Tuesday 29 July 2008

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு மதவாச்சி சோதனைச்சாவடியில் தென்பகுதி நோக்கிப் பிரயாணம் செய்ய அனுமதி மறுப்பு

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் தென்பகுதிக்குச் செல்வதற்கு மதவாச்சி சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய ஆவணமாக பாஸ்போட், வாகனங்களைச் செலுத்துவதற்குத் தகுதி பெற்றதை உறுதிப்படுத்துகின்ற லைசன்ஸ், நிறுவனங்களில் பணிசெய்பவர்களாக இருந்தால்,

அதனை உறுதிப்படுத்துவத்றகாக வழங்கப்படுகின்ற அடையாள அட்டை (ஜொப் காட்) போன்றவற்றைக் காண்பித்துவிட்டு பலரும் மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாகப் பிரயாணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வந்தார்கள்.

எனினும் தற்போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதனால், தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள்,

தமது அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வேறு ஆவணங்களை வைத்திருந்தாலும், மதவாச்சி சோதனைச்சாவடியில் அவைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு தேசிய அடையாள அட்டை இல்லாதவர்கள் மதவாச்சி சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்படுவதாக, அவ்வாறு தமது பிரயாணத்தை மேற்கொள்ள முடியாமல் திரும்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: