Tuesday, 15 April 2008

அம்பாறையில் சிறுபோக நெற்செய்கை விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு

அம்பாறையில் சிறுபோக நெற்செய்கைக்கான விதை நெல்லுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெருமளவிலான நெற்காணிகள் சேதமடைந்ததன் காரணமாகவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. சுத்தமான நல்லின விதை நெல்லை பெறமுடியாத நிலையில் இப்பிரதேச விவசாயிகள் கமநல சேவை நிலையங்களை நாடிவருகின்றனர்.

தற்போது இம் மாவட்டத்தில் நல்லின விதை நெல்லை தனியார் வியாபாரிகள் ஒரு மூடை 2700 ரூபா தொடக்கம் 3000 ரூபா வரை விற்பனைசெய்து வருகின்றனர். இம் மாவட்டத்தில் புதியரக நெல்லினம் அறிமுகப்படுத்தப்படாத நிலையில் சுத்தமான விதை நெல்லையும் பெறமுடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள நிலை காரணமாக அம்பாறை மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நெற்காணிகள் அறுவடை செய்ய முடியாமல் கைவிடப்பட்டமை

No comments: