Friday, 4 April 2008

திபெத்தின் அழகான ஷிகேசெ நகரம்

திபெத் தன்னாட்சி பிரதேசத்தின் இரண்டாவது பெரிய நகரான ஷிகேசெ, லாசாவின் மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. லாசாவிலிருந்து புறப்பட்டு, வாகனம் ஆற்றின் கரையோர நெடுகில் ஓடுகிறது. கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்தில் இருப்பதால், ஆற்றின் கரைகளிலுள்ள மரங்கள், குறைவு. புற்களும், கற்களும், மணலும் நிறைந்து காணப்படுகின்றன. எதேச்சையாக, மலைக்குன்றுகளில் ஆடுகளும் எருமைகளும் புற்களை உண்ணும் காட்சி ஓவியமாக காணப்படுகிறது.

ஷிகேசெ நகரம், வெப்பமான தட்பவெப்ப நிலை உடையது. சூரிய ஒளி போதுமானது. வேளாண் துறை வளர்ச்சியடைந்து வருகிறது. இது, திபெத்தின் தாணியக் கிடங்குங்களில் ஒன்றாகும். தற்போது, இப்பிரதேசத்தின் கட்டுமானத்தில், மாபெரும் மாற்றம் காணப்படலாம். போக்குவரத்து வசதி நன்றாக இருக்கிறது. சுற்றுலா பயணிகள், ஷிகேசெவிலிருந்து மேற்கை நோக்கி, அலிவு சென்றடையலாம். தெற்கை நோக்கி, இமயமலையின் சுமுலுங்மா சிகர இயற்கை பாதுகாப்புப் பிரதேசம், நேபாளம் ஆகியவற்றுக்குச் செல்லலாம். ஷிகேசெ பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவர் GUO SENG BAO கூறியதாவது:
பயணிகள் இப்பிரதேசத்துக்கு வந்து, சுமுலுங்மா சிகரத்துக்குச் சென்று பார்க்க விரும்புகின்றனர். தவிர, சாங் மு எல்லைப் புறத்திலுள்ள, நேபாள நடையுடை பாவனையை கண்டுரை விரும்புகின்றனர். இதில், கடல்மட்டத்திலிருந்து 8000 மீட்டருக்கு அதிகமான உயரம் கொண்ட 5 மலைகள் உள்ளன. மானுடவியல் துறையில், பான்சேன் தங்கியிருக்கும் இடமான புகழ்பெற்ற சாஷ்ரோங்பு கோயில், சியாங்ச்சி நாட்டுப்பற்றுடைய கல்வித் தளம், பீடபூமியில் ஒப்பீட்டளவில் முழுமையாக விட்டு செல்லப்பட்ட ஒரேயொரு வேளாண் அடிமை உரிமையாளரின் பண்ணைத் தோட்டம் முதலியவை, பயணிகளை ஈர்த்துள்ளன என்றார் அவர்.


வரலாற்றில், ஷிகேசெ பிரதேசம், பின் திபெத்தாக அழைக்கப்பட்டது. லாசாவை மையமாக கொண்ட முன் திபெத்தை விட, இது வேறுப்பட்டது. சுமார் 500 ஆண்டுகால வரலாறுடைய ஷிகேசெ நகரம், இப்பிரதேசத்தின் அரசியல், பொருளாதாரம், பண்பாடு, மதம் மற்றும் போக்குவரத்தின் மையமாக கருதப்படுகிறது. 1986ம் ஆண்டில், சீன அரசவை, ஷிகேசெவை, நாட்டின் வரலாற்றுப் பண்பாட்டு நகரப் பட்டியலில் சேர்த்தது. 1447ம் ஆண்டில் கட்டியமைக்கப்பட்ட சாஷிரோங்பு கோயில், திபெத் புத்த மதத்தைச் சேர்ந்த கேரு பிரிவின் நான்கு பெரிய கோயில்களில் ஒன்றாகும்.
10 லட்சத்து 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான சாஷிரோங்பு கோயில், மலையைச் சார்ந்து கட்டியமைக்கப்பட்டது. இக்கோயிலில், 57 திருமறை மண்டபங்கள் உள்ளிட்ட 3600 அறைகள் உள்ளன. சொச்சின் என்னும் பெரிய திருமறை மண்டபம், இக்கோயிலில் மிகப் பண்டைய கட்டிடமாகும். சாஷிரோங்பு கோயிலின் மேற்கில், ச்சியாங் பா புத்த மாளிகை அமைந்துள்ளது. உள்ளே, ச்சியாங் பா புத்தர் சிலை உள்ளது. இப்புத்தர் சிலை, 26.7 மீட்டர் உயரம் கொண்டது. அதன் காது, 2.2 மீட்டர் நீளமானது. இது, உலகில் மிக உயரமான, மிகப் பெரிய வெண்கல புத்தர் சிலை ஆகும்.
சாஷிரோங்பு கோயிலின் மேலாண்மை குழுவின் துணைத் தலைவர் சலுங்பின்லா எமது செய்தியாளரிடம் பேசுகையில், திபெத் வசந்த நாட்காட்டியின் படி, ஆண்டின் வெவ்வேறான காலத்திலும், இக்கோயிலில் பல்வதை மத நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.


உள்ளூர் மத நம்பிக்கையாளர்கள், சாஷிரொங்பு உள்ளிட்ட புத்த மத கோயில்களுடன் சீரான உறவு கொண்டுள்ளனர். ஆண்டுதோறும் சாஷிரோங்பு கோயிலில் வழிபாடு செய்கின்ற மத நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கை, 3 லட்சத்தைத் தாண்டியது. பெரிய ரக மத நடவடிக்கை நடைபெறும் போது, ஒரு நாளில், சுமார் சில பத்தாயிரத்துக்கு மேலானோர் வருகை தருகின்றனர். அத்துடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கு, உள்ளூர் மத துறவிகள், வரவேற்பு தெரிவிப்பதோடு, உணவு மற்றும் உறைவிட வசதியையும் வழங்குகின்றனர். இக்கோயிலில் ஷிகேசெயின் அருகிலுள்ள கிராமப்புறத்திலிருந்து வந்த திபெத் இன நண்பர் தோஜியை நாங்கள் சந்தித்து பேசினோம். அவர் பேசுகையில், தாம், காலையில் ட்ராக்டர் மூலம் இங்கு வந்தடைந்த பிறகு, கோயிலுக்கு நடந்து சென்றதாகவும், வழியில் 4 மணி நேரம் ஆனது என்று கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
சாதாரண நாட்களில், இக்கோயிலுக்கு வந்து வழிபாடு செய்கின்றேன். மிகவும் வசதியாக இருக்கிறது என்றார் அவர்.
தவிர, ஷிகேசெவின் புறநகரில் அமைந்துள்ள ஷரூ கோயில் மிகவும் புகழ்பெற்றது. கோயிலிலுள்ள எண்ணற்ற பண்டைய சுவர் ஓவியங்கள் குறிப்பிடத்தக்கவை. ஷிகேசெ நகரத்தின் தென்மேற்கிலிருந்து 160 கிலோமீட்டர் தொலைவிலான சாக்கா மாவட்டத்தில் அமைந்துள்ள சாக்கா கோயிலும், சியாங்ச்சி மாவட்டத்தின் பேய்சூ கோயிலும் ச்சூங்சான் கோயிலும் புகழ்பெற்ற காட்சி இடங்களாகும். பண்டைய பண்பாடு, ஒளிமயமான கோயில் கட்டிடங்கள், அழகான இயற்கைக் காட்சிகள், சிறப்பான நிலவியல் அமைப்பு முதலியவற்றைக் கொண்ட ஷிகேசெ நகரம், திபெத்தில் ஈர்ப்பு ஆற்றல் மிக்க சுற்றுலா இடங்களில் ஒன்றாக மாறியுள்ளது. உற்சாகமிகுந்த திபெத் இன மக்கள், அரசாங்கத்தின் ஏற்பாட்டில், சுற்றுலா சேவைக்கான பயிற்சியில் சேர்க்கப்பட்டனர். தமது வீட்டில் தங்கி, உண்மையான திபெத் இன நடையுடைய பாவனைகளை உணர, பல்வேறு நாட்டு பயணிகளை, அவர்கள் அழைக்கின்றனர்.
ஷிகேசெ பிரதேசத்தின் சுற்றுலா பணியகத்தின் துணைத் தலைவர் GUO SENG BAO கூறியதாவது:


இப்பிரதேசத்தில் விவசாயி மற்றும் ஆயர் சுற்றுலா வரவேற்பு குடும்பங்களின் எண்ணிக்கை, 200ஐ தாண்டியுள்ளது. அரசாங்கங்கள், அவர்களுக்கு சிறப்பு பயிற்சியளித்துள்ளன. தற்போது, பயணிகள் அங்கே உண்மையான திபெத் இன உணவுகளை உண்டு, திபெத்தினரின் வீட்டில் தங்கி, திபெத் இன பாணியுடைய வாழ்க்கை உணர்ந்து கொள்ளலாம் என்றார் அவர்.

No comments: