அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியல் தீர்வை முன்வைத்தால் விடுதலைப்புலிகளுக்கு தம்மால் அழுத்தம் கொடுக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வுத்திட்டத்தை அரசாங்கம் முன்வைத்தால், கட்டாயமாக விடுதலைப்புலிகள் சவாலை எதிர்நோக்க நேரிடும் எனவும் இதன் போது தமக்கும் விடுதலைப்புலிகளுக்கு அழுதத்தை ஏற்படுத்த முடியும் என அவர் கூறியுள்ளார்.
தமிழ் விடுதலைப் போராட்டம் என்ற தொனிப்பொருளில் புதிய இடதுசாரி முன்னணியின் ஒஸ்டின் தொழிலாளர் பாடசாலையில் மாதந்த சொற்பொழிவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே சம்பந்தன் இந்த கருத்திளை வெளியிட்டுள்ளார். தெற்கில் உள்ள அரசாங்கம் சுயநிர்ணய உரிமைகளுக்கு இடமளிக்கவில்லை எனில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய அதனை பெற்றுக்கொள்ளும் உரிமை தமிழர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாகாண சபை உயிரிழந்து தற்போது 21 வருடங்கள் கடந்துள்ளது. உயிரிழந்த பிணத்திற்கு தற்போது உயிரூட்ட முடியாது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுக்கு வேறு வழி தெரியாத நிலையில் மாகாண சபை முறைமையை அறிமுகப்படுத்தி தமிழர்களுக்கு விளையாட்டு பொம்மையை காண்பிக்க முயற்சிப்பதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தனவுடன் இணைந்து தாம் மாகாண சபை முறைமையயை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்த போதும், மாகாண சபைகளுக்கு காவற்துறை, மற்றும் காணி அதிகாரங்களை வழங்கவில்லை எனவும் 13வது அரசியல் திருத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாண ஒருபோதும் போதுமானதாக இருக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரணதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் 13வது அரசியல் திருத்தம் தமிழ் மக்களின் அபிலாiஷகளை பூர்த்தி செய்யும் போதுமானதாக இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தனர் எனவும் அதற்கு அப்பால் சென்று தீர்வுவொன்றை வழங்க முயற்சித்தனர் என்றும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கள மக்கள் பல காலங்களாக இலங்கையில் வாழ்ந்து வந்த போதிலும், தமிழர்கள் அதற்கு முன்னர் இருந்தே இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும், தமிழ் மக்களுக்கு அடையாளமாக மொழியும், காலசாரமும், மதமும் இருப்பது போலவே, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறான இனத்தின் உரிமைகளை மறுக்கவோ அதனை கைவிடவோ முடியாது. ஒரு இனம் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதால், குறைந்த எண்ணிக்கையில் உள்ள இனத்ததின் உரிமைகளை மிதித்துக் கொண்டிருக்க எவரையும் அனுமதிக்க முடியாது எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வம்சாவளி தோட்டப்புறத் தமிழர்களின் பிரஜா உரிமை 1948 ஆம் ஆண்டு பறிக்கப்பட்டதுடன் ஆரமபமான தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை, 1956 முதல், 1983 வரை தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அகிம்சை வழியிலான போராட்டங்களை முன்னெடுத்ததாகவும் 1983 ஆம் ஆண்டுக்கு முன்னர் தமிழர்கள் சிங்கள சமூகத்திற்குள் வன்முறையை மேற்கொள்ளவில்லை எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1970 ஆம் ஆண்டு தனிநாட்டுக் கோரிக்கையை மு;னவைத்து தேர்தலில் போட்டியிட்ட சுந்தரலிங்கம், நவரட்ணம் ஆகியோர் தோல்வியை தழுவினர். அகிம்சை வழித் தலைவராக செல்வநாயகம் பல தடவைகள் தோல்வியடைந்தார்.
இவர்களின் தோல்வி தமிழ் மக்கள் சிங்க மக்களுடன் இணைந்து வாழ விரும்பியதை வெளிகாட்டியாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1972 ஆம் ஆண்டு ஒற்றையாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் தமிழ் சிங்கள மக்களின் ஒற்றுமைக்கு மரண அடி விழுந்தது.
தெற்கில் சிங்கள அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் தீர்வுகாண முடியாத நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையில் எடுத்தனர் எனவும் விடுதலைப்புலிகளிடம் குறைகள் இருந்தாலும் அவர்களை அந்த இடத்தை நோக்கி தள்ளியது தெற்கின் அரசாங்கமே எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.
Monday, 28 July 2008
தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடிய தீர்வானால் புலிகளுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் - இரா.சம்பந்தன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment