Tuesday 29 July 2008

புலிகளின் யுத்த நிறுத்தப் பொறியில் மகிந்த அரசாங்கம் சிக்காது - பிரதமர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு தலைப்பட்சமான யுத்த நிறுத்த பொறியில் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஒரு போதும் சிக்காது என சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரநாயக்க தெரிவித்துள்ளார்.

தியத்லாவ இராணுவப் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று வெளியேறும் 55 பேர் கொண்ட கடேற் அலுவலர்களது பயிற்சி நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் யுத்த நிறுத்தத்தில் கடந்த காலங்களில் ஏனைய அரசாங்கங்கள் விழுந்துள்ளன. ஆனால் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் புலிகளின் யுத்த நிறுத்த பொறியில் ஒருபோதும் சிக்காது.

புலிகள் பலவீனமடைந்த காலங்களில் புலிகளின் தங்களுடைய இராணுவ பலத்தை கட்டியெழுப்புவதற்க ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத் அறிவிப்பார்கள். விடுதலைப் புலிகள் ஒரு ஆயுதக் குழு. இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்தின் மீது யுத்தத்தைப் பிரகடனம் செய்துள்ளார்கள்.

நாங்கள் ஒரு பொறுப்புள்ள அரசாங்கம். இந்த குழு தனிநாட்டுக் கோரிக்கை கைவிட்டுவிட்டு, ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, போர் நிறுத்தத்தை அறிவிக்குமாறு நாங்கள் புலிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: