Tuesday, 22 April 2008

நானாட்டானில் இருவர் சுட்டுக்கொலை:

நானாட்டான் அச்சான்குளம் பகுதியில் தமிழ் இளைஞர்கள் இருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது முசலி பகுதியில் வசித்துவந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. முனவத் தொழில் புரியும் இவர்கள் 18 வயதுடைய ரொங்கலின், 21 வயதுடைய சுதர்சன் ஆகியோரே இன்று (22-04) இரவு 7 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ் இளைஞர்கள் இருவரும் மீனவர்களுக்கான அடையாள அட்டைக்கான புகைப்படத்தினை எடுத்த பின் வீடு திரும்பும் போது இத்துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: