39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்ட இலங்கையரான கீர்த்திவாசன் கந்தசாமி வெண்கலப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார். சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகளில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட ஒருவர் பதக்கமொன்றை வெல்வது இதுவே முதன் முறையாகும். 39 ஆவது சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டிகள் வியட்நாம் தலைநகர் ஹனோயில் இம் மாதம் 20 முதல் 29 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. பௌதிகவியல் கோட்பாடுகள் மற்றும் செய்முறைகள் என இரண்டு கட்டங்களாக நடைபெற்ற போட்டிகளில் 82 நாடுகளைச் சேர்ந்த 370 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை பௌதிகவியல் நிறுவகத்தால் 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஐவரில் ஒருவரான கீர்த்திவாசன் கல்கிசை சென்.தோமஸ் கல்லூரியின் க.பொ.த.(உயர்தர) (2007) மாணவராவார். இவர்களுக்கு இலங்கை பௌதிகவியல் நிறுவகமும் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் துறையும் இணைந்து ஆறுமாதப் பயிற்சிகளை வழங்கியிருந்தது. கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடந்த ஆசிய பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்புப் பரிசினை வென்ற ஒரே இலங்கையர் கீர்த்திவாசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Monday, 28 July 2008
சர்வதேச பௌதிகவியல் ஒலிம்பியாட் போட்டி இலங்கை தமிழருக்கு முதல்முறை வெண்கலப்பதக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment