வடபோர்முனையில் தாம் எதிர் பார்த்ததை விட படையினர் அதிகள வில் விடுதலைப் புலிகளின் தாக்குதல் களை எதிர் கொள்கின்றனர் என்று ராஜதந்திரிகளும், அவதானிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர். போர் நிலைவரம் தொடர்பாக ஏ.பி. செய்தி நிறுவனம் வெளியிட் டுள்ள செய்தி மடலில் இப்படித் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை படையினர் புலிகளின் பதுங்குகுழிகளை அழித்து பதினொரு விடுதலைப் புலிகளைக் கொன்றதாக இராணுவத்தரப்பு தெரிவித் துள்ளது. இந்த மோதல்களில் எட்டுப் படையினர் காயமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்புக்களுக்கும் இடையில் சண்டை கடந்த வாரங்களில் தீவிர மடைந்து வருகின்றது. விடுதலைப் புலிகளை அழித்து அவர்களது பிரதேசங் களை கைப்பற்றலாம் என அரசு முனைந் துள்ளது. ஆனால், அரசுப்படையினர் எதிர்பார்த்ததைவிட விடுதலைப் புலி களிடம் இருந்து பலத்த எதிர்ப்பை சந் தித்து வருவதாக ராஜதந்திரிகளும் அவ தானிகளும் கருத்து வெளியிட்டுள்ள னர். களமுனைகளுக்கு பத்திரிகையாளர் கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்படாத தால் உண்மை நிலையை அறிய முடிய வில்லை. இருதரப்பினரும் எதிரியின் இழப்புக் குறித்து பெரிது படுத்தப்பட்ட எண்ணிக்கைகளை வெளியிட்டு வரு கின்றனர் என்று ஏ.பி. யின் செய்தி மடலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 15 April 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment