Wednesday, 23 April 2008

புத்தளம் அனுராதபுர வீதியின் 17ம் கட்டையில் வசிக்கும் இராணுவ படைவீரர் ஒருவரது வீட்டிலிருந்து நேற்று இரண்டு க்ளைமோக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.


இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கி ரவைகள் துப்பாக்கியொன்று டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் லக்பிமவிற்குத் தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட க்ளைமோக் குண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டரைக் கிலோ எடையுடையதெனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்ட போது குறித்த இராணுவ வீரர் வீட்டில் இருக்கவில்லை எனவும் அரவது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: