Saturday, 26 April 2008

முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ்

முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி செய்யமுடியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறீலங்காப் படையினரின் 53வது டிவிசன், 55வது டிவிசன் ஆகிய முன்னணி தாக்குதல் கொமாண்டோ அணிகள் இச்சமரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இவ்விரு படையணிகளும் பிரிகேடியர் சுசந்த பண்டார தலைமையில் ஏ9 நெடுஞ்சாலையை மையப்படுத்தி முகமாலை நோக்கி முன்னேறியதாகத் தெரிவித்துள்ளார்.

மற்றைய படையணி ஒன்று நாகர்கோவில் பகுதியிலிருந்து கண்டல் நோக்கி பிரிகேடியர் கமல் குணரட்ண தலைமையில் முன்நகர்ந்துள்ளது. இந்த வலிந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 5000 படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். இதேநேரம் முகமாலைச் சமரில் விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினர் கைது செய்திருக்கக்கூடும் எனக் கூறியுள்ளார்.

முகமாலை நோக்கிய முன்னேற்ற முயற்சிக்கு படுதோல்வி அடைந்த நிலையில் சிறீலங்காப் படையினரின் 55வது டிவிசனின் சிறப்புக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சமந்த சூரியபண்டார பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு அமெரிக்காவின் வோசிங்டன் டிசியில் உள்ள சிறீலங்கா தூதுவராலயத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் என படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தால் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

ttpian said...

anyhow,be prepared with 50,000 death boxes:no point in running to pillar&post @ the eleventh hour!
Mahindha can make a special visit for this purpose!