Friday, 18 April 2008

யாழ்தேவி புகையிரதத்திற்கு 9 நவீன புகையிரத பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன-போக்குவரத்து அமைச்சர்

தேவி புகையிரதத்திற்கு சீனாவிலிருந்து தருவிக்கப்பட்ட 9 நவீன புகையிரத பெட்டிகள் இணைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த இருபது வருட காலத்தின் பின்னர் முதல்முறையாக நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் பிரதான ரயிலான யாழ்தேவியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றபோதிலும் இந்த ரயில் பல வருடக்கணக்கில் நவீனமயப்படுத்தப்படவில்லை.

இதனைக் கருத்திற் கொண்டே இந்த நவீனமயப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவம் அமைச்சர் மேலும் தெரிவித்தார். ரயில் சேவையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ் ருஹ_ணுகுமாரி, சாகரிகா, மஹவ போன்ற ரயில்களுக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.

இதற்கென மூவாயிரம் மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது, இதனைத் தவிர கண்டி கொழும்பு கடுகதி ரயிலின் முதலாம் வகுப்பு பெட்டிகள் நவீனமயப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் இடம்பெறுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

No comments: