பல இராணுவ வெற்றிகளை ஈட்டிக் கொடுத்து தாய்நாட்டைப் பாதுகாக்க பாடுபட்ட எனக்கு உரிய பாதுகாப்பை வழங்க முன்வராத தற்போதைய அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான பொது மக்களைச் சுட்டும் வெட்டியும் கொலை செய்த முப்படையினருக்கு சேதங்களை விளைவித்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் கவச வாகனத்துடனான விசேட பாதுகாப்பை வழங்கியுள்ளது என வட மத்திய மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முதன்மை வேட்பாளர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா தெரிவித்தார். அநுராதபுரம் அஷோக் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார். * வடமத்திய மாகாணசபை முதன்மை வேட்பாளர் ஜானக பெரேரா
Monday, 28 July 2008
தாய்நாட்டின் வெற்றிக்காக பாடுபட்ட எனக்கு பாதுகாப்பில்லை முப்படையினரை கொன்றொழித்த கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் விசேட பாதுகாப்பா??
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment