போன் இணைப்புகள் எண்ணிக்கை 27 கோடியே 28 லட்சமாக அதிகரித்துள்ளது. செல்போன் விற்பனையில் உலக அளவில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி இந்தியா 2வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பருடன் முடிந்த காலாண்டில் போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 27 கோடியே 28 லட்சமாக இருந்தது.
அது ஜூலை முதல் செப்டம்பர் வரை காலாண்டில் 24 கோடியே 86 லட்சமாக இருந்தது. டிசம்பர் வரை இருந்த மொத்த இணைப்புகளில் செல்போன்கள் எண்ணிக்கை மட்டும் 23 கோடியே 36 லட்சம். இது செப்டம்பர் வரை காலாண்டில் 20 கோடியே 96 லட்சமாக இருந்தது. இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 80 லட்சம் புதிய போன் இணைப்புகள் பெறப்படுகின்றன.
இது அமெரிக்காவில் 20 லட்சமாக உள்ளது. எனினும், மொத்த போன்கள் எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்து 2வது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அதை இந்த மாத இறுதிக்குள் இந்தியா பின்னுக்குத் தள்ளி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செல்போன் நிறுவனங்களின் அதிக விற்பனை அடிப்படையில் ஏற்கனவே அமெரிக்காவை இந்தியா பின்னுக்குத் தள்ளி 2வது இடத்துக்கு வந்து விட்டது. செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வரும் அதேநேரத்தில் சாதாரண போன் (லேண்ட்லைன்) வைத்திருப்போர் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது.
செப்டம்பரில் 3 கோடியே 95 லட்சமாக இருந்த லேண்ட்லைன் இணைப்புகள், டிசம்பர் இறுதியில் 3 கோடியே 92 லட்சமாக சரிந்து விட்டது. கிராமப்புறங்களில் செல்போன் வளர்ச்சி அபார வேகத்தில் உள்ளது. செப்டம்பரில் கிராமப் பகுதிகளில் செல்போன் இணைப்புகள் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சமாக இருந்தது. அது டிசம்பர் இறுதியில் 5 கோடியே 25 லட்சமாக அதிகரித்து விட்டது. மாறாக, லேண்ட்லைன் இணைப்புகள் 1 கோடியே 19 லட்சத்தில் இருந்து 1 கோடியே 17 லட்சமாகக் குறைந்து விட்டன.
Monday, 14 April 2008
அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment