Tuesday 29 July 2008

ரொறன்ரோவில் 'வேர்களைத் தேடி' எனும் பேரில் தமிழ்இளையோர் மாநாடு.

தமிழ் இளையோர் அமைப்பு கனடியத் தமிழ் காங்கிரஸ் மற்றும் தமிழ் கலைத் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து தமிழ் இளையோர் மாநாடு ஒன்றினை

இன்று ஞாயிற்றுக்கிழமை யூலை 27இல் ரொறன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.

1983ம் ஆண்டில் நடைபெற்ற இனப்படுகொலையின் 25ம் வருட நிறைவை நினைவுகொள்ளும் வேளையில் எமது வரலாற்றை எம் தமிழ் கனேடிய இளையோரிடம் எடுத்துச் செல்லும்வண்ணம் 'வேர்களைத் தேடி..' என்னும் தலைப்பின் கீழ் இம் மாநாடு நடைபெற்றது.

இம் மாநாட்டிற்கு ஏற்கனவே இளையோரிடம் பதிவுகள் பெறப்பட்டு முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்வாக இது நடைபெற்றது.
இம் மாநாட்டிற்கு ஐக்கிய அமெரிக்காவில் இருந்து மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர், கலாநிதி யமுனா சங்கரசிவம் ஆகியோருடன் கலாநிதி ஜோசப் சந்திரகாந்தனும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருந்தனர்.

இதில் மருத்துவ கலாநிதி எலைன் சான்ட்லர் சுனாமி நேரத்தின் போது தமிழீழப் பிரதேசத்திற்குப் பயணம் செய்து அதன் பின்னர் தமிழர் பிரச்சினைகள் தொடர்பாக ஈடுபாடுகொண்டு தமிழர் தொடர்பாக தன்னார்வம் கொண்டு செயற்படுபவராவார்.


இம்மாநாட்டில் தமிழ்கனேடிய அடையாளம், உலகநாடுகள் தழுவிய வகையில் தமிழர் மற்றும் தமிழின் நிலை, சமவுரிமை: எம் சமூகத்தில் தமிழ்ப் பெண்கள், கனடியத் தமிழ் இளையோரை எதிர்மறையாகக் காட்சிப்படுத்தும் விடயங்கள்,

தமிழ் திரைப்படங்களும் அவைமூலம் எம் சமூகம் பெற்றுக்கொள்பவையும் மற்றும் அமைதியாக்கப்பட்ட குரல்கள்: 1983இலிருந்து இன்றுவரை போன்ற தலைப்புக்களில் பட்டறைகள் நடத்தப்பட்டன.

No comments: