Monday, 28 July 2008

நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் இலங்கையில் மீறப்பட்டுள்ளன - ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நாஸ்னல்

அரச நிறுவனங்கள் தொடர்பான தெரிவுக்குழு மற்றும் அரச கணக்கீட்டு தெரிவுக்குழு ஆகியவற்றின் தலைவர்களாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளமையானது,

நிறைவேற்று தரப்பினரால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகளை தடையின்றி செய்வதற்காக தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நாஸ்னல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களாகவும் அவற்றின் தலைவர்களாகவும் அமைச்சர்கள் நியமிக்கப்படுவது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானதும் ஆபத்தன நிலைமையுமாகும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடாளுமன்றம் இந்த பிரச்சினைக்குரிய விடயத்தை மீண்டும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் இந்த நாடாளுமன்ற நிதியில் தெரிவுக்குழுக்களின் தலைவர்களாக நியமிக்கப்படும் அடிப்படை சித்தாந்தததை மதிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைய இவ்வாறான தெரிவுக்குழுக்களின் தலைவர்ளாக எதிர்க்கட்சியினரே நியமிக்கப்பட வேண்டும் என்பதுடன் உறுப்பினர்களாக நிறைவேற்று அதிகாரமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட வேண்டும்.


இந்த சம்பிரதாயமான மிக நீண்டகாலம் இலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. இதனால் இந்த இரண்டு நிதியியல் நாடாளுமன்ற தெரிவுக்குழுக்களின் தலைவர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர்கள் இருவரும் அந்த பதவிகளை துறந்து நாடாளுமன்ற சம்பிரதாயங்களை மதிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் இலங்கை கிளையின் நிறைவேற்று பணிப்பளர் கே.சி. வெலியமுன அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments: