யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். 375 பேர் படுகாயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.![]() ![]() |
வடபோர்முனையில் மேற்கே கிளாலி முதல் முகமாலை ஊடாக கிழக்கே கண்டல் வரையான 7 கிலோமீற்றர் நீளமான முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று புதன்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு பாரிய முன்நகர்வை தொடங்கினர். பல்குழல் வெடிகணைகள்- ஆட்டிலெறிப் பீரங்கிகள்- மோட்டார்கள் ஆகியவற்றின் மிகச் செறிவான சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வின் போது சிறிலங்காப் படையினரால் பல்லாயிரக்கணக்கில் எறிகணைகள் ஏவப்பட்டன. அத்துடன் சிறிலங்காப் படையினரின் கவசப்படை டாங்கிகள் மற்றும் கவச ஊர்திகள் படையினரின் முன்னரணின் பின்தளத்திலிருந்து செறிவான பீரங்கிச்சூடுகளை வழங்க படையினர், விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை நோக்கி முன்நகர்வை மேற்கொண்டனர். சிறிலங்கா தரைப்படையின் உச்சவலு 53 ஆம் டிவிசன் கொமாண்டோக்கள் மற்றும் 55 ஆம் டிவிசன் படையினர் இப்பாரிய முன்நகர்வை மேற்கொண்டனர்.
இம் முன்நகர்வுப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். முன்நகர்ந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் 10:30 மணி நேரம் தீவிர முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர். அதிகாலை 2:30 மணி முதல் இன்று பிற்பகல் 1:00 மணிவரை மிகத் தீவிரமாக படையினரின் முன்நகர்வை முறியடிக்கும் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தினர். இம் முன்நகர்வு வலிந்த தாக்குதலை 10:30 மணிநேர தாக்குதல் மூலம் முறியடித்த விடுதலைப் புலிகள், படையினரை பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். முறியடிப்புத்தாக்குதலின் போது படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. களத்தில் படையினரின் உடலங்கள் பெருமளவில் சிதறிக் கிடக்கின்றன.
விடுதலைப் புலிகளின் மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி அதிகளவில் படையினர் உடலுறுப்புக்களை இழந்துள்ளனர். படையினரின் சுடுகலங்கள், வெடிபொருட்கள் பெருமளவில் களமுனையில் சிதறிக்கிடக்கின்றன. படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் துடைத்தழிப்பு தாக்குதல் மற்றும் தேடுதல் நடவடிக்கையை விடுதலைப் புலிகள் மேற்கொண்டுள்ளனர். இன்றைய மோதலில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 375 படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறிலங்காப் படைத் தரப்பினரை மேற்கோள் காட்டி அனைத்துலக ஊடகமான ஏ.எஃ.பி. தெரிவித்துள்ளது. மக்கள் பார்வைக்காக சிறிலங்காப்படையினரின் உடல்கள்!!!!!!!. LTTE officials in Ki'linochchi provided details of 14 identification tags/details belonging to dead SLA soldiers, handed over to them by Tiger commanders in Northern Front.
|
Wednesday, 23 April 2008
5ம் இணைப்பு)கிளாலி- முகமாலை முன்னரணில் சிறிலங்காவின் பாரிய முன்நகர்வு புலிகளால் முறியடிப்பு: 150 பேர் பலி- 375 பேர் படுகாயம்-ஏ.எவ்.பீ
Subscribe to:
Post Comments (Atom)


யாழ். வடபோர் முனையான கிளாலி முதல் முகமாலை கண்டல் வரை 7 கிலோமீற்றர் முன்னரண் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வு 10:30 மணிநேர தாக்குதல் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புச் சமரில் சிறிலங்காப் படையினர் 40 பேர் கொல்லப்பட்டனர். 375 பேர் படுகாயமடைந்துள்ளனர். களத்தில் பெருமளவில் படையினரின் உடலங்களும், போர்க்கலங்களும் சிதறிக் கிடக்கின்றன.













வடபோர்முனைகளில் இன்று காலை கிளாலி, முகமாலை, கண்டல் ஆகிய பகுதிகளில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடம்பெற்ற மோதல்களின் போது இறந்த சிறிலங்காப் படையினரின் உடல்கள் விடுதலைப்புலிகளால் கைப்பற்றபட்டுள்ளது.




No comments:
Post a Comment