Saturday, 12 April 2008

ஈழத் தமிழருக்கு நம்பிக்கை தரும் எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்


"ஈழத் தமிழர்களுக்கு மிகுந்த நம்பிக்கையான எதிர்காலம் புத்தாண்டுடன் பிறக்கும்'' இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பா.நடேசன் உறுதி கூறியிருக்கின்றார். புத்தாண்டை வரவேற்கும் முகமாக அவர் வெளியிட்ட செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு:

ஈழத்தமிழர்களுக்கு நல்ல எதிர்காலத்துக்கான நம்பிக்கை வெளிச்சம் புலப்படத் தொடங்கியுள்ளது. சர்வதேச ரீதியில் இதுவரை இருளை எதிர்கொண்டிருந்த ஈழத் தமிழ் மக்களுக்கு ஒளிக்கீற்றுத் தென்படத் தொடங்கிவிட்டது.

சர்வதேச ரீதியில் மாறிவரும் அரசியல், இராணுவ சூழ்நிலை மாற்றங்கள் தமிழர்களுக்கு சாதகமானவையாக உருவெடுத்து வருகின்றன.
இதுவரை காலமும் ஈழத் தமிழர் பக்கத்திலிருந்த நியாயங்களை அவர்களது நீதியான அபிலாஷைகளை சர்வதேசம் இப்போது மெல்ல மெல்லப் புரிந்து, உள்வாங்கிக்கொள்ளும் வரவேற்கத் தக்க நிலைமை ஏற்பட்டு வருவது நல்ல சகுனமாகும்.

களத்திலும் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டம் மேலும் உறுதி பெற்று, சாதகமான பெறுபேறுகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நெருங்கி வருகின்றது. தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் வாழும் நம்மக்கள் உவகை கொள்ளும் செய்திகள் புத்தாண்டோடு கிட்டும்.

No comments: