Thursday, 10 April 2008

ரஜினி படத்தில் ப்ளோரா!

Flora
Flora to dance in Rajini's Kuselan

cinema, rajini, kuselan, tamil, telugu, flora, item song, சினிமா, ரஜினி, குசேலன், தமிழ், தெலுங்கு, புளோரா, குத்துப்பாட்டு, விசா மோசடி

ரஜினி படத்தில் ப்ளோரா!

அமெரிக்க விசா மோசடி வழக்கில் சிக்கி, புழல் சிறை சென்று, ஜாமீனில் மீண்டு வந்துள்ள நடிகை புளோரா, ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவுள்ளார் - தமிழில் அல்ல, தெலுங்குப் பதிப்பில்.

சமீபத்தில் தென்னிந்தியத் திரையுலகை பரபரப்பில் ஆழ்த்தியவர் புளோரா. போலியான ஆவணங்களைக் கொடுத்து பெண் ஒருவருக்கு விசா பெற முயன்றதாக கூறி அமெரிக்க துணைத் தூதரகத்தில் பிடிபட்டார் புளோரா. உடனடியாக சிறையிலும் அடைக்கப்பட்டார். தற்போது ஜாமீனில்
விடுதலையாகியுள்ளார்.

இந் நிலையில், புளோராவுக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க நடிகர் சங்கம் தடை விதித்தது. ஆனால் புளோராவைத் தேடி பொன்னான ஒரு வாய்ப்பு வந்துள்ளது. அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் குசேலன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு.

இருப்பினும் தமிழ் குசேலனில் புளோரா நடிக்கவில்லை. மாறாக தெலுங்குப் பதிப்பில் நடிக்கிறார். அதுவும் குத்துப் பாட்டுக்கு ஆடவுள்ளாராம் புளோரா. இயக்குநர் பி.வாசுதான், புளோராவைக் கூப்பிட்டு இந்த குத்தாட்ட வாய்ப்பைக் கொடுத்துள்ளாராம். தமிழில் இந்தக் குத்துப்பாட்டுக்கு ஆடவிருப்பவர் சுஜா.

குஸ்தி படத்தில் நடித்த புளோராவுக்கு அதன் பின்னர் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. தெலுங்கிலும் அவரை அதிகம் பார்க்க முடியவில்லை. இருந்தாலும் புளோரா படு பிசியாகத்தான் இருந்து வந்தார். ஹோண்டா சிட்டி கார், அரண்மனை போன்ற பெரிய பங்களா என வசதியாகத்தான் இருந்து வருகிறார் புளோரா.

இப்போது சூப்பர் ஸ்டார் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதால் தெலுங்கில் புளோரா வேகமாக பிக்கப் ஆகி விடுவார் என்று கூறுகிறார்கள்.

மறுத்துவிட்ட நிகிதா:

முதலில் இந்த வாய்ப்பு நிகிதாவுக்குத்தான் போனது. தெலுங்கில் இளம் புயல் நடிகைகளில் நிகிதாவும் ஒருவர். எனவே இவரை ஆட வைத்தால் நலமாக இருக்கும் என பி.வாசு நினைத்தார்.

இதையடுத்து நிகிதாவை அணுகி குசேலன் தெலுங்குப் பதிப்பில் ஒரு குத்தாட்டம் இருக்கிறது. ஆடித் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் உடனடியாக அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நிகிதா.

சாதாரண ஜூனியர் நடிகைகளுடன் கும்பலாக ஒரு குத்தாட்டம் ஆடுவதில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி விட்டாராம் நிகிதா. ரஜினியோ ஆடுவதாக இருந்தால் பரவாயில்லை. ரஜினி படம் என்ற ஒரே காரணத்திற்காக எப்படி குத்தாட்டத்திற்கு ஆடுவது என்பது நிகிதாவின் எண்ணம்.

மேலும் படத்தில் நயனதாரா நாயகியாக நடிக்கிறார். சினேகா, மம்தா மோகன்தாஸ், திரிஷா ஆகியோர் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் ஆடவுள்ளனர். மீனாவும் இருக்கிறார். இந்த நிலையில் தனக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு பாடலுக்கு ஏன் ஆட வேண்டும் என்பதும் நிகிதாவின் எண்ணம்.

இத்தனை பேருக்கு மத்தியில் தான் என்னதான் கவர்ச்சி காட்டி ஆடினாலும் எடுபடாது என்பதால் குத்தாட்ட வாய்ப்பை நிராகரித்து விட்டாராம் நிகிதா. அதன் பிறகே வாய்ப்பு புளோராவைத் தேடிப் போனதாம்.

No comments: