Sunday 27 July 2008

பிச்சை எடுப்போருமில்லை கட்டாக்காலி நாய்களுமில்லை - ஆள் அரவமற்ற வர்ணம் பூசப்பட்ட தெருக்கள்- சார்க் மாநாடு தொடங்கியது!!

கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டை முன்னிட்டு பிச்சைக்காரர்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டு பொதுவான முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு கட்டாக்காலி நாய்களையும் கொழும்பு மாநகர சபையின் உதவியோடு பிடித்து அடைத்து வைத்துள்ளனர். கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்திற்கு முன்பாக பிச்சையெடுத்தவர்களுக்கு பஸ்ஸில் வந்த கும்பலொன்று 10 ரூபா நோட்டுக்களை விநியோகித்துள்ளது.

இதனைக் கண்றுற்ற ஏனைய பிச்சிசைக்காரர்களும் ஓடோடிச்சென்று அங்கு கூடவே அனைவரையும் பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இதன்போது பிச்சைக்காரர் ஒருவர் அவ்விடத்திலிருந்து பிடிபடாது ஓடித்தப்பியுள்ளார். அதேவேளை, பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தை அண்மித்த பிரதேசங்களிலுள்ள கட்டாக்காலி நாய்களை கொழும்பு மாநகர சபையின் மிருக வைத்தியப்பிரிவினர் பிடித்துச் சென்றுள்ளனர்.

இப்பகுதி கட்டாக்காலி நாய்கள் அல்லாத பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: