வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் போராளிகளால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த யுத்த முறைகளையே தற்போது புலிகள் இயக்கத்தினரும் கையாண்டு வருவதாகவும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இராணுவத் தளபதி கடந்த சனிக்கிழமை வன்னி இராணுவ நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்காக வன்னி இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று புலிகளின் தாக்குதல் நடடிக்கைகள் பற்றி மேற்கொண்ட ஆராய்வின்போதே புலிகள் இயக்கத்தினர் வியட்நாம் யுத்தத்தின்போது கடைப்பிடிக்கப்பட்ட யுத்த முறைகளைக் கடைப்பிடித்து அவர்களுடைய தாக்குதல்களை நடத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது.
வியட்நாம் யுத்தத்தின்போது வியட்நாம் போராளிகள் அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களுக்கு நேரிடையாக முகம் கொடுக்க முடியாத நிலையில் ஆர்.பி.ஜி. குண்டுத் தாக்குதல்களையும் 40 மில்லி மீற்றர் மோட்டார் தாக்குதல்களையும் கைக்குண்டுத் தாக்குதல்களையுமே கூடுதலாக மேற்கொண்டு அமெரிக்கப் படைகளின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுத்து வந்தனர்.
புலிகள் வியட்கொஸ் யுத்த உபாயத்தை (vietcons Tacties) மேற்கொள்ளுவதாகத் தெரிய வந்துள்ளது. இதற்கேற்ப புலிகள் இயக்கப் படையணியினர் ஆர்.பி.ஜி, 40 மி.மீ. மோட்டார் மற்றும் கைக்குண்டுத் தாக்குதல்களைப் பரவலாகச் செய்து வருகின்றனர். இவ்வாறு ஆங்காங்கே இவ்வாறான தாக்குதல்களைச் சுற்றி வளைத்து செய்வதன் மூலம் யுத்தப் பொறிகளை ஏற்படுத்த முனைந்து வருவதாகவும் இதுவரை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்த இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். மேலும் இராணுவத்தினரைச் சிக்க வைப்பதற்காக பெருந்தொகையில் கண்ணிக் குண்டுகளையும் வியட்கொஸ் யுத்த உபாய முறையில் புலிகள் இயக்கத்தினர் பொருத்தி வைத்துள்ளதாகவும் இவ்வாறான 82 கண்ணிக் குண்டுகளை ஒரு குறிப்பிட்ட சிறிய தூரத்திற்குள் ஒரே நாளில் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு கண்ணிக் குண்டுகள் மூலம் பொறிகளை அமைக்கும் யுத்த உபாயத்தை வியட்நாம் யுத்தத்தின்போது வியட்கொஸ் படைகளுக்குத் தலைமை தாங்கிய வோகியப் எனப்படும் இராணுவ ஜெனரல் கடைப்பிடித்து கண்ணிவெடிப் பொறிகளைப் பெருந்தொகையில் பொருத்திவித்தார் எனவும் இந்த குண்டுப் பொறிகளைப் பெருந்தொகையில் அமைக்கும் தாக்குதல் உபாயம் பற்றி மேற்படி வியட்கொஸ் இராணுவ ஜெனரல் எழுதிய யுத்த உபாயங்களைப் பற்றிய யுத்தக் குறிப்புப் புத்தகத்தில் அவ்வாறான குண்டுப் பொறிகளை அமைப்பதனால் எதிரிப் படைகளுக்கு ஏற்படக் கூடிய பாரிய இழப்புகள், அபாயங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகவும் மேலும் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு வியட்கொஸ் யுத்த உபாயத்தைக் கடைப்பிடித்து படையினர் முன்னேறும் பிரதேசங்களில் பரவலாக குண்டுகளை பொருத்தி வைத்தும் பொறிகளை அமைத்தும் புலிகள் இயக்கத்தினர் படையினருக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுச் செயற்படுகையில், இந்த வகையான யுத்த உபாயத்திற்குப் பதில் யுத்த உபாயமாக அமைந்ததே விமானம் மூலம் மேற்கொள்ளப்படும் `கார்பெற் பொம்பிங்' (Carpet Bombing) விமானக் குண்டு வீச்சு முறையாகும். அமெரிக்க விமானப் படையினரால் மேற்படியான பரவலாக பொருத்தப்படும் குண்டுப் பொறிகள் மற்றும் குண்டுத் தாக்குதல்களுக்கு பதில் உபாயமாக மேற்படி "கார்பெற் பொம்பிங்" குண்டு வீச்சு முறை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.
திவயின விமர்சனம்: 6.4.2008
Thursday, 10 April 2008
வியட்நாம் போராளிகளின் யுத்தமுறைகளையே போரில் புலிகளும் கையாள்கிறார்கள்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment