ஹம்பாந்தோட்டை வீரவில பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம், வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் வேறு ஒரு இடத்தில் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் சமால் ராஜபக்ஸ விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து அதிகாரச்சபையின் தலைவருக்கு இன்று அறிவித்துள்ளார்.
வீரவில பிரதேச வயல் உரிமையாளர்களை சந்தித்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.வீரவில பிரதேசத்தில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படுவதன் மூலம் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாது எனவும்
அத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகள் ஏற்படும் என விவசாயிகள் நீண்டகாலமாக சுட்டிக்காட்டி வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.இதேவேளை உத்தேச சர்வதேச விமான நிலையத்தை ஹம்பாந்தோட்டையின் மத்தல பிரதேசத்தில் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும் வீரவிலவில் சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான அடிக்கலையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நாட்டியமை குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment