Tuesday, 15 April 2008

வடக்கு நோக்கிய யுத்தத்தில் பாரிய இழப்பு: அமைதி முயற்சியை ஆரம்பிக்க அரசாங்கம் முனைப்பு

ஸ்ரீலங்கா அரசாங்கம் நோர்வே தரப்பினூடாக மீண்டும் அமைதி முயற்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கில் படையினர் பாரிய இழப்புகளுடன் முன்னேற முடியாமல் இருக்கும் நிலையில் அமைதி முயற்ச்சிகளுக்கான முனைப்புகளை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவராக நோர்வே சென்றுள்ள அமைச்சர் ராஜித சேனாரடன் அங்கு நோர்வேயின் அனுசரணையாளர்களுடன் பேச்சு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ராஜிஜ சேனாரத்ன முதல் கட்டமாக நோர்வேயி; சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

10 நாட்கள் நோர்வேயில் தங்கியிருக்கவுள்ள அமைச்சர் சேனராட்ன நோர்வே அரசாங்க தரப்பின் பல்வேறு பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் மத்தியஸ்த முயற்ச்சிகளில் அவர்களை ஈடுபடுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

goverment news:

அமைச்சர் ராஜித சேனாரட்ன 10 நாள் உத்தியோகபூர்வ பயணமாக நோர்வே சென்றுள்ளார், நேற்று நோர்வே சென்ற அமைச்சர் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்மை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளார், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அவர் எரிகசெல்ஹெய்மிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜித நோர்வேயின் அரசாங்க தரப்பினர் மற்றும் நோர்வே கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர்களையும் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார். விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த நோர்வேயை மத்தியஸ்தராக அழைத்த ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் ராஜித சேனாரட்னவும் அமைச்சராக இருந்தார், அந்த ஆட்சி காலத்திலேயே போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.


No comments: