Sunday, 20 April 2008

பாண்டிருப்பில் இன்று இரட்டைக் கொலை:

அம்பாறை மாவட்டம் பாண்டிருப்பு காளி கோவில் வீதியில் இலங்கை நேரம் 4 மணியளவில் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இனம் தெரியாத ஆயுததாரி ஒருவர் வீடொன்றின் மீது மேற்கொண்ட சரமாரியான துப்பாக்கிச் சூட்டில் கணவனும் மனைவியும் ஸ்தலத்திளேயே மரணமாகியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் குறுந்தையடி பகுதியில் கிராம சேவகராக பணிபுரிந்த , 37 வயதுடைய கனகரட்ணம் ஆனந்தி அவரது கணவனான சேனைகுடியிருப்பு பகுதியில் கிராம சேவகராக கடமையாற்றிய 47 வயதுடைய கந்தையா நாகராசா ஆகியோரே கொல்லப்பட்டதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

No comments: