார்.

(02) 1958 ஆம் ஆண்டுக் கலவரம் சிங்கள மக்களால் ஏற்படுத்தப்படவில்லை. சிறி என்ற சிங்கள எழுத்தை இந்தப் பிரபாகரன்தான் தார்பூசி அழித்தார். அதனால்தான் அப்பாவியான சிங்கள மக்கள் பாதிக்கப்பட்டனர்.

(03) தமிழர்களின் பூர்விகப் பிரேதசங்களில் சிங்களக் குடியேற்றங்களைச் செய்யும்படி 1948 ஆம் ஆண்டு பிரபாகரன் அறிக்கை விட்டதனால்தான் டி..எஸ். சேனாநாயக்கா குடியேற்றங்களைச் செய்தார்.

(04) 1961 ஆம் ஆண்டு சிங்கள மொழியை இலங்கை அரசின் நிர்வாக மொழியாக்கி சிறிமாவோ பண்டாரநாயக்கா உத்தரவிட்டார். பிரபாகரன் அறிக்கைவிட்டதனால்தான் அந்த அம்மையார் அப்படிச் செய்தார்.

(05) இறுதியாக 1972 ஆம் ஆண்டு இலங்கையை தன்னிச்சையாக “சிறிலங்கா சிங்கள குடியரசு” என்று அறிவித்து நாட்டின் அரசியல் அடிப்படைச் சட்டங்களை (Constitution) சிறிமாவோ மாற்றினார். இதற்கு யார் காரணம், பிரபாகரனின் கொலைவெறிக்குப் பயந்துதான் அந்த அம்மையார் இப்படி மாற்றியமைத்தார்.

இப்படி நீங்கள் பிரகடனப்படுத்தினால் சிங்களத் தலைவர்கள் வியந்து விடுவார்கள். இப்படியான ஓர் அறிவாளியை நாம் பயன்படுத்தாது விட்டது மகாதவறு. இப்படியான உண்மையை இதுவரை யாரும் சொன்னது கிடையாது! அகிம்சாவாதிகளான சிங்கள மக்களை அயோக்கியர்கள் ஆக்கியது இந்தப் பிரபாகரன்தான் என்று உண்மையை அறிந்து விடுவார்கள்.

இதன் மூலம் இனி வருங்காலத்தில் நீங்கள் ஓய்வெடுக்க ஐரோப்பா போக வேண்டியதில்லை. யூனைடெட் ஸ்ரேற்ரில்தான் இனி ஓய்வு.

அங்கு சென்றதும் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்ற வேண்டும் என்று விண்ணப்பிக்கவும். அங்கும் பிரபாகரனின் இந்தச் சதிவேலைகளைச் சொல்லி சிங்கள மக்களை உலகின் உன்னத மக்களாக வர்ணிப்பீர்களாக!

நன்றி!

பருத்தி வேந்தன்.

களத்தில் சிறிலங்காப்படையினர் போதை மருந்துகளைப் பயன்படுத்துகின்றனர்?

களமுனைகளில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சிறிலங்காப்படையினர் போதை மருந்துகள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துவதாக களமுனைகளில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னகர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் படைச்சிப்பாய்களுக்குப் படை அதகாரிகளால் இவை வழங்கப்படுவதாக தெரியவருகிறது.

படைநகர்வுகளின் போது விடுதலைப்புலிகளின் கடுமையான முறியடிப்புத்தாக்குதல்களினால் படையினருக்கு நாளாந்தம் இழப்புக்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் படையினரை முன்னகர்வு சண்டைகளில் ஈடுபடுத்த இப்போதை மருந்து அல்லது ஊக்கமருந்துகள் படையிருக்கு வழங்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

இதே வேளை படையினரின் பிடியிலிருந்து தப்பி வந்த சில பொதுமக்களும் இச்சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அப்பகுதிகளில் நடமாடும் படையினரின் நடவடிக்கைகள் போதையில் நடப்பவர்களைப் போலவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு கல்கிஸ்ஸையில் 11 தமிழர்கள் கைது


கொழும்பு கல்கிஸ்ஸை பகுதியில், இன்று காலை 6 மணிமுதல் முற்பகல் 10 மணிவரையிலும் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது,11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

காவல்துறையினர், படையினர் மற்றும் சிவில் படையினர் ஆகியோர் நடத்திய தேடுதலின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இதேவேளை இன்று கொழும்புக்குள், பிரவேசித்த சுமார் 500 வாகனங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இதேவேளை இன்று கைதுசெய்யப்பட்டவர்களில் பலர், தமது அடையாளங்களை நிரூபிக்கத்தவறியவர்கள் என காவல்துறையினர், தெரிவித்துள்ளனார்.

1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனோர் படைமுகாமில் கொத்தடிமைகளாக ?

மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டங்களில் 1990ஆம் ஆண்டுகளில் படையினரால் கைதுசெய்யப்பட்டு காணாமல்போனதாக கூறப்படுவோரில் சுமார் 100பேர் மகரஹம பிரதேசத்துக்குட்பட்ட கோமாகம என்னுமிடத்தில் உள்ள இராணுவ முகாமில் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ளதாக அதில் இருந்து தப்பிவந்ததாக கூறும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பை சேர்ந்த இவர் தன்னுடன் இப்பகுதிகளை சேர்ந்த சுமார் 100பேர் உள்ளதாகவும் இவர்கள் அனைவரும் கடும் சித்திரவதைகளுடன் தோட்டவேலைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தான் அப்படை முகாமின் உயர் அதிகாரி ஒருவரின் வீட்டில் வேலை செய்ததாகவும் அப்போது தனது குடும்ப நிலையை அடிக்கடி அவருக்கு தெரியப்படுத்தியபோது அவர் தன்மீது கொண்ட விசுவாசம் காரணமாகவே தன்னை தப்பிச்செல்ல அனுமதித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அப்பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் குருவை அனுகி இது தொடர்பில் தெரிவித்ததாகவும் இது தொடர்பாக மீதமுள்ளோரை விடுவிக்க தான் நடவடிக்கை எடுப்பதாகவும் குறித்த குரு தன்னிடம் உறியளித்துள்ளதாகவும் குறித்த தப்பிவந்த நபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கோட்டைக்கல்லாறு பகுதிக்குவந்த குறித்த தப்பிவந்த நபர் இப்பகுதியில் காணாமல்போன ஒருவரின் வீட்டுக்கு சென்று தன்னுடன் குறித்த இளைஞனும் முகாமில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உறுதிப்படுத்த உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் முரசு இது தொடர்பில் ஆராய விளைந்துள்ளதுடன் இது தொடர்பில் அவதானம் மேற்கொண்டுவருகின்றது.

பைக்கால் ஏரியின் அடியை எட்டிய ரஷ்ய நீர்மூழ்கி

உலகின் மிகவும் ஆழமான நன்நீர் ஏரியான தெற்கு சைபீரியாவில் உள்ள பைக்கால் ஏரியின் அடிப்பாகத்தை இரண்டு சிறிய நீர் முழ்கிக் கப்பலில் சென்ற ரஷ்ய விஞ்ஞானிகள் எட்டி விட்டதாக இந்த முயற்சியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏரியின் அடிப்பாகத்தை அடைய நீர்முழ்கிக் கப்பல்கள் தரையில் இருந்து ஆயிரத்து எழுநூறு மீட்டர் தூரம் முழ்கிச் சென்றன. இந்த தூரம் முன்பு கணிக்கப்பட்டதை விட அதிகமானது.

ஆனால் இது குறித்து சுயாதீனமாக உறுதிசெய்யப்படவில்லை.

புவிப்பந்து வெப்பமடைவது குறித்து ஆவணப்படுத்துவதற்காக
புவிப்படிமானம் மற்றும் உயிரியில் ரீதியான பலவகையான சோதனைகளை மேற்கொள்ளவிருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பைக்கால் ஏரியில் இங்கு மட்டுமே காணப்படும் நூற்றுக்கணக்கான நீர் வாழ் உயிரினங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

10ம் வகுப்பு மட்டும் படித்த ராஜதந்திர அறிவில்லாத அமெரிக்காவுக்கான புதிய இலங்கை தூதுவர்

இலங்கையுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில் வைத்து அமெரிக்க ஜனாதிபதியைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமெரிக்கா இலங்கையுடன் ஆழமானதொரு பொது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இரு நாட்டு உறவுகளை மேம்படுத்திச் செயற்பட எதிர்ப்பார்ப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்காவின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனாதிபதி புஷ்ஷிடம் தெரிவித்தார்.












இதேவேளை அமெரிக்காவுக்கான இலங்கைத்த்தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜாலியவிக்கிரமசூரிய மகிந்தவின் மைத்துனர் முறையிலானவரென்றும்,10ம் வகுப்பு மட்டும் படித்த ஒரு வர்த்தகர் மட்டுமே இவருக்குரிய தகுதியென கொழும்பு வட்டாரங்கள் விமர்சிக்கின்றன.


இலங்கையின் ராஜதந்திர நிர்வாகிகளை மலினப்படுத்திய நியமனமென தெரிவிக்கின்றன.

அத்துடன் இவருக்கான ஆலோசகராக கருணாவை இலங்கை அரசுக்கு அறிமுகப்படுத்திய முன்னாள் ஜக்கிய தேசியகட்சியின் முக்கியஸ்தராகவிருந்த அலிசாகிர் மௌலானவை அமெரிக்க தூதரகபணியில் அமர்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் லாபத்திற்காக சட்டத்தை மீறியுள்ளார் ஜனாதிபதி – குற்றச்சாட்டு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் உள்ளிட்ட மூன்று சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு நுவரெலியா நீதிமன்றம் விதித்த தண்டனை தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என இ.தொ.கா தெரிவித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை தளர்த்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவிப்பதாக இ.தொ.க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், குறித்த வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்து தாம் நிரபராதிகள் என்று நிரூபிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகத் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்றைய தினம் மாலை 4.30 அளவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

எனினும் அரசியல் லாபங்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்டம் ஒழுங்கை புறந்தள்ளியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(2ம் இணைப்பு)பாலமோட்டையில் படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 12 படையினர் பலி- 16 பேர் காயம்

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

வடமேற்கு பாலமோட்டைப் பகுதியில் இன்று புதன்கிழமை முற்பகல் 10:40 மணிக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வினை முறியடிக்கும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் மாலை 6:00 மணிவரை நீடித்தது. இழப்புக்களுடன் படையினர் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.

இதில், 12 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.

விடுதலைப் புலிகளால் படையினரின் படைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மோதல் இடம்பெற்ற நடுநிலைப் பகுதிகளில் படையினரின் உடலங்கள் கிடக்கக் காணப்படுகின்றன என்று விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மெய்ப்பாதுகாவலர்மீது துப்பாக்கிச் சூடு

மட்டக்களப்பு மாவட்டதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மெய்ப்பாதுகாவலரான திவாகரன் இன்று மாலை 5.15 அளவில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்துள்ள இவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி ஐயனார் கோயில் இந்த சம்பவம், இடம்பெற்றுள்ளது.

சிங்கள புலானாய்வுத்துறையின் வலையில்?

புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

கடந்த காலங்களிலும் இதே போன்ற பல முயற்சிகளை சிங்கள புலனாய்வுத்துறை எடுத்த நிலையிலும், தோல்வியிலேயே இம்முயற்சிகள் முடிவுற்றன.

ஆனால் சில வருடங்களுக்கு முன் பிரான்ஸிலிருந்து இயங்கும் வங்குரோத்து ஊடகங்களான ரி.ஆர்.ரி வானொலி-தொலைக்காட்சி, ஈழநாடு பத்திரிகை என்பன குகநாதனினால், சிங்கள புலனாய்வுத்துறை எறிந்த பிச்சைக் காசுக்காக மண்டியிட்டது.

ஆனால் தற்போது லண்டனிலிருந்து இயங்கும் தொலைக்காட்சி ஒன்றையே சிங்கள புலனாய்வுத்துறை இலக்கு வைத்து காய்களை நகர்த்துவதாக தெரிகிறதாம்.

அண்மைய வாரங்களாக 'புலிப் புராணம்' உரத்துப் பாடும் இந்த தொலைக்காட்சி, இடையிடையே விசங்களையும் கக்கி புலத்தமிழர்களை குழப்பத்திற்கு இட்டுச் செல்லவும் முற்படுகிறதாம். ஒவ்வொரு முறையும் இவற்றை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தால், நிவர்த்தி செய்யப்படுவது போன்று சில நாட்களுக்கு மீண்டும் புலிப்புராணமாம். ஆனால் மீண்டும் வேதாளம் முருக்கை மரத்தில் ஏறி விடுமாம்.

இத்தொலைக்காட்சியானது கடந்த காலங்களில் நடுநிலையாக செயற்படுகிறோம் என்று ஆடிய நாடகமே, சிங்கள புலனாய்வுத்துறையானது தம் வலையில் வீழ்த்தலாம் என கருதியதாம்.

இவற்றுக்கு மேல் இத்தொலைக்காட்சியின் சில செய்தியாளர்கள் கொழும்பிலிருந்து செயற்படுவதால், அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்க ஆரம்பித்திருப்பதாக நம்பககரமாக தெரிகிறது.

இத்தொலைக்கட்சி நிர்வாகமோ தளம்பிய நிலையில் இருப்பதாகவும் தெரிகிறது.

எம் மக்களை கொண்றொளித்து, எமது வாழ்வாதாரங்களை நாசமாக்கி இனப்படுகொலையை நடத்தி வரும் சிங்களை ஆதிக்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்த எமக்கு இந்த தொலைக்காட்சி தேவையா?

இத்தொலைக்காட்சியின் சந்தாதாரர்களே, இத்தொலைக்கட்சி சிங்களத்தின் கைகளில் வீழ்வதை தடுக்க உங்களால்தான் முடியும். உங்கள் அழுத்தங்களை நிர்வாகத்திற்கு கொடுங்கள்.

இல்லை, அவர்களுக்கு உங்கள் மொழி புரியவில்லையாயின், நீங்கள் வெளியேறுங்கள். சமூக நலனில் அக்கறை கொண்ட ஊடகமான நெருப்பு உங்களோடு நிற்கும். இதனை தடுக்க மாட்டோமாயின், எதிர்காலத்தில் ஏனைய ஊடகங்களும் சிங்களம் விரிக்கும் சதி வலையில் வீழ்வதை தடுக்க முடியாது.

விரைவில் நெருப்பானது இத்தொலைக்காட்சியில் ஊடுருவியிருக்கும் சிங்களத்தின் கூலிகளை அம்பலப்படுத்த இருக்கிறது.

http://www.neruppu.org/index.php?subaction=showfull&id=1217283441&archive=&start_from=&ucat=1&

கொழும்புக்கு வந்த வயோதிபப் பெண்ணிடம் தாலிக்கொடி அபகரிப்பு

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு வந்த வயோதிபப் பெண்ணிடம் மிகவும் தந்திரமான முறையில் ஐந்து பவுண் எடையைக்கொண்ட தாலிக்கொடியை அபகரித்துச் சென்ற சம்பவம் அண்மையில் அளுத் மாவத்தைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

ஆட்டோ சாரதி ஒருவரே இந்த துணிகர செயலில் ஈடுபட்டவராவார். ஆமார் வீதியில் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அளுத் மாவத்தையில் தனது மகள் வீட்டுக்கு பயணித்துள்ளார்.

அளுத்மாவத்தை பொலிஸ் சந்தி தாண்டியதும் தனது நகைகளை கழற்றி தன் கைப்பைக்குள் வைத்துக்கொள்ளும்படி சாரதி தெரிவித்துள்ளார். வயோதிப மாது தன் தாலிக் கொடியை மட்டும் கழற்றி தன் கைப்பைக்குள் வைத்துக்கொணடாராம்.

பொலிஸ் சந்தி தாண்டி சென்ஜோன்ஸ் சந்தியில் ஆட்டோவை நிறுத்தி தொடர்ந்து நடந்து செல்லும்படி கூறி ஆட்டோ பயணத்துக்கான பணத்தையும் பெற்றுக்கொண்டு மறைந்துவிட்டானாம்.

வீடு வந்து மகளிடம் விபரத்தை கூறி கைப்பையை திறந்துபார்த்த போது நகையை ஆட்டோ சாரதி திருடி இருப்பது தெரியவந்ததுள்ளது.

தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு யுத்தவாதம் பிரசாரமாக கையாளப்படுகிறது -இடதுசாரி முன்னணி தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண

தேர்தல்களை வெற்றி கொள்வதற்கு யுத்தவாதம் பிரசாரமாக கையாளப்படுகின்றது. தேர்தலுக்காக யுத்தமும் யுத்தத்திற்காக தேர்தலும் என்ற நிலையே தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் யுத்த வெற்றிகள் அனைத்தும் போலியானவை. உண்மையான வெற்றியை யுத்தத்தினு}டாக பெறமுடியாது. என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

யுத்தமாக இருந்தாலும் சரி, தேர்தலாக இருந்தாலும் சரி பொதுமக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பதே உண்மை.

அரசினதும், ஜனாதிபதியினதும் ஒரேநோக்கம் தேர்தல்களை வெற்றிகொள்வது மட்டுமே. அதற்காக எதனையும் செய்ய அரசு தயாராக இருக்கிறது.

எதிர்க்கட்சிகளை வசைபாடி கள்ளவாக்குகளால் பெட்டிகளை நிரப்பி கொள்வதற்கான முன் ஆயத்தங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடையை மீறி இலங்கைத் துணை உயர் ஸ்தானிகராலயத்தை முற்றுகையிட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது

சென்னை தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து படுகொலை செய்து வருவதை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணை உயர் ஸ்தானிகராலயம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட போது அதன் தேசியச் செயலாளர் டி. ராஜா உள்ளிட்டோர்களை பொலீசார் கைது செய்தனர்.

தமிழக மீனவர்களை இலங்கை ராணுவத்தினர் தொடர்ந்து படுகொலை செய்து வருவதைக் கண்டித்தும், இதுபோன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திடக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று காலை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு முன்பாக அருகில் இருந்த மியூசிக் அகாதெமி என்ற இடத்திலிருந்து பேரணி புறப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் மற்றும் அக்கட்சியின் தேசியக் கட்டுப்பாட்டு குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு ஆகியோர் தலைமையேற்றனர்.

முற்றுகைப் போராட்டத்திற்கு பொலீசார் அனுமதிக்காததால் துணை ஸ்தானிகராலயத்திற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இப்போராட்டத்தில் வை. சிவபுண்ணியம், பத்மாவதி, கே. உலகநாதன், ராஜசேகரன் உள்ளிட்ட தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் துணைச் செயலாளர்களான சி. மகேந்திரன் மற்றும் ஜி. பழனிச்சாமி ஆகியோருடன் ஏராளமான தொண்டர்களும் ஈடுபட்டனர்

அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்களின் படுகொலை விசாரணைகளை மேற்கொள்ள பிரான்ஸ் நீதிபதி இலங்கை வருகை

அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் மூதூரில் படுகொலை செய்யப்பட்டமை குறித்த வழக்குத் தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்காக பிரான்ஸ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒருவர் இலங்கை வந்துள்ளார். தனது கண்காணிப்புக்கள் குறித்த விரிவான அறிக்கையொன்றை அவர் பிரான்ஸ் அரசாங்கத்திடம் அடுத்தமாதம் கையளிக்கவுள்ளார்.

குறித்த பிரான்ஸ் நீதிபதி, பிரான்ஸ் அரசாங்கத்தாலேயே இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இந்த மாத ஆரம்பத்தில் இலங்கை வந்திருக்கும் அவர், அனைத்து விசாரணைகளையும் நடத்திவிட்டு அடுத்த மாத இறுதிப் பகுதியில் பிரான்ஸ் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் நாடு திரும்பியதும் பிரான்ஸ் அரசாங்கத்துடனும், சர்வதேச கூட்டணிகளுடன் கூடி ஆராய்ந்து கொடூரமான படுகொலை குறித்த சர்வதேச விசாரணைகளை நடத்துவது பற்றித் தீர்மானிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அக்ஷன் பேம் பணியாளர்கள் 17 பேரினதும் படுகொலைகள் குறித்த விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருப்பதாக அக்ஷன் பேம் நிறுவனத்தின் ஊடக அதிகாரி லுசிலே கிரொஸ்ஜேன் தெரிவித்துள்ளார். விசாரணை அறிக்கையில் இலங்கை அரசாங்கம் முக்கியமானதாக இருந்தாலும் துரித விசாரணைகள் நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“பிரான்ஸ் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒருவர் தற்பொழுது இலங்கையில் விசாரணைகளை நடத்திவருகிறார். அவர் நாடு திரும்பியதும் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதற்கு பிரான்ஸ் அரசாங்கமும், அக்ஷன் பேம் நிறுவனமும் காத்திருக்கிறது” என கிரொஸ்ஜேன் கூறியுள்ளார்.

பிரான்ஸ் நீதிபதி ஒருவர் இலங்கை வந்திருப்பதை கொழும்பிலுள்ள பிரான்ஸ் தூதரகம் உறுதிப்படுத்தியிருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மூதூரில் அக்ஷன் பேம் நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்குக் குறித்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் குறித்து நம்பிக்கை இல்லையெனத் தெரிவித்து அக்ஷன் பேம் நிறுவனம் இலங்கையிலிருந்து வெளியேறியிருந்தது. இந்தப் படுகொலைகள் குறித்து சர்வதேச நீதிமன்றம் செல்லப் போவதாகவும் அந்த அமைப்பு கூறியிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை பிரான்ஸ் பொறுப்பேற்ற பின்னர் பிரான்சிற்கும், ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. அதன் பின்னரே விசாரணைகளை மேற்கொள்வதற்கு பிரான்ஸ் நீதிபதி இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

சார்க் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து ஆராயத்திட்டம்?

கொழும்பில் நடைபெறும் 15வது சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள தெற்காசிய நாடுகளின் தலைவர்கள், சார்க்கில் அங்கம்வகிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயவுள்ளதாகத் தெரியவருகிறது.

சார்க் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பில், தற்போதைய அங்கத்துவ நாடுகளிடையே கருத்துவேறுபாடுகள் நிலவுவதாகவும், இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் ஆராய முடியும் என சில நாடுகள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, சார்க் பிராந்தியத்திற்கு அயலிலுள்ள, பார்வையாளர் அந்தஸ்த்தைப் பெற்றுள்ள சில நாடுகள் சார்க் அமைப்பில் முழு அளவிலான அங்கத்துவத்தைப் பெற விரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அயல்நாடுகளை இணைத்துக்கொள்வது சார்க் சாசனத்துக்கு முரண்படாது என சில நாடுகள் கருதுகின்றபோதிலும், அவ்வாறு இணைத்துக் கொள்வது சார்க் அமைப்பின் தெற்காசியா எனும் தனித்துவத்தை அற்றுப்போகச் செய்துவிடும் என சிலர் கருதுவதாகவும் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்களது கூட்டத்தின் தலைவராக பாலித கோஹன

இதேவேளை, சார்க் மாநாட்டின் மூன்றாவது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமான வெளிவிவகார அமைச்சுக்களின் செயலாளர்களது கூட்டத்தின் தலைவராக இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹன தெரிவுசெய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில், வெளிவிவகார அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் மட்டத்தில் ஆராயப்பட்ட வறுமை ஒழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டு, வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான மாநாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தலைவர்கள் வருகை

சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும் சார்க் நாடுகளின் தலைவர்கள் எதிர்வரும் 31 ஆம், 01 ஆம் திகதிகளில் இலங்கையை வந்தடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவர்களில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாயி ஆகியோர் விசேட விமானங்கள் மூலம் ஆகஸ்ட் 01ஆம் திகதி இலங்கை வருவார்கள் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சப்மா மாநாடு இன்று ஆரம்பம்

தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (சப்மா) நான்காவது மாநாடு இன்று புதன்கிழமை மாலை கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.

'நெருக்கடியான சூழலில் பத்திரிகை சுதந்திரம்' எனும் தலைப்பில் மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், சுமார் 150 வெளிநாட்டு ஊடகவியலாளர்களும், 50 உள்ளூர் ஊடகவியலாளர்களும் பங்குபற்றவுள்ளனர்.

மாநாட்டின் இறுதி அமர்வில், சப்மாவின் செயலாளர் இம்தியாஸ் அலாமினால் கொழும்பு பிரகடனம் வெளியிட்டுவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்க்கால் ஏற்படும் நன்மைகளை ஜனாதிபதி விளக்க வேண்டும்- எதிர்க்கட்சி கோரிக்கை

நாட்டு மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்தி அதன்மூலம் பெற்றுக்கொள்ளவிருக்கும் நன்மைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கப்படுத்தவேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சார்க் மாநாடு முடிவடைந்த பின்னர் கூட்டறிக்கையை விடுக்காமல், இந்த சார்க் மாநாட்டால் இலங்கைக்கு ஏற்படப்போகும் நன்மைகளை ஒவ்வொன்றாக ஜனாதிபதி விபரிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறினார்.

மாலைதீவில் நடைபெறவிருந்த 15வது சார்க் மாநாட்டை தடுத்து நிறுத்தி, இலங்கையில் நடத்தவேண்டிய அவசியத்தை இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தவேண்டும எனவும், மக்கள் போதியளவு உணவின்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவுசெய்து சார்க் மாநாடு நடத்தப்படுவதற்கான தேவை இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் 31ஆம் திகதி 500 சார்க் பிரதிநிதிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபா செலவில் விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்திருப்பதாகவும், இதனைவிட இந்த விருந்துபசாரத்துக்கான நடனம் உள்ளிட்ட களியாட்டக்களுக்கு 25 மில்லியன் ரூபா செலவிடப்படவிருப்பதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டார்.

இதற்கு மேலதிகமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சார்க் பிரதிநிதிகளுக்கு நடத்தவிருக்கும் விருந்துபசாரத்துக்கு பெருந்தொகை பணம் செலவிடப்படவிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உயிருடன் இருப்பவர்கள், வயிற்றில் இருக்கும் குழந்தைகள் உட்பட அனைத்துக்கும் ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியுள்ள போதும், அவரால் வழங்கப்பட்ட எந்த உறுதிமொழிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லையெனவும் கிரியல்ல தெரிவித்தார்.

அதேநேரம், ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் ஆடை ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் நீடிப்பதற்கான காலம் நெருங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில், அதனை இழப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகரித்துச் செல்வதாக பாராளுமன்ற உறுப்பினர் கூறினார். இந்த அரசாங்கம் தொடர்ந்தும் 6 மாதங்கள், ஒரு வருடத்துக்கு நீடித்தால் பலர் தொழில்களை இழக்கவேண்டிய நிலையே ஏற்படும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல மேலும் கூறினார்.

இது டாக்டர் மேவின் சில்வாவின் இந்த வருட நகைச்சுவை.

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றின் அறிவிப்பால் பிரிட்டனில் உள்ள தமிழர் கடும் அதிர்ச்சி.

ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது.


அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார்.

அதாவது இனி ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் தமது நாடு கடத்தலை நிறுத்தவதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதலில் பிரிட்டனில் உள்ள சகல நீதிமன்ற முறைமைகளையும் அணுகி முடிந்த பின்னரே அதனை உறுதிப்படுத்தியே இடைக்காலத் தடை உத்தரவுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் இல்லையேல் நாடு கடத்தலை நிறுத்த முடியாது என்றும் அறிவித்துள்ளனர்.

இவ்வாறான அணுகுமுறை இருக்குமேயானால் ஏற்கனவே. தீர்ப்பு வழங்கப்பட்ட NA GV The UK என்ற வழக்கின் முடிவிற்கு எதிராக இலகுவாக மேன்முறையீட்டில் வெற்றி பெறுவதற்கு பிரிட்டன் அரசிற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக ஐரோப்பிய நீதிமன்று பதிவாளர் நாயகத்திற்கு சர்வதேச அகதிகள் அமைப்பின் இயக்குநர் ரீ. குரேலந்திரன் மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது :

'ஏற்கனவே, முன்னணி வழக்குத் தீர்ப்பான NA வழக்கில் பிரிட்டிஷ் அரசு, குடிவரவு நீதிபதிகள் உயர் நீதிமன்றம் ஆகியவை கடைப்பிக்கும் அணுகுமுறையை விலாவாரியாக ஆராய்ந்துள்ளீர்கள். இந்நிலையில், தமிழ் அகதிகள் வீணான செலவுகளை விரயம் செய்வதனைத் தவிர அதனால் பலன் இல்iலை என்பதனை உணர்வீர்கள்.

புதிய விண்ணப்ப முடிவுகள் கூட விண்ணப்பதாரியை கைது செய்து தடுப்பு முகாம்களில் அடைத்த பின்னரே முடிவுகளை வழங்கி விடுவதால் மேல் நீதிமன்ற விண்ணப்பங்களை சட்ட மீளாய்வு செய்வதில் கூட பல சிக்கல்கள் எழுகின்றன.

இது தவிர குடிவரவு நீதிபதிகளின் முடிவுகளுக்கு எதிராக மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கும் போது முடிவுகள் கூட விண்ணப்பிக்கும் போது முடிவுகள் கூட விண்ணப்பதாரிக்கு நேரே அனுப்பப்படாமல் அரசு அலுவலகத்துக்கே பல தடவைகள் அனுப்பட்டு அவர்கள் மூலமே அகதி விண்ணப்பதாரிக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், உடனடியாக இந்த முடிவை மீள் பரிசோதனை செய்ய வேண்டுமென குலேந்திரன் ஐரோப்பிய மனித உரமைகள் நீதிமன்ற பதிவாளரை வேண்டியுள்ளார்.

எனவே, அகதிகள் அந்தஸ்து நிராகரிக்கப்பட்ட தமிழ் அகதிகள் உடனடியாக தமது சட்ட நிறுவனங்களை தொடர்பு கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.


விசா பெற ஆங்கில மொழிப் பரீட்சை திட்டத்தை கைவிட்து பிரிட்டன்

குடியேற்ற வாசிகளுக்கு ஆறுதலளிக்கும் செய்தியொன்றை பிரிட்டன் அறிவித்துள்ளது.

தமது நாட்டில் குடியேற விரும்புவோர் ஆங்கிலமொழிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டுமெனவும் அதன் பின்னரே விசா வழங்கப்படுமெனவும்

அறிவித்திருந்த திட்டத்தை இப்போது பிரிட்டன் கைவிட்டுள்ளது. அதற்குப் பதிலாக பிரிட்டனுக்கு அவர்கள் வருகை தந்த பின் ஆங்கிலத்தை கற்று சொள்வதற்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்தி;ட வேண்டுமென கோரப்படுவார்களெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அத்துடன், திருமண விசா பெற்று பிரிட்டனுக்குள் பிரவேசிப்பவர்கள் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் செய்யும் நோக்குடன் வெளிநாட்டுக்கு செல்லும் பிரிட்டிஷ் பிரஜை பிரிட்டனை விட்டு செல்வதற்கு முன்னர் அதனை அறிவிக்க வேண்டும் என்று புதிய ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிப் பகுதியில் இது அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

வலுக்கட்டாயமாக திருமணங்களை தடுக்க இப்புதிய சட்ட விதிகள் உதவுமென பிரிட்டிஷ் அரசு எதிர்பார்கிறது. 18-21 வயதிற்கு இடைப்பட்ட பிராயத்தவரே இந்தப் பலவந்த திருமணங்களால் பாதிக்கபடுகின்றனர். பலவந்த திருமணங்களால் பாதிக்கப்பட்டோர் உடல், உளரீதியாக பலகாலம் துன்பப்பட வழிவகுப்பதாகவும் இதற்கு சமூகத்தில் இடமளிக்கப்படாதெனவும் பிரிடடன் உள்துறை அமைச்சர் ஜாக்குவி ஸ்மித் கூறியுள்ளார்.

இதனடிப்பiயிலேயே விசாவுக்கான வயதெல்லையை அதிகரித்தல், திருமணத்திற்கு வருகை தருவோரின் விண்ணப்பங்களை கடுமையாக பரிசோதித்தல், ஆங்கிலம் கற்றுக் கொள்ள வலியுறுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நன்றி தினக்குரல்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினரின் கருத்துக்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றன-நிரஞ்சன் தேவ ஆதித்ய

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் வெளியிட்ட கருத்துக்கள் இலங்கையில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளதாக, அக்குழுவில் அங்கம்வகித்த ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் நிரஞ்சன் தேவ ஆதித்ய குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், தூதுக்குழுவினரின் திருகோணமலை விஜயம் இரத்துச் செய்யப்பட்டமைக்கான பொறுப்பை கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகமே ஏற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் அவர் நடாத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இருப்பினும், நிரஞ்சன் தேவ ஆதித்யவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய அலுவலகம், அது தேவ ஆதித்யவின் தனிப்பட்ட கருத்து எனவும், இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தூதுக்குழுவினரின் கருத்து அல்லவெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கொழும்பில் நடாத்திய செய்தியாளர் மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்துக்களும், ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களும் நிரஞ்சன் தேவ ஆதித்ய உள்ளிட்ட தூதுக்குழு அங்கத்தவர்கள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களே என ஐரோப்பிய பாராளுமன்றத்தின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் பிலிப் கமாரிஸ் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்திருந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் மேலும் கருத்து வெளியிட்ட நிரஞ்சன் தேவ ஆதித்ய, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை அரசாங்கத்தின் முன்னெடுப்புகளை ஊக்கப்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்காத வகையிலும் கருத்துக்களை வெளியிட்டிருக்கவேண்டும் எனக் குறிப்பிட்டதோடு, மாறாக அவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி விபரித்தமை நகைப்புக்கிடமானது எனவும் கூறினார்.

அத்துடன், ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை ஐரோப்பிய ஒன்றித்தினால் 12 நாடுகளுக்கு அன்பளிப்பாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கை அதனை மீண்டும் பெற்றுக் கொள்ளுமா அல்லது இழந்துவிடுமா என்பது குறித்து தாம் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

கோணேஸ்வரம் சிறுமி மீதான பாலியல் துஷ்பிரயோக வழக்கில் இராணுவச் சிப்பாய்க்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை

திருகோணமலை உவர்மலை கோணேஸ்வரத்தைச் சேர்ந்த 7 வயதுச் சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக இராணுவச் சிப்பாய் ஒருவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், திருகோணமலை மேன்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எதிரிக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 7 வயதுச் சிறுமி கடைக்குச் சென்றிருந்த வேளை, அவரைப் பலாத்காரமாகத் தூக்கிச் சென்று மறைவிடம் ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், அதனை மதகுரு ஒருவரும், கடைச்சிப்பந்தியும் கண்டு கூக்குரலிட்டதையடுத்து, அங்கு ஓடிவந்த கிராம மக்கள் எதிரியைப் பிடித்து மின்கம்பம் ஒன்றில் கட்டிவைத்துப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இராணுவச் சிப்பாய்க்கு எதிராகச் சிறுமியைக் கடத்தியமை; அவரைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை என இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தி சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது,

கடைக்குச் சென்ற தன்னைப் பிடித்து ஒரு கையால் வாயைப் பொத்தி மறுகையால் தூக்கிச் சென்று ஒரு வேப்பமரத்தடியில் வைத்துப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகப் பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் முடிவில் ஆட்கடத்தல் ; சிறுமி மீது மோசமான பாலியல் துஷ்பிரயோகம் ஆகிய குற்றங்களில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார் எனத் தெரிவித்து, 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் இரண்டு குற்றங்களுக்கும் தலா ஐயாயிரம் ரூபா தண்டமும் விதித்து மேன்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நட்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா பணம் செலுத்த வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் ஓராண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இரண்டு குற்றங்களுக்குமான சிறைத்தண்டனைகளை ஏக காலத்தில் எதிரி அனுபவிப்பதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி, எதிரி 11 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றித் திருகோணமலைக்கு மேன்நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றுச் சென்றுள்ள நீதிபதி எம்.இளஞ்செழியன் திருகோணமலை மேன்நீதிமன்றத்தில் வழங்கிய முதலாவது வழக்குத் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங்கிற்கும் பிள்ளையானுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறாது

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு நடைபெறாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டது. அநத ஒப்பந்தத்தை எதிர்த்து அரசாங்கத்தினால் பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண முதலமைச்சருடன் சந்திப்புக்களை நடத்துவது இராஜதந்திர ரீதியில் பொருத்தமாகாதெனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கிழக்கு மாகாணத்தில் இந்தியா பாரியளவு முதலீடு செய்துள்ளபோதிலும் பிள்ளையானுடன் நேரடியாகத் தொடர்புகளைப் பேண வேண்டிய அவசியமில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகன் தொண்டமான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானுக்கும், இந்தியப் பிரதமருக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்புக் குறித்து ஜே.வி.பி. மிகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மடு தேவாலயம் விரைவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்படும்- மன்னார் மாவட்ட குரு முதல்வர்

மடு தேவாலயத்தை விரைவில் ஆலய நிர்வாகத்திடம் கையளிப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட மன்னார் தேவாலயத்தை மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சோசை ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்.

மடு தேவாலயத்தில் தங்கவிருக்கும் குருமாரின் பெயர் விபரங்களை வழங்குமாறு இராணுவத்தினர் தம்மிடம் கோரிக்கை விடுத்ததாகவும், பெயர் விபரங்கள் வழங்கப்பட்ட பின்னரே மடு தேவாலயம் தம்மிடம் ஒப்படைக்கப்படும் என இராணுவத்தினர் கூறியதாகவும் குரு முதல்வர் விக்டர் சோசை ஐ.என்.எல்.லங்கா இணையத்துக்குத் தெரிவித்தார்.

எனினும், ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி கொண்டாடப்படும் ஆவணி மாதத் திருவிழாவை கொண்டாட முடியாதெனத் தெரிவித்த விக்டர் சோசை, மடு தேவாலயம் விரைவில் இராணுவத்தினரால் தம்மிட்டம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினார்.

மடு தேவாலயப் பகுதி இராணுவத்தினரால் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத் தளபதியின் உத்தரவுக்கமைய இராணுவத்தினருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1.5 மில்லியன் ரூபா செலவில் இராணுவத்தினர் மடு தேவாலயத்தைப் புனரமைத்திருந்தனர்.

புனரமைப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் வன்னி மாவட்டக் கட்டளைத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் அழைப்பையேற்றே மன்னார் மறை மாவட்ட ஆயர் தலைமையிலான குழுவினர் நேற்று மடு தேவாலயத்தைச் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தின் பிந்திய நிலைவரம் தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயர் அரசாங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக மன்னார் ஆயர் இல்லத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அண்மைய இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து மரங்களின் கீழ் வாழ்ந்துவரும் மக்களின் நிலைமைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அரசாங்கத் தரப்பினருடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவத்தினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து மடு தேவாலய வளாகத்தில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்கள் தற்பொழுது விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கிழக்கின் அபிவிருத்திக்கு சார்க் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்-த.ம.வி.புலிகள்

இலங்கையில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கும், கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கும் சார்க் நாடுகளின் ஒத்துழைப்பை தாம் எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் சார்க் மாநாட்டினை நடாத்துகின்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை தமது அமைப்பு வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ள அமைப்பின் பேச்சாளர் ஆசாத் மௌலானா, இதன் மூலம் பயங்கரவாதம் எல்லைகளற்றது என்பதை சார்க் நாடுகளுக்கு மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்த முடிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

"பயங்கரவாதம் இலங்கைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல. பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளுக்கும் பயங்கரவாதம் பரவியிருக்கிறது. எனவே பிராந்தியத்திலுள்ள எல்லா நாடுகளும் ஒன்றுபட்டு பயங்கரவாதத்தைத் தோற்கடிக்க முன்வரவேண்டும்" எனவும் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை படையினர் விடுவிப்பதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்கள் கடுமையான துன்பங்களை அனுபவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அம்மக்களுக்கு உதவுவதற்கு சார்க் நாடுகள் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

Tuesday, 29 July 2008

சிறிலங்கா கடற்பரப்புக்கு வந்துள்ள இந்திய யுத்தக்கப்பல்களில் 1,000 கடற்படையினர்

 கொழும்பில் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் நடைபெறவிருக்கும் சார்க் உச்சி மாநாட்டில் பங்குகொள்வதற்காக வருகைதரவிருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கான பாதுகாப்பை வழங்குவதற்காக கொழும்பையடுத்துள்ள கடற்பிராந்தியத்துக்குள் பிரவேசித்துள்ள இந்தியாவின் மூன்று யுத்தக் கப்பல்களில் சுமார் ஆயிரம் இந்தியக் கடற்படையினர் இருப்பதாகவும், குறிப்பிட்ட கப்பல்களுடன் இணைந்ததாக 30 தாக்குதல் படகுகள் வந்திருப்பதாகவும் கொழும்பில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

சில தினங்களுக்கு முன்னர் இந்தியத் துறைமுகங்களிலிருந்து புறப்பட்ட இந்தக் கப்பல்கள் நேற்று சிறிலங்காவின் கடற்பிராந்தியத்துக்கு அப்பால் வந்து தரித்து நிற்பதாக அறிவிக்கப்படுகின்றது.

இக்கப்பல்கள் சிறிலங்காவின் கடற் பிராந்தியத்தக்குள் பிரவேசிக்காது எனவும், தேவை ஏற்பட்டால் மட்டுமே இந்தக் கப்பல்கள் நடவடிக்கைளில் இறங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இல்லையெனில் கொழும்பு வந்திருக்கும் இந்தியத் தூதுக்குழுவினர் முழுமையாகத் திரும்பிச் செல்லும் வரையில் இக்கப்பல்கள் தொடர்ந்தும் தரித்திருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கப்பல்களில் தாக்குதல் உலங்கு வானூர்திகள் சில தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். அவசர தேவைகளின் நிமித்தம் இதனைப் பயன்படுத்துவதற்குத் தேவையான விமானப் படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

இதனைவிட இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மேலும் மூன்று உலங்கு வானூர்திகள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று வந்த சேர்ந்துள்ளன. இந்தியப் பிரதமர் உட்பட முக்கிய அமைச்சர்களின் பிரயாணத்துக்கு இது பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது நாள் வரை துண்டிக்காது இருந்த தொலைபேசி சேவைகளும் துண்டிப்பு - வன்னி நிலமைகளை இருட்டடிக்க அரசு முஸ்தீபு!!!

கிளி நொச்சி, முல்லைதீவு ஆகிய பகுதிகளுக்கான தொலைபேசி சேவைகள் யாவும் முழுமையாக சிறீலங்கா ராணுவத்தால் துண்டிக்கப்பட்டுவிட்டது.

021228 மற்றும் 021222 ஆகிய இலக்கத்தில் தொடங்கும் சுமார் 800 வாடிக்கையாளரின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

21228 இலக்கத்தில் தொடங்கும் கிளி நொச்சிக்கான இணைப்பின் ஊடாக சம நேரத்தில் 120 பேர் தொடர்பாடல் செய்யமுடியுமெனவும்,21222 இலக்கத்தில் தொடங்கும் முல்லைதீவுக்கான இணைப்பில் சம நேரத்தில் 30 பேர் தொடர்பாடல் செய்யமுடியுமென ரெலிகொம் வட்டார பொறியியலாளர் தெரிவிக்கிறார்.

இவை அனைத்தும் சில தினங்களுக்கு முன்னரே துண்டிக்கப்பட்டுவிட்டதாக அறியமுடிகிறது.

இதனால் அத்தியாவசிய சேவைகளுக்கான மாவட்டசெயலகம்,வைத்தியசாலை,அரசசார்பற்ற நிறுவனங்கள் ,உட்பட அனைத்து சேவைகளுக்குமான வன்னி நிலவரங்களை அறியமுடியாதபடியும் தடுக்கப்பட்டுள்ளது.

வன்னியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்துவிடவுள்ள இனபடுகொலைகள், மக்களின் துயரங்கள் வெளியுலகிற்கு செல்லாதபடி முன் கூட்டியே திட்டமிட்டே தொலைபேசி சேவையை துண்டித்துவிட்டதாக ஊடக துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் நீதித் துறையுடன் மோதுகிறார் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி

நிதியமைச்சின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவையின் ராஜினாமாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்க மறுத்துள்ளார்.

தொடர்ந்தும் நிதியமைச்சின் பொறுப்புக்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி செயலக தவல்கள் தெரிவிக்கின்றன.

ஜயசுந்தரவை பதவியில் இருந்து நீக்கினால் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி செயலகம் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பி.பீ. ஜயசுந்தர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதபதியிடம் நேற்று கையளித்திருந்தார்.

இந்த நிலையில் இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடையு ஜனாதிபதி நீதித் துறையுடன் நேரடியாக மோதுவதற்கு தயாராகி உள்ளதனைக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் நலன்களுக்காக இலங்கைத் தமிழ் மக்களைப் பலி கொடுத்த சமாதான ஒப்பந்தம்

* கைச்சாத்திடப்பட்ட பின்னர் கடந்தோடிவிட்ட 21 ஆண்டுகள்

இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இன்றுடன் 21 வருடம் ஆகின்றது.


இந்த ஒப்பந்தத்தின் படி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் வடக்கு தவிர்ந்த ஏனைய இடங்களில் அரசியல் நிர்வாகத்தின் தலைமையில் செயற்படுகின்றன.

வட, கிழக்கு மட்டும் தொடர்ந்தும் ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது. இணைக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணமும் உயர் நீதிமன்றத்தீர்ப்பின் மூலம் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு ஆளுநர் நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்றது.

இப்பிரிப்பு பற்றி ஒப்பந்தத்தின் பங்காளியான இந்தியா வாயினையே திறக்கவில்லை. கிழக்கில் இராணுவத்தின் தேவைக்காக மாகாண சபைத் தேர்தலும் நடத்தப்பட்டு பிள்ளையான் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டிருக்கின்றார். பிள்ளையான் நிர்வாகத்தை பொம்மையாக வைத்து சிங்கள மயமாக்கல் நடவடிக்கைகளை அரசு அங்கு முன்னெடுக்கின்றது.

இந்நிலையில் இலங்கை, இந்திய ஒப்பந்தம் அதன் நடைமுறைச் செயற்பாடுகள் தோல்விகளுக்கான காரணங்கள் என்பவை பற்றி தமிழ் மக்கள் நிலை நின்று ஓர் மீள்பரிசீலனை அவசியமாகிறது.

ஒப்பந்தத்தினை புலிகளும், அரசாங்கமும் ஏற்று நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்றைய நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்காது என்ற கருத்து ஒரு சிலரிடம் இன்றும் நிலவி வருவதால் இப்பரிசீலனை முக்கியமாகின்றது.

ஒப்பந்தத்தினை ஆராயும் போது மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன. ஒப்பந்தத்தின் உருவாக்கம், ஒப்பந்தத்தின் உள்ளடக்கம். ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் என்பவையே அவை மூன்றுமாகும்.


முதலில் நாம் ஒப்பந்தத்தின் உருவாக்கத்தைப் பார்ப்போம். எந்தவொரு ஒப்பந்தத்தையும் உருவாக்கும் போது அதற்கென தார்மீக நெறிமுறைகள் உள்ளன. அவை சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டவையாகும்.

அவற்றுள் பிரதானமானது ஒப்பந்தக் கட்டுப்பாடுகள் எவருக்கு விதிக்கப்படுகின்றதோ அவர்களே ஒப்பந்தத்தின் பங்காளிகளாக இருத்தல் வேண்டும் என்பதாகும்.

இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் எப்பிரச்சினை தொடர்பாக ஒப்பந்தம் வரையப்படுகின்றதோ அப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டவர்வளே பங்காளிகளாக இருத்தல் வேண்டும். வேறொருவர் ஒரு தரப்பாக கைச்சாத்திடுவதாயின் அவர் பங்காளிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவராக இருத்தல் வேண்டும்.


உண்மையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் முதல் சறுக்கல் இங்குதான் ஏற்பட்டது. ஒப்பந்தம் நீண்டகாலமாக நிலவிய இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது.


இந்த வகையில் இனப்பிரச்சினையுடன் தொடர்புடைய சிங்களத் தேசத்தலைவர்களும், தமிழ் தேசத்தலைவர்களுமே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருத்தல் வேண்டும்.


மாறாக இரு நாடுகளின் தலைவர்களே கைச்சாத்திட்டிருந்தனர். தமிழ் மக்கள் தமது சார்பில் கைச்சாத்திடும்படி இந்தியாவைக் கேட்கவுமில்லை. முகவராக நியமிக்கவும் இல்லை.


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முதல் நாள் நயவஞ்சகமாக இந்தியாவுக்கு வரவழைத்து, டில்லி ஹோட்டலில் காவலில் வைத்துவிட்டே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.


ஹோட்டலில் வைத்தே ஒப்பந்தப் பிரதி அவருக்கு காட்டப்பட்டு சம்மதம் பெற முயற்சிக்கப்பட்டது. இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் தொடக்கம் அப்போதைய தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். வரை பலர் முயன்றும் அவர் சம்மதிக்கவில்லை.

தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை ஒப்பந்தம் போதியளவு பிரதிபலிக்கவில்லையென்றும் ஒப்பந்தத்தின் நடைமுறைப் பிரயோகம் தொடர்பாக சிங்கள அரசாங்கத்தினை நம்ப முடியாது என்றும்,

வடகிழக்கு தற்காலிக இணைப்பினை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆதாரங்களுடன் தனது மறுப்பினை அவர் தெரிவித்திருந்தார்.


பிரபாகரனின் கருத்திலுள்ள நியாயத்தன்மையைக் கேட்ட எம்.ஜி.ஆர். "நான் உங்களுடனேயே நிற்பேன்' எனக் கூறிவிட்டு சென்றிருந்தார்.

இறுதியில் நள்ளிரவு பிரதமர் ராஜீவ் காந்தி தானே நேரடியாகவே வந்து பிரபாகரனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஒப்பந்தத்தினை ஏற்றுக் கொள்ளும் படியும், தமிழ் மக்கள் சம்பந்தமான முழு விடயத்துக்கும் நான் பொறுப்பாக இருப்பேன் எனவும், என்னை நம்புங்கள் எனவும் ஒப்பந்தத்தை எதிர்க்க வேண்டாம் எனவும் வேண்டினார்.

"வடகிழக்கு இணைப்பு தற்காலிகமானது' என்பது சிங்களத் தீவிரவாதிகளின் எதிர்ப்பை தவிர்ப்பதற்காக கூறப்பட்டது என்றும் அது நிரந்தரமாகவே இணைந்திருக்கும் என்றும் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒருபோதும் நடைபெறாது என்றும் தான் உறுதிதருவதாக குறிப்பிட்டார்.

எல்லாம் தங்கள் கைகளை மீறி நடக்கின்றது. இந்தியாவின் கைதியாக இருந்து கொண்டு சம்மதம் கொடுக்காமல் இருக்க முடியாது எனக் கருதியே இறுதியில் பிரபாகரன் வாய்மூலச் சம்மதத்தை தெரிவித்திருந்தார்.

இச்சம்தம் எதிரி கைது நிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலமாக கொள்ளப்பட வேண்டுமே தவிர மனப்பூர்வமான சம்மதமாக கொள்ள முடியாது.

பிரபாகரன் அன்று சம்மதம் தெரிவித்திருக்காவிட்டால் தாயகத்துக்கு திரும்பி வந்திருக்கவே முடியாது. பிரபாகரனின் கடைசி இந்தியப் பயணமும் இதுவாகவே இருந்தது. சாராம்சத்தில் இச்சம்மதத்தினை பலவந்தமாக பெற்று சம்மதம் என்றே கூறுதல் வேண்டும்.

ஒருவகையில் தமிழ் மக்கள் தொடர்பான பொறுப்பினை இந்தியா பலவந்தமாக பெற்றுக் கொண்டது எனக் கூறல் வேண்டும். சரி பலவந்தமாக பெற்றுக் கொண்டாலும் பரவாயில்லை இந்தியா கடைசிவரை அப்பொறுப்பிற்கு விசுவாசமாக இருந்ததா?

அதுதான் தமிழ் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சோகமான விடயம். இது விடயத்தில் தன்னுடைய நலன்கள் நிறைவேற்றப்பட்டதும் இந்தியா தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டதே உண்மை நிலையாகும்.

இந்தியா தன்னுடைய நலனுக்காகவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான சக்திகள் இலங்கையில் காலூன்றுவதைத் தடுப்பதே ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவின் இலக்காக இருந்தது.

எந்த ஒரு நாடும் தன்னுடைய நலனுக்காக ஒப்பந்தம் செய்வதை தவறு எனக் கூற முடியாது. ஆனால் அதற்காக ஒரு தேசிய இனத்தின் அபிலாஷைகளை விலையாக கோரியமைதான் சகிக்க முடியாத ஒன்றாகும்.

இந்தியா இது விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பியிருப்பின் இரு ஒப்பந்தங்களை ஏற்பாடு செய்திருத்தல் வேண்டும். ஒன்றை தன்னுடைய பிராந்திய நலன் தொடர்பாகவும், மற்றொன்றை இனப்பிரச்சினை தொடர்பாகவும் செய்திருக்கலாம்.


பிராந்திய நலன்கள் தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருக்கலாம். ஆனால், இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்தில் சிங்களத் தமிழ் தலைவர்களை கைச்சாத்திட வைத்துவிட்டு தான் மத்தியஸ்தராக இருந்திருத்தல் வேண்டும்.

ஆனால், நடந்தது வேறு. பிராந்திய நலன்கள் தொடர்பான விடயங்களை தனியாக கடிதங்களில் பரிமாறி ஏற்றுக்கொண்டு விட்டு இனப்பிரச்சினை தொடர்பான ஒப்பந்தத்திலேயே இரு நாடுகளும் கைச்சாத்திட்டிருந்தன.

இரண்டாவது விடயம் ஒப்பந்தத்தின் உள்ளடக்கமாகும். உள்ளடக்கத்தில் பிரதான விடயம் இனப்பிரச்சினை தொடர்பான ஏற்பாடுகளேயாகும்.


இதற்கு ஒப்பந்தத்தினை விட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய ஆலோசனையுடன் அரசியல் யாப்புக்கு கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தத்தினையே முக்கியமாக ஆராய வேண்டும். உண்மையில் ஒப்பந்தத்தின் இரண்டாவது சறுக்கல் இங்குதான் இடம் பெற்றது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்பது குறைந்த பட்சம் கூட்டாட்சி அடிப்படையிலான அதிகாரப்பங்கீடாக இருத்தல் வேண்டும். இது 1957இல் கைச்சாத்திடப்பட்ட பண்டாசெல்வா ஒப்பந்தத்திலிருந்தே ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.


கூட்டாட்சி என வருகின்ற போது "கூட்டும் பகிர்வும்' என்ற தத்துவமே மேலோங்கியதாக இருக்கும். பொதுவான விடயங்களில் கூட்டும் தனியான விடயங்களில் பகிர்வும் என்பதே கூட்டும் பகிர்வும் என்ற தத்துவத்தின் நடைமுறை அர்த்தமாகும்.

இக்கூட்டும் பகிர்வும் என்ற தத்துவம் சிறப்பாக செயற்படுவதற்கு நான்கு விடயங்கள் முக்கியமானவையாகும்.

ஒடுக்குமுறைக்குள்ளான தேசிய இனத்தின் கூட்டிருப்பினை பேணக் கூடிய அதிகார அலகு, சுயநிர்ணய உரிமையினை பிரயோக்கிக்கக்கூடிய அதிகாரங்கள், மத்திய அரசான கூட்டு அரசில் தேசிய இனத்திற்கு சமத்துவமான பங்கு, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்துக்கான பாதுகாப்பு என்பனவே அந்நான்குமாகும்.

இந்நான்கு விடயங்களையும் ஒப்பந்தஉள்ளடக்கம் போதிய அளவிற்கு கவனமெடுக்கவில்லை. அதிகார அலகு தற்காலிகமாக இணைக்கப்பட்டதே தவிர நிரந்தரமாக இணைக்கப்படவில்லை.


அந்த தற்காலிக இணைப்பு கூட அரசியல் யாப்பின் ஒரு ஏற்பாடாக சேர்க்கப்படவில்லை. குறைந்தபட்சம் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட மாகாணசபைகள் சட்டத்திலும் சேர்க்கப்படவில்லை.


வெறும் வர்த்தமானி அறிவித்தலாகவே அது இருந்தது. உண்மையில் இது விடயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும், ராஜீவ் காந்தியும் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்றே கூற வேண்டும்.


யாப்பு ஏற்பாடாக அல்லது பாராளுமன்ற சட்டமாக இருந்திருக்குமானால் நீதிமன்றம் தன் விருப்பம்போல இணைப்பினை இரத்து செய்வது கடினமாக இருந்திருக்கும்.

சுனாமி பொதுக்கட்டமைப்பு விடயத்திலும் கூட இதுதான் நடைபெற்றது. அது பாரளுமன்ற சட்டமாக இருந்திருந்தால் அல்லது அதில் ஜனாபதிபதி கையொப்பமிட்டிருந்தால் நீதிமன்றம் இலகுவாக அதை நிராகரித்திருக்க முடியாது.

அதிகாரப் பங்கீட்டினை பொறுத்தவரை சுயநிர்ணய உரிமையினை பிரயோகிக்கக் கூடிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. மாகாணசபைப் பட்டியலிலுள்ள விடயங்களில் அதிகாரங்கள் குறைவாக இருந்ததுடன் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் கூட சுதந்திரமாக செயற்பட முடியாத நிலை இருந்தது.


குறிப்பாக வரிவிதிப்பு, சுகாதாரம் போன்ற எட்டு விடயங்களில் மாகாணசபைகள் எவ்வளவிற்கு சட்டமியற்றலாமென மத்திய பாராளுமன்றம் சட்டமியற்றிக் கொடுக்க வேண்டிய கட்டாயமிருந்தது.


அன்று வடகிழக்கு மாகாண அரசாங்கத்தை அமைத்துக் கொண்ட வரதராஜப் பெருமாள் தலைமையிலான மாகாண சபை அரசாங்கம் பல தடவைகள் சட்டங்களை இயற்ற முயன்றபோதும் மத்திய அரசு அதனைத் தடுத்து நிறுத்தியது.


இது விடயத்தில் அரச இயந்திரத்தின் நிலைதான் அதிக கொடூரமானதாக இருந்தது. சிங்கள அதிகாரிகள் நடைமுறையில் எந்த அதிகாரப் பங்கீட்டுக்கும் தயாராக இருக்கவில்லை.

இந்தியா அதிகாரப் பங்கீடு விடயத்தில் இந்திய மாதிரியையே சிபார்சு செய்ய இருப்பதாக ஆரம்பத்திலிருந்தே கூறி வந்தது. இந்திய மாதிரிக்கு மேலாக எதையும் கேட்கக்கூடாதென தமிழ் தலைவர்களுக்கு முன்னரே எச்சரிக்கையும் விடுத்திருந்தது. இந்தியக் கூட்டாட்சி என்பது அரசியல் அறிஞர்களினால் அரைகுறை கூட்டாட்சி என விமர்சிக்கப்படுகின்ற ஒன்றாகும்.


அந்த அரைகுறை கூட்டாட்சியினைத் தமிழ் மக்களின் தலையில் சுமத்துவது எந்த வகையில் நியாயமானது என்பதற்கப்பால் இந்திய அதிகாரப்பங்கீட்டில் மாநிலங்களுக்கு இருந்த அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு இருக்கவில்லை என்பதே கவலை தரும் விடயமாகும்.

மூன்றாவது மத்திய அரசில் மாகாணங்களின் பங்கு தொடர்பானது இதனை இன்னோர் வார்த்தையில் கூறுவதாயின் மத்திய அரசில் தமிழ் தேசத்தின் பங்கு தொடர்பானது. கூட்டும் பகிர்வும் தத்துவப்படி மத்திய அரசில் தமிழ் தேசத்திற்கு சமத்துவமான பங்கு வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.


உண்மையான கூட்டும் பகிர்வும் தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதாயின் சிங்கள தேசம், தமிழ்த்தேசம் என்கின்ற இரு பகிர்வு அரசாங்கங்களும் இரண்டையும் சமமாக இணைத்த கூட்டு அரசாங்கமும் உருவாக்கப்பட்டிருத்தல் வேண்டும். ஆனால், இந்த விடயம் கவனத்தில் எடுக்கப்படவில்லை.


பகிர்வு விடயத்தில் ஒரு தேசிய இனத்தையே கொச்சைப்படுத்தக்கூடிய வகையில் அனைத்து மாகாணங்களுக்கும் பகிர்வு மேற்கொள்ளப்பட்டது.


மத்தியில் கூட்டு என்ற விடயத்தில் எந்தவித பங்கும் கொடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் தேசிய இனம் சம்பந்தமான விடயங்களில் இரத்து அதிகாரத்தினையாவது அதற்கு வழங்கியிருக்கலாம்.

அவை எதுவும் வழங்கப்படாமல் மத்திய அரசு என்பது தொடர்ந்தும் சிங்கள ஆதிக்கமுள்ள அரசாகவே இருந்தது. இந்திய மாதிரியில் உள்ளது போன்ற மாநிலங்களவை ஏற்பாடு கூட இருக்கவில்லை.

நான்காவது மிக முக்கியமானது அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பதே அதுவாகும். இதில் தமிழ் மக்களின் சார்பில் ஒப்பந்தத்தினை மேற்கொண்ட தரப்பு என்ற வகையில் இந்தியாவின் பொறுப்பு அதிகமாக இருந்தது.


ஆனால், இந்தியா பெரிதாக இதில் அக்கறை காட்டவில்லை. பேரினவாத செயற்பாடுகளுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது என்ற வகையிலும் 75% பெரும்பான்மை இனத்தைக் கொண்ட நாடு என்ற வகையிலும் இந்தியா மிகவும் கவனமாக இருந்திருத்தல் வேண்ட&