மலையகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் தமது செயற்பாடுகளை வியாபித்துள்ளதாக சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பல இளைஞர், யுவதிகளின் பூர்வீகம் மலையகம் என தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டு இனக்கலவத்தைத் தொடர்ந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஆயிரக் கணக்கான மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்கில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இவ்வாறு சரணகதியடைந்த பல தமிழர்களின் வாரிசுகளே இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பல பிரிவுகளின் முக்கிய போராளிகள் என அந்த வார ஏடு தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கில் கல்வி பயின்று தற்போது மலையகப் பகுதிகளில் உயர் பதவிகளை வகிக்கும் பெரும்பான்மையானோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மையில் மலையகப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் உப அதிபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், மலையக இளைஞர், யுவதிகள் பலர் வடக்கில் ஆயுத பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்கள் என அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Saturday, 31 May 2008
மலையகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் தமது செயற்பாடுகளை வியாபித்துள்ளது
இலங்கையில் 40 வீதமான எரிபொருளை மகிந்த அரசாங்கமே பயன்படுத்துகிறது
இலங்கையில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் பெரும்பகுதியை அரசாங்கமே பயன்படுவத்துவதாக செய்திகள் வெளியிட்டுள்ளன.
நாட்டில் பாவனையில் உள்ள 11 லட்ச நான்கு சக்கர வாகனங்களில் 2.5 லட்சம் வாகனங்கள் அரசாங்கத்திற்குச் சொந்தமானதென தெரிவிக்கப்படுகிறது.
நிதியமைச்சின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பான தேசிய சபையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீரவினால் இந்த புள்ளிவிபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வாகன நெரிசல் காரணமாக இழக்கப்படும் எரிபொருள் மற்றும் மனித உழைப்பின் பெறுமதி வருடாந்தம் சுமார் 300,000 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்திக்கிறது
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதியுயர் பீடத்திற்கும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குமிடையில் எதிர்வரும் 6ஆம் திகதி சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.
கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருப்பதாக அரசாங்கம் குற்றம்சாட்டியுள்ள நிலையிலேயே இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத், பொதுச் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்ததையடுத்தே, ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னர் அங்கு இடம்பெற்ற வன்முறைகளுக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் தொடர்பிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தெளிவுபடுத்தவே ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த வெள்ளிக்கிழமை பசில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது, புதிதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபையில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆராயப்பட்டதாகவும் முஸ்லிம் காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்திடமிருந்து எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்க எதிர்க்கட்சிகள் பாரிய கூட்டணி
அரசாங்கத்திடமிருந்து எதிர்நோக்கும் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும்; ஒரே குடையின் கீழ் நின்று அரசாங்கத்துக்கு எதிராகப் போராடப்போவதாக உயர் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கூட்டணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இருப்பாரென்றும், ருக்மன் சேனநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை வழிநடாத்துவாரென்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார மற்றும் சமூகக் காரணிகளை கருத்திற்கொண்டு இக் கூட்டணியில் இணைய மக்கள் விடுதலை முன்னணியும் தனது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றத்தவறியுள்ளதாகவும், அதன்காரணமாக அரசாங்கத்தைத் தோற்கடிக்க இந்தப் பாரிய கூட்டணியுடன் இணைந்து செயற்படப்போவதாகவும் ம.வி.முன்னணி தெரிவித்துள்ளது.
இந்தக் கூட்டணியை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மிக விரைவில் தோற்றுவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பாரிய கூட்டணியின் பொதுச் செயலாளராக முன்னாள் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் தலைவர் டிரான் அலஸ் இருப்பார் எனவும், இந்தக் கூட்டணியை அமைப்பதில் எஸ.பி.திசாநாயக்க முக்கிய பங்கு வகிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தகப் பாரிய கூட்டணி இளைஞர், மகளிர், துறைசார்ந்தோர், பிக்கு முன்னணிகள், ஆசிரியர்கள், விவசாயிகள் என பல்வேறு துறைகளில், பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்படும் எனவும், இதனூடாக அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான மக்கள் ஆதரவைப் பெறும் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்" வார ஏட்டுக்காக லட்சுமணன் எழுதிய - 'குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்விக்குறியாகியுள்ள அமைதி"
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியின் மத்திய பகுதியில் வைத்து கடந்த 22 ஆம் திகதி பிள்ளையான் குழுவின் ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளர் சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து உருவான சூழல் காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் கொல்லப்படுவதற்கும் மேலும் 6 பேர் படுகாயம் அடைவதற்கும் 4 பேர் கடத்தப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
மட்டக்களப்பு - கல்லடியில் வைத்துப் பிள்ளையான் குழுவால் கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம்களையும் விடுவிக்கக்கோரி ஏறாவூரில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 24 முஸ்லிம் இளைஞர்கள் கைதாகித் தடுத்தும் வைக்கப்பட்டுள்ளனர். இது ஓயாத பிரச்சினையாக மட்டக்களப்பின் முஸ்லிம் பிரதேசங்களில் தொடர்ந்தும் எரிந்து வருகிறது.
கொல்லப்பட்ட சாந்தன் அம்பாறை சவளக்கடையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ராசிக் குழுவின் முக்கிய உறுப்பினராக இருந்து விடுதலைப் புலகளுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த இவர், கருணா விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் அவருடன் இணைந்து கொண்டார்.
கருணாவி;ற்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின் போது பிள்ளையானை ஆதரித்த இவர், தமிழ் - முஸ்லிம் எல்லைக் கிராமமான ஆரையம்பதி பிரதேசப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
முஸ்லிம்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள இவர் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பயன்படுத்தி முஸ்லிம்களைக் கொடுமைப்படுத்துவதில் முன் நின்றார். இவரது செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் நல்லுறவில் பாரிய விரிசலுக்கு வித்திட்டதுடன் இப்பிரதேசத்தில் தொடர்ச்சியான பதட்ட நிலைக்கும் காரணமானது.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திலே தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையில் இணைந்து செயற்பட்ட இரு இனங்களான தமிழ், முஸ்லிம் மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் பிரித்தாழும் சூழ்ச்சிக்குப் பலியாகியதில் சகோதர இனங்கள் இரண்டுமே ஒன்றையொன்று பரஸ்பரம் சந்தேகப்பட வேண்டிய சூழல் தோற்;றுவிக்கப்பட்டு விட்டது. இரண்டு தரப்பிலும் உள்ள கடும் போக்காளர்கள் இந்த இரு இனங்களுக்கும் இடையே உருவாகக்கூடிய நல்லுறவைச் சிதைத்து விடத் தொடர்ந்து முயற்சி செய்து வரும் நிலையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவான ஜிகாத் தனியாகவும், ஊர்காவல் படை என்ற போர்வையில் இராணுவத்துடன் இணைந்து கூட்டாகவும் தமிழ் மக்களைக் கொலை செய்தும் துன்புறுத்தியும் வருகின்றது. இக்குழுவினருக்கு சிறிலங்கா அரசு மட்டுமன்றி பாகிஸ்தான் உள்ளிட்டு இஸ்லாமிய நாடுகள் ஆயுத பொருளாதார உதவிகளையும் வழங்கி வருகின்றன.
தமிழ்த் தரப்பைப் பொறுத்த வரை இராணுவத்துடன் ஒட்டி உறவாடும் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் கூட தமிழ் மக்கள் மத்தியில் தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளவும், தமது பழைய பகைமைகளைத் தீர்த்துக்கொள்ளவும் அப்பாவி முஸ்லிம்களைப் பழிவாங்கி வருகின்றனர்.
இதேவேளை, முஸ்லிம் மக்களிடையே தமது செல்வாக்கை உயர்த்திக்கொள்ளவும், தமது எஜமானர்களின் நிகழ்ச்சித் திட்டத்தை நிறைவேற்றவும் அப்பாவித் தமிழ் மக்களையும், வாய்ப்புக் கிடைக்கும் போது போராளிகளையும், ஒருசில வேளைகளில் தமக்கு இடைஞ்சலாக உள்ள ஒட்டுக்குழு உறுப்பினர்களையும் ஜிகாத் குழுவினர் கொலை செய்து வருகின்றனர்.
இவர்களைத் தவிர, கருணா 2004 ஏப்ரலில் அடைக்கலம் தேடிக் கொழும்புக்குச் சென்ற போது அவரது சகாக்களால் ஐநூறு, ஆயிரம் ரூபாய்க்கென விற்கப்பட்ட ஆயுதங்களும் கூட முஸ்லிம்களிடம நிறையவே உள்ளன.
இந்நிலையில், சாந்தனை விடுதலைப் புலிகளே சுட்டுக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத பிள்ளையான் குழு, பழியை முஸ்லிம்கள் மீது போட்டுவிட்டு துப்பாக்கிப் பிரயோகம், கடத்தல் என வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளது. தனது பேச்சாளராக முஸ்லிம் ஒருவரைக் கொண்டுள்ள பிள்ளையான் குழுவால் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயற்பட முடியும்? தனது அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சரை வைத்துக்கொண்டு தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து அவரால் எவ்வாறு காப்பாற்ற முடியும்?
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரை முஸ்லிம்களின் முதன்மைப் பிரதேசமாக காத்தான்குடியே விளங்கி வருகின்றது. முஸ்லிம்களின் கருத்துருவாக்கம் இங்கிருந்து வருவதை விரும்பாத ஏறாவூர், ஓட்டமாவடி ஆகியவை எப்போதுமே காத்தான்குடியின் தலைமைத்துவத்தை நிராகரிப்பவர்களாக இருந்து வருகின்றன. இந்த முரண்பாடு தேர்தல் சமயங்களின் போது துலாம்பரமாக வெளிப்படுபதைக் காணலாம்.
சனத்தொகை நிறைந்த பிரதேசமான காத்தான்குடி தனது இரு மருங்கிலுமுள்ள தமிழ்ப் பிரதேசங்களில் ஆக்கிரமிப்புச் செய்வதும், இதனால் தமிழ் மக்களோடு அடிக்கடி உரசல்கள் ஏற்படுவதும் வழக்கமானது. சனத்தொகைப் பெருக்கத்திற்கேற்ப இடவசதி மற்றும் ஏனைய வசதிகள் இல்லை என்பதனால் ஆரையம்பதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கையகப்படுத்துவதில் 1978 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வரையறுக்கப்பட்ட ஆரையம்பதி எல்லைக்குள் காத்தான்குடி நகர சபை மூக்கை நுழைப்பது முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதனால் ஆரையம்பதியினுடைய பல நிலப்பரப்புக்கள் பறிபோய் விட்டன. இப்போது ஆரையம்பதி மக்கள் சுற்றியுள்ள 46 இந்துக்கோயில் திருவிழாக்களுக்காக தீர்த்தமாடுவதற்காகக் கூட கடற்கரைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. (இதே போன்ற நிலை காத்தான்குடியின் வடக்கு எல்லையான கல்லடி - மஞ்சந்தொடுவாய் பகுதியிலும் உள்ளது.)
1978 ஆம் ஆண்டில் ஆரையம்பதி கிழக்குப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் அரசும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இணைந்து செயற்படுத்திய திட்டத்தினால் கர்பலா என்ற கிராமம் உருவாக்கப்பட்டது.
தற்போதைய நிலையில் ஆரையம்பதியைச் சுற்றி காங்கேயனோடை, ஒல்லிக்குளம், கிச்சான் பள்ளம், சிகரம், பாலமுனை எனப் பல முஸ்லிம் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்தகைய செயற்பாடுகளால், தமிழ் - முஸ்லிம் உறவு என்பது எப்போதும் வெடிக்கக்கூடிய ஒரு கொதி நிலையிலேயே இருந்து வருகின்றது.
சாதாரண முஸ்லிம் மக்களைப் பொறுத்த வரை அவர்கள் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ விரும்பினாலும், பல்வேறு காரணங்களால் முஸ்லிம் மக்கள் என்ற வட்டத்துக்குள் நின்றே செயற்படுகிறார்கள். இது அரசியல்வாதிகள் அவர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.
1990 இல் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை வருடா வருடம் பாரிய நினைவு கூரலாக அனுட்டிக்கப்பட்டு வருவதன் ஊடாக பழைய விடயங்கள் மக்கள் மனதில் இருந்து மறக்கப்பட்டு விடாமல் பார்த்துக்கொள்ளப்படுகின்றது.
இதேவேளை, காத்தான்குடியில் கொல்லப்படும் தமிழர்கள் யாவரும் முஸ்லிம்களால் கொல்லப்பட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எழுப்பப்படுவது வழமையாகி விட்டது. இந்தப் பின்னணியிலேயே சாந்தனின் கொலையும் ஜிகாத்தினால் செய்யப்பட்டது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வரதன் மற்றும் ரெலோ அமைப்பின் அன்வர் ஆகியோரை சாந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட அதே இடத்திலேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் முஸ்லிம் தீவரவாதத்துக்கு எதிரான கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். அதனால் இவர்கள் முஸ்லிம்களாலேயே சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற பேச்சுக்கள் அடிபட்டன.
இவை தவிர, ஆரையம்பதி எல்லை விவகாரத்தில்; தமிழர்களுக்குச் சார்பாக இருந்த விடுதலைப் புலிகளின் லக்ஸ்மன் என்றழைக்கப்பட்ட வரதன், ஆனைக்குட்டி, நீலன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் ரெலோவின் மத்திய குழு உறுப்பினராகவும் ஆரையம்பதி பிரதேச சபைத் தவிசாளராக இருந்தவருமான க.நவரத்தினராசா (ரொபர்ட்) அவர்களும் சுட்டுக்கொல்லபட்டார். இவர்களின் கொலைகளிலும் முஸ்லிம்களே சம்பந்தப்பட்டடிருந்ததாக அப்போது கதைகள் அடிபட்டன.
சாந்தன் முஸ்லிம் ஆயுதக்குழுவான ஜிகாத்தால் சுட்டுக்கொல்ப்பட்டிருக்கலாம் என்று கூறுவதற்கு வேறொரு காரணமும் முன்வைக்கப்படுகின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல் சமயத்தில் கிழப்பி விடப்பட்ட இனவாதம், தேர்தல் முடிவடைந்த பின்னர் முதலமைச்சர் நியமனத்தில் காத்தன்குடியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாவிற்கும் பிள்ளையானுக்கும் ஏற்பட்ட இழுபறி, இதனையொட்டி காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கதவடைப்பு என்பவை இக்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
காரணம் எதுவானாலும், மட்டக்களப்பைப் பொறுத்த வரை தமிழ்-முஸ்லிம் உறவு என்பது மிக மோசமான கட்டத்திலேயே இருப்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில் இனவாதத்தைக் கிளப்பி விட்டவர் யாராக இருந்தாலும் முஸ்லிம்களின் செயற்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதை அண்மைய நாட்களில் உணர்ந்திருப்பர்.
கடத்தப்பட்ட ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம்கள் இருவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அமைதியான முறையில் ஏறாவூரில் நடைபெற்ற ஹர்த்தால், ஏறாவூரின் எல்லைக் கிராமமான ஐயங்கேணியில் வைத்து மிராகேணியைச் சேர்ந்த இரு முஸ்லிம் வர்த்தகர்கள் பிள்ளையான் தரப்பினரால் கடத்தப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை நிறைந்ததாக மாறியது. அதனால், வீதியில் திரண்ட முஸ்லிம் இளைஞர்கள் வாகனங்களுக்கு கல் எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
இதன்போது, விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒரு வயோதிப் பெண் கொல்லப்பட்டதுடன் முஸ்லிம் இளைஞர்கள் இருவர் காயமடைந்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறையினை அடக்க படையினர் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கையில் 1,500-க்கும் அதிகமான ஈருருளிகளும் பத்திற்கும் மேற்பட்ட உந்துருளிகளும்; காவல்துறையினரால் சேதப்படுத்தப்பட்டதுடன் கைப்பற்றவும்பட்டன. 24 இளைஞர்கள் கைதாகித் தடுத்து வைக்கப்பட்டும் உள்ளனர்.
ஏறாவூரில் அமுலுக்குக்குக் கொண்டு வரப்பட்ட ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் மாறி மாறி அமுல்படுத்தப்படுவதாகவே இருக்கிறது. மட்டக்களப்பில் அமைதி நிலவுவதாகவும் வழமை நிலை தோன்றியுள்ளதாகவும் அரச தரப்பினர் வெளிப்படுத்த நினைத்தாலும் அது சாத்தியமற்றதாகவே இருக்கிறது.
கடும் போக்காளர்களான சிங்களப் பேரினவாதிகள் தமது செயற்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்தியதாக இதுவரைக்கும் எந்தவிதமான வரலாறுகளும் இல்லை. 40.1 வீதமான முஸ்லிம்களும் 39.9 வீதமான தமிழர்களும் சுமார் 20 வீதமான சிங்களவர்களும் வாழும் பிரதேசமாக கிழக்கு மாகாணம் உள்ளது. ஆரம்ப கால சிங்களக் குடியேற்றங்களுக்கு முன்னர் இருந்த தமிழர்களது தொகை மிகவும் குறைவடைந்துள்ளது. இது கிழக்குத் தேர்தலின் முடிவிலிருந்தும் புலப்படுவதாக இருந்தது.
வடக்கு - கிழக்கில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம் சமூகம் மேலும் சிறுமைப்படுத்தப்பட்டதையடுத்து காலம் சென்ற முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கட்சியைத் தோற்றுவித்து இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சம அந்தஸ்தினை கோரியிருந்தார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் தன்மானத்தோடும் சுய பாதுகாப்போடும் கிழக்கு மகாணத்தில் வாழவேண்டும் என்பதற்காகவே அவர் இணைந்த வடக்கு - கிழக்கில் முஸ்லிம்களுக்கென்று சம அந்தஸ்தினைக் கோரியிருந்தார். இந்த அடிப்படையில் செயற்படும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் நடந்து கொண்டிருக்கும் கலவரங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் இப்போது தோன்றியிருக்கின்றது.
எது எவ்வாறானாலும் கிழக்கில் அதுவும் மட்டக்களப்பில் ஏற்பட்டிருக்கின்ற தமிழ் முஸ்லிம் முறுகலானது சாதாரணமான மக்களிடையே ஏற்பட்டதல்ல. கிழக்கில் பலத்துடன் செயற்பட்டு வரும் பிள்ளையான் தரப்பினருடன் ஏற்பட்டிருக்கிறது. இப்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சினை இன்னும் சில தினங்களில் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதாக அமைந்தாலும் நீண்ட காலத்தில் முஸ்லிம் ஆயுதக்குழுவிற்கு பெரும் கெடுபிடியை ஏற்படுத்தும் என்பதில் இரண்டுபட்ட கருத்துக்கு இடமில்லை. ஏனெனில், இன்றைய காலகட்டத்தில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு மிகத் தேவைப்படுபவர்களாக இருப்பது பிள்ளையான் குழுவே.
இதேவேளை, நடைபெற்று வரும் சம்பவங்கள் ~கிழக்கில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டு விட்டது| எனப் பறைசாற்றிக் கொண்டிருந்த அரசுக்கு தலையிடிக்கு மேல் தலையிடியைத் தந்த வண்ணம் இருக்கிறது.
தமிழர்களுக்கு தீர்வொன்றை முன்வைத்து விட்டதாக உலகிற்குக் காட்டுவதற்கும், கிழக்கை முழுமையான சிங்கள மயமாக்குவதற்குமே கிழக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அத்துடன் தமிழ் - முஸ்லிம் உறவினுள் விரிசலை உருவாக்கி இலாபமடைய பேரினவாதம் திட்டமிட்டிருக்கிறது. இத்திட்டம் பலித்து வருவதாக அவதானிக்க முடிகிறது.
'தனது மேலாதிக்கப்போக்கை மேலும் பலமுடையதாக வைத்திருக்க வேண்டிய தேவையை உணர்ந்திருக்கும் அரசு ஆயுத பலத்துடனுள்ள பிள்ளையானை முதலமைச்சாராக்க ஹிஸ்புல்லாவுக்கு கைவிரிக்கும் நிலை ஏற்பட்டால் கிழக்கில் தமது ஆயுதப் பலத்தை முஸ்லிம் தரப்பு பயன்படுத்த முனையலாம் என்ற அச்சம் இப்போது தோன்றியிருக்கிறது. தம்மிடமுள்ள ஆயுதங்களை குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்தி வரும் ஒருதரப்பு தமது பலத்தைக் காட்டுவதற்காக பயன்படுத்த முனைந்தால் அதன் விளைவு பெரும் சிக்கலை தமிழர் தரப்புக்குத் தரலாம்" என சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
ஹிஸ்புல்லா தனது பிரதேசமான காத்தான்குடியில் வன்முறைகள் இடம்பெறுவதைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார். அரசின் கீழ் அமைச்சராக இருக்கும் அமீர் அலி தனது பிரதேசமான ஓட்டமாவடியையும் வன்முறைகள் இன்றி வைத்திருக்கிறார். ஆனால், ஏறாவூர் பிரதேசம் இவை இரண்டிற்கும் இடையில் உள்ள பிரதேசமாகும். ஏறாவூர் பிரதேசத்தில் இன்றுள்ள தலைவராகக் கருதப்படும் பசீர் சேகுதாவூத் ஹிஸ்புல்லாவுக்கு எதிரான அணியைச் சேர்ந்தவர் என்பதால் வன்முறைகளின் பின்னணியில் அவர் இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் தொடங்கி ஏறாவூரில் மையம் கொண்டிருக்கும் இப்போதைய வன்முறைக்கு விரைந்த தீர்வு எட்டப்படாவிட்டால் முஸ்லிம் சமூகம் நீண்டகால நோக்கில் அவர்களுடைய வியாபாரம் சம்பந்தப்பட்ட இழப்பினைப் பெருமளவில் சந்திக்க வேண்டி ஏற்படலாம்.
தற்போதைய நிலையில் தமிழர்களை மாத்திரம் கடத்தி வரும் பிள்ளையான் குழு முஸ்லிம்களையும் மையப்படுத்தி இனச் சுத்திகரிப்பில் ஈடுபட முனைந்தால் கிழக்கில் முஸ்லிம்களுடைய இருப்பு நிச்சயமாக சஞ்சலத்துக்குள் தள்ளப்படும்.
'கிழக்கு மாகாணம் முஸ்லிம்களது தாயகம் வடக்கு மாகாணமே தமிழர்களது தாயகம். எனவே கிழக்கு மாகாணத்தின் அரசு முஸ்லிம் சமூகத்தினால் நிர்வகிக்கப்பட வேண்டும்" என்ற சிந்தைனையுடன் செயற்படும் முஸ்லிம் தலைமைகள் சில கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சாராக நியமிக்கப்படாதமைக்கான எதிர்ப்பை இன்னமும் காட்டிய வண்ணமேயே இருக்கின்றனர்.
தமிழர் தாயகத்தைத் துண்டாடுதல், சர்வதேசத்திடமிருந்தான நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்ளுதல், சிங்கள மக்களை திருப்திப்படுத்துதல் போன்ற நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நடத்தப்பட்ட கிழக்கு தேர்தல் இப்போது தமிழ் பேசும் இனங்களுக்;கு இடையே முறுகலுக்கு வழிவகுத்து நிற்பது அரசுக்குப் பெரும் தர்மசங்கடத்தைத் தோற்றுவித்துள்ளது.
நீண்ட இன மோதலை ஏற்படுத்துவது அரசின் நோக்கமாக இருந்தால் பிள்ளையான் குழுவினரைப் பயன்படுத்தி அரசு முஸ்லிம் ஆயுதக்குழுக்களை அழிக்க முனையலாம்;.
அத்தகைய நோக்கம் இல்லாவிட்டால், குழம்பிப் போயுள்ள மட்டக்களப்பில் கேள்வியாகியுள்ள அமைதி நிலையைக்கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முஸ்லிம் தலைமைகளுடன் கடுமையாக உழைக்க வேண்டும்.
நன்றி: நிலவரம் (30.05.08)
கடற்புலிகளின் மற்றுமோரு அதிர்சி தரையிறக்கம்-வீரகேசரி சுபத்திரா
யாழ்ப்பாண நகருக்கு மிக நெருக்கமாக உள்ள சிறுத்தீவில் கடற்புலிகளின் விசேட கொமாண்டோ அணியினர் நடத்தியிருக்கும் தாக்குதல் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக் கிறது. கடந்த வியாழனன்று (29) அதிகாலை 1.25 மணியளவில் சிறுத்தீவில் தரையிறங்கிய கடற்புலிகள் அங்கிருந்த இராணுவ கடற்படை கூட்டு அவதானிப்பு நிலையத் தைத் தாக்கிய ழித்து அங்கிருந்த ஆயுத தளபாடங்களுடன் தப்பிச் சென்றிருக்கின்றனர்.
பூநகரியில் இருந்து எட்டு படகுகளில் யாழ்.
கடனீரேரியினுள் பிரவேசித்த கடற்புலிகள் மண்டைதீவில் உள்ள கடற்படையின் "வேலு சுமண' என்ற பாரிய தளத்தைக் கடந்து சென்றே இந்தத் தாக்குதலை நடத்தியிருக்கின்ற னர். சிறுத்தீவு என்பது யாழ். நகருக்கும் மண் டைதீவுக்கும் இடையில் உள்ள சிறியதொரு தீவாகும். யாழ்.நகரில் கோட்டைப் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவி லேயே இது இருக்கிறது.
மக்கள் வசிக்காத இந்தத் தீவில் சிறியதொரு கத்தோலிக்க தேவாலயம் மட்டுமே இருக்கி றது. ஆண்டுக்கொருமுறை நடைபெறும் திரு விழாவுக்குத் தான் இங்கு மக்கள் செல்வர்.
அதேவேளை யாழ்.கடலேரியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இந்தத் தீவில் தங்கி ஓய் வெடுப்பது வழமை.
மண்டைதீவில் உள்ள கடற்படையின் பாரிய சிறுத்தீவில் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள், நவீன 50 கலிபர் துப்பாக்கிகள், மோட்டார்கள் போன்ற ஆயுதங்கள், ரேடர் கண்காணிப்பு நிலை என்பன அமைக்கப்பட்டன.
மண்டைதீவு நோக்கி தாக்குதல் நடத்தப்பட் டால் அதை முறியடிக்கவும், யாழ். நகருக்கான மேலதிக பாதுகாப்பை உறுதிப்படுதவுமே சிறுத்தீவில் பலமான பாதுகாப்பு நிலைகள் அமைக்கப்பட்டன. இந்த கூட்டு அவதானிப்பு தளத்தில் கடற்படை மற்றும் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு சிறிய படைப்பிரிவுகள் தங்கி யிருந்தன. யாழ். நகருக்கு மிகவும் அருகி லேயே அதாவது யாழ். நகர கரையோரப் பகுதிகளில் நடமாடுவோரை வெற்றுக் கண் ணால் அவதானிக்கக் கூடியளவுக்கு அருகி லேயே இந்த சிறுத்தீவு அமைந்துள்ளது.
பதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா போன் றோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
சிறுத்தீவில் இருந்து இராணுவத்தினர் சிறிய படகுகள் மூலம் கோட்டையை அண்டிய பகுதி களில் தரையிறங்கி முற்றுகையை முறியடித் துப் படையினரை மீட்பதே இந்தத் திட்டம்.
ஆனால் இந்த திட்டத்தை முறியடித்த புலிகள் 25 இற்கும் அதிகமான படையினரைக் கொன்று விமானப்படையின் சியாமாச்செட்டி குண்டுவீச்சு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
கோட்டை முற்றுகையை முறியடிக்க பிரதான தாக்குதல் மையமாக இருந்த சிறுத்தீவில் இருந்த கடற் படை இராணுவக் கூட்டு அவதா னிப்பு நிலையமே கடற்புலிகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கிறது.
இந்தளவுக்கும் படையினர் கடலேரிப் பகுதியில் புலிகளின் ஊடுருவலைத் தடுக்க சிறுத்தீவு, மண்டைதீவு, வேலணை, கிளாலி போன்ற இடங்க ளில் பல ரேடர் அவதானிப்பு நிலை யங்களை அமைத்திருந்தனர்.
ஆனால், இந்த ரேடர் திரைகளில் படகுகளின் இயந்திரங்களின் இயக் கத்தைக் கொண்டே ஊடுருவலை அவதானிக்க முடியும். ஆனால், புலி கள் படகுகளின் இயந்திரங்களை இயக்காமலே ஒரு தொகுதி போராளி களை தரையிறங்கியிருக்கின்றனர்.
இரண்டு படகுகளில் சென்ற புலிகள் தரையிறங்கிய பின்னர் ஆறு அதிவே கப் படகுகளில் சென்ற மேலும் ஒரு தொகுதிப் புலிகள் தாக்குதலைத் தொடுத்து படையினருக்குப் பேரதிர்ச்சியைக் கொடுத் திருக்கின்றனர்.
இரண்டாவது தொகுதி படகுகள் பூநகரியில் இருந்து புறப்பட்டதுமே யாழ். கரையோரப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருந்த டாங்கிகளில் தளத்துக்குப் பாதுகாப்பாக இந்தத் தீவிலும் படையினர் கண்காணிப்பு நிலைகளை அமைத்து தங்கியிருந்தனர். கடந்த 2006 ஓகஸ்ட் 11ஆம் திகதி புலிகள் மண்டைதீவில் தரையிறங்கி அல்லைப்பிட்டி வரை முன்னே றிச் சென்றிருந்தனர். பின்னர் புலிகள் அங்கி ருந்து பின்வாங்கியதை அடுத்து தீவகத்தின் பாதுகாப்பில் படைத்தலைமை கூடுதல் அக்கறை செலுத்தி வந்தது. குறிப்பாக, மண் டைதீவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இதன் காரணமாக 1990ஆம் ஆண்டு யாழ்.
கோட்டையைப் புலிகள் முற்றுகையிட்டிருந்த போது, தீவகத்தில் இருந்து உதவி மீட்பு நட வடிக்கை ஒன்றை அப்போதைய வடபகுதி இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் டென்ஸில் கொப்பேகடுவ மேற்கொண்டார்.
தற்போதைய பாதுகாப்பு செயலரும் அப் போது லெப். கேணலாக இருந்தவருமான கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் இராணுவத் தள இருந்தும் யாழ். நகரப் பகுதியில் உள்ள பல் குழல் பீரங்கி நிலையில் இருந்தும் மற்றும் குடாநாட்டில் உள்ள பல்வேறு ஆட்டிலறி தளங்களில் இருந்தும் கடலேரியை நோக்கி உக்கிரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஆனால் இந்தத் தாக்குதல்களுக்கு மத்தியில் கடற்புலிகள் சிறுத்தீவில் தரையிறங்கி சுமார் 35 நிமிடச் சமரையடுத்து அதிகாலை 2மணியள வில் அந்தத் தளத்தைக் கைப்பற்றினர். அங்கி யடித்து விட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால் சிறுத்தீவைக் கைப்பற்றி நிலைகொள்வது அவர்களின் இலக்காக இருந்திருக்க வாய் பில்லை. அப்படி நிலை கொள்வதைப் போன்ற ஆபத்தான விடயம் வேறேதும் இருக் கவும் முடியாது. புலிகளின் ஒரு படகைத் தாம் மூழ்கடித்து விட்டதாகவும் மேலும் மூன்று பட குகள் தமது ஆட்டிலறித் தாக்குதல்களில் சேத முற்றதாகவும் தெரிவித்திருக்கும் படைத்தரப்பு புலிகள் தரப்பில் 15 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அதேவேளை சிறுத்தீவில் தரையிறங்கிய பின்னர் படையினரின் ஷெல் தாக்குதலில் பலத்த சேதமுற்ற டிங்கி படகு ஒன்றைப் புலி கள் சிறுத்தீவில் கைவிட்டுச் சென்றிருப்பதாகத் தெரியவருகிறது. இந்தத் தாக்குதலில் கடற் படை யினர் இருவரும், இராணுவத்தினர் இரு வருமாக மொத்தம் 4 படையினர் கொல்லப் பட்டு 3 பேர் காயமுற்றதாகப் படைத்தரப்பு தெரிவித்துள்ளது. கடற்படைப் பேச்சாளர் புலிகள் பெரியளவில் ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லவில்லை என்றும் சிறுத்தீவில் ருந்த 3 படையினரின் சடலங்களையும்,பெருமளவு ஆயதங்கள், ரேடர் என்பன வற்றையும் புலிகள் அள்ளிக் கொண்டு சென்று விட்டனர். ஓரிரு மணிநேரத் துக்குள் புலிகளின் அணிகள் பூநகரிக்குத் திரும் பிவிட்டன. தமது தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை என்றும் படையினர் தரப்பில் 13பேர் கொல்லப்பட்டதாகவும் புலிகள் அறி வித்துள்ளனர்.
அதேவேளை படைத்தரப்போ புலிகள் சிறுத்தீவில் ஊடுருவ எடுத்த முயற்சியை குறி ரேடர் நிலையே இருக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் புலிகள் தாம் கைப்பற் றிய ஆயுதங்களை கிளிநொச்சியில் செய்தியாளர்களுக்கு காண்பித்ததுடன் அதுபற்றிய படங் கள் தமிழ்நெட் இணையத்தளத்திலும் வெளி வந்திருந்தன.
ரேடர்01, 50கலிபர் துப்பாக்கி01, ஆர்பிடி எல்எம்ஜி01, ஏகே எல்எம்ஜி01, 60மி.மீ மோட்டார்01, 40மி.மீ றொக்கட் லோஞ்சர் 01, ரி56 துப்பாக்கிகள்04, 60மி.மீ ஷெல் 141 மற்றும் பல்வேறு வெடிபொருட்கள், ரவைகள், படைத்ள பாடங்கள் என்பன வற்றைப் புலிகள் கைப்பற்றியதாக தெரிவித்துள்ளனர். புலிகள் கைப்பற்றிய ஆயுதங்கள் அவர்களிடம் முன்னரே உள்ள வகைகளைச் சேர்ந்தவையே என்பதால் இதனால் எந்தத்தாக்கமும் புதிதாக ஏற்பட்டு விடப்போவதில்லை.
ஆனால், கடற்புலிகள் சிறுத்தீவு வரை ஊடு ருவி வந்து தாக்குதலை நடத்தி படையினரின் சடலங்களோடு தப்பிச் செல்லும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருந்திருக்கிறதே என்பதுதான் படைத்தரப்புக்கு சங்கடமான விடயம். கடற்புலிகள் கடந்த வருடம் மே மாதத்தில் நெடுந்தீவில் உள்ள "குயின்ராக்' கடற்படை அவதானிப்பு நிலையை தாக்கிய ழித்திருந்தனர். 1991ஆம் ஆண்டில் கடற்புலி கள் சிறியளவில் இயங்கத் தொடங்கியபோது பூநகரியில் இருந்த இராணுவத் தளத்துக்கு துணையாக யாழ். கடலேரியில் உள்ள மான் தீவில் இருந்த இராணுவக் காவலரணை அழித் திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவுத் தாக்குதலுக்குப் பின்னர் கடற் புலிகள் கடற்படைப் படகுகளை இலக்கு வைத்து சில தாக்குதல்களை நடத்தியிருந்தனர்.
கடந்த மாதத் தொடக்கத்தில் மன்னார்தீவில் கொந்தாப்பிட்டியில் இருந்த கடற்படைக் காவலரணையும் கடற்புலிகள் படகுகளில் சென்று தாக்கி ஒரு படைச் சிப்பாயின் சடலம் மற்றும் ஆயுதங்களுடன் திரும்பிச் சென்றிரு தனர்.
கடற்புலிகள் இத்தகைய கொமாண்டோ தாக் குதல்களை தொடர்ந்து நடத்தப் போகின்றனரா என்ற கேள்வியை, தொடர்ச்சியாக நடந்து வரும் இந்தத் தாக்குதல்கள் எழுப்பியிருகின் றன. அதேவேளை, யாழ்ப்பாணத்தின் பாது காப்பு பற்றி பெரும் பிரசாரம் முன்னெடுக்கப் பட்ட நிலையில் நகருக்கு அருகே வரை புலிகள் வந்து சென்றது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதுடன், பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளையும் இனங்காட்டியிருக்கிறது.
மண்டைதீவில் விடுதலைப் புலிகள் தரையிறங்கலாம்: "லக்பிம" வார ஏடு
யாழ். தீவகம் மண்டைதீவுக்கு அண்மையில் உள்ள சிறுத்தீவு கடற்படைத்தளம் மீது கடந்த கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதலை நோக்கும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. |
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு ஆய்வுப் பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: மருதானை - பாணந்துறை தொடருந்தில் கடந்த வாரம் இடம்பெற்ற குண்டுவெடிப்பு பெரும் பதற்றத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, வில்பத்து சரணாலயப்பகுதியில் உள்ள இராஜாங்கன பகுதியில் உள்ள ஜாயா 18 பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் ஊர்காவல் படையினருக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். வன்னிப்பகுதியில் நடைபெற்ற கிளைமோர்த் தாக்குதலில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்தே பாணந்துறை தொடருந்து மீதான குண்டுத்தாக்குதல் நடைபெற்றது. வன்னியில் நடைபெற்ற தாக்குதலை இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினரே நடத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகள் நடத்திய அதிர்ச்சிகரமான தாக்குதல் சிறுத்தீவில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2:00 மணியளவில் விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அதிர்ச்சிகரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். சிறுத்தீவு யாழ்பாணத்திற்கும் மண்டைதீவுக்கும் இடையிலான நீரேரியில் அமைந்துள்ளது. அதிகாலை பூநகரியின் கல்முனைப் பகுதியில் இருந்து 8 படகுகளில் வந்த விடுதலைப் புலிகளே தாக்குதலை நடத்தினர். கல்முனைப் பகுதியானது சிறுத்தீவில் இருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. தாக்குதல் நடைபெற்ற போது சிறுத்தீவில் உள்ள படைநிலையில் 15 கடற்படையினரும் 6 இராணுவத்தினரும் பணியில் இருந்தனர். இத்தாக்குதலில் இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இராணுவத்தரப்பைச் சேர்ந்த ஒருவரும், 2 கடற்படையினரும் காணாமல் போனதாகவும் இருவர் காயமடைந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்திருந்தது. எனினும் இத்தாக்குதலில் 13 கடற்படையினர் கொல்லப்பட்டதுடன் மூவரின் சடலங்களும் பெருமளவிலான ஆயுதங்களும் தம்மால் கைப்பற்றப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். இச்சமரின் போது இரு தரப்பும் செறிவான பீரங்கித் தாக்குதல்களையும் மேற்கொண்டிருந்தனர். படையினாரின் கவனத்தை திசை திரும்பும் முகமாகவே விடுதலைப் புலிகள் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். பூநகரியின் கல்முனைப் புள்ளியானது விடுதலைப் புலிகளின் பிரதான பீரங்கித் தளமாகும். இங்கு இருந்து ஏவப்படும் 130 மி.மீ பீரங்கி எறிகணைகள் பலாலி கூட்டுப்படைத்தளத்தை தாக்கும் திறன் கொண்டது. எனினும் அதன் ஒடுக்கமான தரையமைப்பு சில பிரதிகூலங்களையும் கொண்டுள்ளது. மேலும் கல்முனைப் புள்ளியானது கடற்புலிகளின் தாக்குதல் பின்தளமாகும். இது யாழ். நகரில் இருந்து 6 கி.மீ அகலமான கடல் நீரேரியின் மறுபக்கத்தில் அமைந்துள்ளது. 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற தாக்குதலின் போதும் விடுதலைப் புலிகள் மண்டைதீவில் தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்தனர். வியாழக்கிழமை நடைபெற்ற தாக்குதல் தமிழ் மக்களுக்கு உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பெரும் உளவியல் உறுதிகளை ஏற்படுத்தியிருக்கும். எனினும் இத்தாக்குதலை நோக்கும் போது விடுதலைப் புலிகள் மண்டைதீவில் பெரும் தரையிறக்கத்தை மேற்கொள்ளலாம் என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன. அது சாத்தியமானால் யாழ். குடாநாட்டின் நிலமை மேலும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்பதையும் நிராகரிக்க முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
புதிதாக உருவாகும் 61 வது சிங்களப்படை டிவிசன் போரில் திருப்பங்களை தருமா-வீரகேசரி சுபத்ரா
போர்அரங்குகளில் படைத் தரப்பு அகலக்கால் விரிக்கத் தொடங் கியுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட பிரதேசங் களைப் பாதுகாப்பது பெரும் சிரமமான காரியமாகி வருகிறது. இந்தச் சிக்கல்களைச் சமாளிக்கும் நோக்கில் அவசர அவசரமாக புதிய டிவிசன் (படைப்பிரிவு) ஒன்றை உரு வாக்கும் நடவடிக்கைகளை இராணுவத் தலைமை மேற் கொண்டிருக்கிறது.
61ஆவது டிவிசன் என்ற குறியீட்டுப் பெய?ல் அமைக்கப்படவுள்ள இந்த டிவிசன் இலங்கை இராணுவத்தின் 13ஆவது டிவினாகும். பனாகொடவைத் தலைமையகமாகக் கொண்டு செயற்படும் 11ஆவது டிவிசன் தென் னிலங்கையின் பாதுகாப்பைக் கவனிக்கிறது. அனுராதபுரம், மன்னார், வவுனியா மாவட் டங்களின் பின்னிலைப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 21 ஆவது டிவிசன் இயங் குகிறது.
திருகோணமலையை மையமாகக் கொண்டு வடக்கே மணலாறு முதல் தெற்கே வெருகல் வரையான பகுதிகளில் 22ஆவது டிவிசன் செயற்படுகிறது.
மின்னேரியாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள 23ஆவது டிவிசன் பொலனறுவ, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
யாழ்.குடாநாட்டில் வலிகாமம் பிரதேசத்தில் 51ஆவது டிவிசனும், வடமராட்சி தென்மராட் சிப் பகுதிகளில் 52ஆவது டிவிசனும் பாது காப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடு படுத்தப்பட்டுள்ளன. 53 ஆவது டிவிசன் கிளாலி முதல் முகமாலை வரையிலும், 55ஆவது டிவிசன் முகமாலை முதல் நாகர் கோவில் வரையிலுமாக 11கி.மீ நீளமான முன்னரங்க நிலைகளின் பாதுகாப்பில் ஈடுபடுத் தப்பட்டிருக்கின்றன.
வன்னியில் 56ஆவது டிவிசன் ஓமந்தை மற்றும் அதனை அண்டிய பகுதிகளின் முன்னரங்க பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள அதே வேளை, 57ஆவது டிவிசன் கல்மடுவைத் தலைமையகமாகக் கொண்டு தற்போது பாலமோட்டை, விளாத்திக்குளம், பாலம்பிட்டி, மடு போன்ற பெரும் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ளது.
58ஆவது டிவிசன் மன்னார் கட்டுக்கரைக்குளத்தின் கிழ க்கு, வடக்கு பகுதிகள் முதற்கொண்டு திருக்கேதீஸ் வரத்துக்கு வடக்கே உள்ள பகுதிகள் வரை தமது முன்னரங்க நிலைகளை விஸ்தரித்து நிலை கொண்டிருக்கிறது.
இந்த வருடத் தொடக்கத்திலிருந்து முறைப்படி இயங்கத் தொடங்கிய 59ஆவது டிவிசன், மணலாறில் கொக்குத்தொடுவாய் முதல் எத்தாவெட்டுனுவௌ வரையான 12 கி.மீ நீளமான பிரதேசத்தில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான் இராணுவம் புதிதாக 61ஆவது டிவிசன் என்ற புதிய படைப்பிரிவை உருவாக்கும் காரியத்தில் ஈடுபட்டிருக்கிறது.
இது இராணுவத்தின் 13ஆவது டிவிசன் எனக் குறிப்பிடப்பட்டாலும் தற்போது நடைமுறையில் இயங்கக் கூடிய நிலையில் இருப்பது 12 டிவிசன்களேயாகும். 2000ம் ஆண்டில் ஆனையிறவில் இருந்த 54ஆவது டிவிசன் செயலிழந்து போய்விட்டது. அதை மீள் உருவாக்கம் செய்வதை படைத்தலைமை தவிர்த்து வருகிறது.
இராணுவத்தில் தற்போதிருக்கும் 11, 21, 22, 23, 51, 52, 56 ஆகிய டிவிசன்கள் முழுமையான தற்காப்பு படைப்பிரிவுகளாகவோ அல்லது அரைத் தாக்குதல் டிவிசன்களாகவோ தான் உள்ளன. 53, 55, 57, 58, 59 ஆகிய டிவிசன்கள் மட்டுமே தாக்குதல் டிவிசன்கள் ஆகும். இந்தநிலையில் புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவிசன் தாக்குதல் டிவிசனாக அல்லாமல் தற்காப்பு டிவிசனாகவே இயங்கப் போகிறது.
வவுனியா, மன்னார், மற்றும் மணலாறு அடங்கிய வன்னியின் முன்னரங்க நிலைகளின் பின்புறத்தில் 21, 22, 56 ஆகிய மூன்று டிவிசன்களைச் சேர்ந்த படையினர் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். இவை போதாதென்று மணலாறின் சில பகுதிகளைப் பாதுகாக்க 2500 பேர்கொண்ட விசேட அதிரடிப்படையும் களம் இறக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் புதிதாகக் கைப்பற்றப்படுகின்ற பிரதேசங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குப் போதிய படையினர் இல்லாததால் படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது.
குறிப்பாக 57ஆவது டிவிசன் வன்னியின் மேற்குக் களமுனைகளில் பெரும் பிரதேசத்தில் நிலைகொள்ள வேண்டியிருக்கிறது.
தற்காப்பில் கவனம் செலுத்திய படியே தாக்குதல் நகர்வுகளைச் செய்ய முடியாத நிலை 57ஆவது டிவிசனுக்குப் பாரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. 58ஆவது டிவிசனும் புதிதாகப் பல பிரதேசங்களைக் கைப்பற்றியிருக்கின்ற போதும் 57 ஆவது டிவிசன்தான் தற்காப்பு விடயத்தில் அதிக நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.
எனவே 57ஆவது டிவிசன் கைப்பற்றிய மடு அடங்கலான பிரதேசங்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே 61ஆவது டிவிசனை இராணுவத் தலைமை அவசரமாக உருவாக்கி வருகிறது. ஒரு டிவிசன் என்பது குறைந்தது மூன்று பிரிகேட்களைக் கொண்டதாக 9ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையான படையினரைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது இராணுவ நியமம்.
ஆனால் இலங்கை இராணுவத்தில் அப்படியான நிலையில் எந்த டிவிசனுமே இல்லை என்பது முக்கியமான விடயம்.
கடந்த வருடத்தில் இராணுவம் உருவாக்கிய 57 மற்றும் 58ஆவது டிவிசன்கள் அரைகுறையாகவே தொடங்கப்பட்டன.
இரண்டு பிரிகேட்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த டிவிசன்கள் பின்னர் புதிய படையினர் சேர்க்கப்பட்டு பயிற்சிகள் கொடுத்த பின்னரே முழுமைபடுத்தப்பட்டன. இப்போதும் அதே உத்தியைத் தான் படைத்தலைமை கையாள்கிறது.
புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவிசனில் 611மற்றும் 612 ஆகிய இரண்டு பிரிகேட்கள் மட்டுமே இருக்கும்.
தற்காலிகமாகவே இந்த ஏற்பாடு எனச் சொல்லப்பட்டாலும் இந்த பற்றாக்குறை நிலையை நீக்கமுடியுமா என்பதை படை ஆட்சேர்ப்புத்தான் தீர்மானிக்கும்.
இந்த டிவிசனுக்கு தேவைப்படும் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடந்த மாதம் பாகிஸ் தானுக்கு இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா விஜயம் செய்ததாகக் கூறப்பட்டாலும், சீனாவில் நீண்ட நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு அண்மையில் கொழும்பு வந்து சேர்ந்த தற்காப்பு ஆயுதங்களே இந்த டிவிசனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
61ஆவது டிவிசனின் கட்டளை அதிகா?யாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகல நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இந்த டிவிசனுக்கு பொருத்தமான அதிகா?களை நியமனம் செய்வது, படையினருக்கான மேலதிகப் பயிற்சிகள் வழங்குவது என்று படைத் தலைமை மும்மூரமான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறது. 61ஆவது டிவிசனின் உருவாக்கம் இராணுவத்தின் வரலாற்றில் முக்கியமான மைல்கல் என்று படைத் தரப்பு கூறிக் கொண்டாலும் இது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்ப்புக்கேற்ப செயற்படுமா என்றும் இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பது பொருத்தம்.
புதிய டிவிசன் தற்காப்பு நடவடிக்கைகளுக்கென்றே உருவாக்கப்படுகிறது. 1998ஆம் ஆண்டில் 56ஆவது டிவிசன் உருவாக்கப்பட்ட பிறகு இராணுவம் உருவாக்கும் புதிய தற்காப்பு டிவிசன் இதுவேயாகும். அப்போது "ஜயசிக்குறு' நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களைத் தக்கவைக்க போதிய ஆளணியில்லாததால் கடற்படை, விமானப்படை, பொலிஸார் என்று வன்னியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். அந்தக் கட்டத்தில்தான் தற்காப்புக்கான ஒரு டிவி சனை உருவாக்கும் நோக்கில் 56ஆவது டிவிசன் அமைக்கப்பட்டது.
ஆனால், புதிதாகச் சேர்ந்த மற்றும் தப்பியோடி மீள இணைந்த படையினரைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த டிவிசன், புலிகளின் ஓயாத அலைகள்3 தொடர் தாக்குதலுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் பின்வாங்கி ஒடியதன் விளைவாக, கைப்பற்றப்பட்ட பெரும் பிரதேசத்தை குறுகிய நேரத்தில் இழக்கின்ற நிலை ஏற்பட்டது.
தற்போது உருவாக்கப்படும் 61ஆவது டிவிசனும் புதிய படையினர் மற்றும் தப்பி ஓடி மீள இணைந்த படையினரைக் கொண்டே உருவாக்கப்படுவதால் இதன் தற்காப்புத் திறன் எந்தளவுக்கு வலுவான தாக இருக்கும் எனச் சொல்ல முடியாது.
எப்போதுமே தாக்குதல் டிவிசன்கள் முன்னேறிச் செல்ல தற்காப்பு டிவிசன்கள் கைப்பற்றிய இடங்களைப் பாதுகாப்பதே, கடந்த வருடத்தில் இரண்டு பிரிகேட்களுடன் ஆரம்பிக்கப்பட்ட 57 மற்றும் 58ஆவது டிவிசன்கள் பின்னர் புதிய படையினர் சேர்க்கப்பட்டு பயிற்சிகள் கொடுத்த பின்னரே முழுமைப் படுத்தப்பட்டன.
இப்போதும் அதே உத்தியைத் தான் படைத்தலைமை கையாள்கிறது படையினர் மத்தியிலான சலிப்பைப் போக்கி உற்சாகமான போரிடலுக்கு வழிவகுக்கும்.
ஆனால் இதுவரையில் வன்னியில் மேற்கொண்ட படைநகர்வுகள் அனைத்திலும் 57, 58, 59 போன்ற தாக்குதல் டிவிசன்களே, தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரண்டு பணிகளையும் கவனித்து வந்தன.
இந்த நிலையானது வன்னியில் படையின?ன் செயற் பாடுகளின் வேகத்தை குறைத்திருப்பதாக இராணுவ அதிகாரிகள் மத்தியில் கருத்து நிலவுகிறது. இந்த நெருக்கடியில் இருந்து 57ஆவது டிவிசனை விடுவிப்பது 61ஆவது டிவிசனின் முக்கிய பொறுப்பாக இருக்கும்.
57ஆவது டிவிசனில் நிலவிய ஆட்பற்றாக்குறை காரணமாக அதன் நகர்வுகளுக்கு விசேட படைப்பிரிவு துணையாக இருந்து செயற்படுகிறது. அதேவேளை 58ஆவது டிவிசன் அரைகுறையாக அதிரடிப்படை1 என்ற பெய?ல் உருவாக்கப்பட்ட காலம் முதல் கொமாண்டோ பிரிகேட்டைச் சேர்ந்த 2ஆவது மற்றும் 3ஆவது பற்றாலியன்கள் மன்னார் கள முனைகளில் படைநகர்வில் ஈடுபட்டு வருகின்றன.
53 ஆவது டிவிசன் என்ற சிறப்புப் படைப்பிரிவில் தான், முன்னர் விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ பி?கேட் என்பன 532 மற்றும் 533ஆவது பி?கேட் என்ற பெயர்களில் இயங்கி வந்தன. ஆனால், லெப். ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற சில காலத்தின் பின்னர், ஏற்படுத்திய மாற்றங்களை அடுத்து விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ படைப்பிரிவு என்பனவற்றை தனது நேரடிக் கண்காணிப்பில் ஒதுக்குப் படைப்பிரிவாக வைத்துக் கொண்டார். இந்தப் படைப்பிரிவைக் கொண்டே கிழக்கில் படைநகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
ஒரு பிரதேசத்திற்குள் மட்டுப்படுத்தியதாக அல்லாமல் வைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்த விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோப் படைப்பி?வு என்பன தற்போது வன்னிப் போர்அரங்கை விட்டு நகர முடியாத நிலையில் உள்ளன. இந்தநிலையில் 61ஆவது டிவிசன் களம் இறக்கப்பட்டால் தற்காப்பு படைவலிமை அதிகரிக்கும்போது ஒதுக்குப் படைபிரிவுகள் அந்தச் சிக்கலில் இருந்து விடுபடும் வாய்ப்புக் கிடைக்கும்.
தற்போதைய நிலையில் "ஓயாத அலைகள்' போன்ற பாரிய வலிந்த தாக்குதலை புலிகள் தொடுத்தால் படையினரால் எந்தவொரு தாக்குதல் டிவிசனையும் உதவிக்கு அனுப்பமுடியாத நிலைதான் உள்ளது. அப்படி அனுப்பப்படும் டிவிசன் குறித்த பிரதேசத்தின் நில ஆளுகையை இழக்கின்ற ஆபத்து ஏற்படும். இதனால்தான் ஒதுக்குப் படைகளை விடுவிக்கும் முயற்சி யில் படைத்தலைமை தீவிர கவனம் செலுத்துகிறது.
அதேவேளை கடந்த இரண்டு வருடங்களுக்குள் நான்கு டிவிசன்களை புதிதாக உருவாக்கியிருப்பதாக இராணுவத் தலைமை பெருமைப்பட்டுக் கொண்டாலும் இவை எந்தளவுக்கு செயற்திறன் வாய்ந்தவை என்ப தைத் தீர்மானிக்க இன்னமும் காலம் தேவைப்படுகிறது. கடைசியாக உருவாக் கப்பட்ட 59ஆவது டிவிசனை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் புதிய படையினரும் தப்பியோடி மீள இணைந்த படையினருமே இதில் உள்ளனர்.
இதன்காரணமாக மணலாறு களமுனையில் அனுபவம் வாய்ந்த ஒரே பற்றாலியனாக இருக்கும் 11ஆவது கெமுனுவோச் மட்டுமே படை நகர்வுகளில் அதிக வேகத்தைக் காண்பிக்கிறது.
57 மற்றும் 58ஆவது டிவிசன்களில் இருந்து விசேட படைப்பிரிவு மற்றும் கொமாண்டோ பிரிகேட் என்பன விடுவிக்கப்பட்டால் இந்த டிவிசன்களின் தாக்குதல் பலத்தையும் குறைத்தே மதிப்பிடும் நிலை ஏற்படும். பல புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டாலும் அவற்றின் அனுபவக் குறைவுதான் படைத்தரப்புக்கு இன்னொரு முக்கிய பிரச்சினையாக இருக்கும்.
அடுத்து புதிதாக உருவாக்கப்படும் 61ஆவது டிவி சனுக்கு கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் லலித் தவுலகல நியமிக்கப்படுவது பெரும்பாலும் உறுதியாகியிருக்கிறது. ஆனால் இவர் கடந்த காலத்தில் தலைமையேற்றிருந்த படைப்பிரிவுகள் புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட வரலாறும் இருக்கிறது.
1990ம் ஆண் டில் மேஜர் லலித் தவுலகல மாங்குளம் இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக இருந்தபோது தான் அந்த முகாமைப் புலிகள் தாக்கியழித்திருந்தனர்.
ஆனால் இவர் குறைந்த எண்ணிக்கையான படையின ருடன் தப்பிச் சென்றிருந்தார்.
பின்னர் 1999 டிசம்பரில் பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மையமாகக் கொண்டு செயற்பட்ட 545வது பி?கேட்டின் கட்டளை அதிகாரியாக கேணல் லலித் தவுலகல பதவியில் இருந்தபோதுதான் "ஓயாத அலைகள்3' படையணிகள் அந்தத் தளத்தைத் தாக் கியழித்து கைப்பற்றின. அதன் தொடர்ச்சியாகவே ஆனையிறவின் வீழ்ச்சி இடம்பெற்றது. இப்போது அவர் மேஜர் ஜெனரலாக பதவி வகிக்கிறார்.
57ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் மற்றும் 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரி பிரிகேடியர் சவீந்திர டி சில்வா போன்றோர் விடுமுறையில் சென்றிருந்த காலங்களில் மேஜர் ஜெனரல் லலித் தவுலகலவே இந்த டிவிசன்களின் பதில் கட்டளை அதிகாரி யாக கடமையாற்றியிருந்தார்.
ஆயினும் கடந்த காலத்தில் வன்னியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் இரு முக்கிய தளங்களை படையினர் இழந்தபோது அவற்றுக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் புதிய டிவிசனுக்கு கட்டளை அதிகாரியாக நியமிக்கப் பட்டிருப்பதும் முக்கியமான விடயமாகிறது.
பெரும் தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகள் தமது இலகுகாலாட் படையினருடன் ஈரூடகப்படையினரையும் பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகriத்துள்ளன-
வேல்ஸிலிருந்து அருஷ்
பிராந்தியத்தை நோக்கி கூர்மையடையும் உலகின் பூகோள அரசியல் இலங்கை இனப்பிரச்சினையில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
கடந்த 21 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமை சபையில் இருந்து இலங்கை வெளியேற்றப்பட்ட பின்னர் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பல தரப்பட்ட கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த முறை ஐ.நா. மனித உரிமை சபையின் உறுப்புரிமைக்காக நடைபெற்ற தேர்தலில் 123 வாக்குகளை பெற்றிருந்த இலங்கை இந்த முறை 101 வாக்குகளுடன் தோல்வியை தழுவிக் கொண்டுள்ளதும், பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் மனித உமை சபை வாக்கெடுப்பில் வெற்றியீட்டியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களாகும்.
மேலும் இலங்கையில் நடைபெறும் போரில் மக்கள் பெருமளவில் கொல்லப்படுவது தொடர்பாக ஐ.நா.வின் பாதுகாப்புச்சபை தனது கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதன் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை, சோமாலியா, சூடானின் டார்பர் பகுதி, பலஸ்தீனத்தின் காசா பகுதி, கொலம்பியா ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் போரினால் கடுமையான பாதிப்புக்களை அனுபவித்து வருவதாக தெ?வித்துள்ளது. பலவந்தமாக காணாமல்போகச் செய்தல் , நீதிக்கு புறம்பான படுகொலைகள், எழுந்தமானமான கைதுகள், துன்புறுத்தல்கள் என்பன 2007 ஆம் ஆண்டில் இலங்கையில் மோசமடைந்து காணப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் மக்கள் பலவந்தமாக காணாமல்போகின்றனர் என்றும் படையினரோடு இணைந்துள்ள ஆயுதக்குழுவினரே இந்த கடத்தல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருகையில் அரசின் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பான வெளிப்படையான கருத்துக்களும் தலை தூக்கி வருகின்றன.
இலங்கை அரசு மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக அதன் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளது முக்கியமானது.
அரசின் இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த வியாழக்கிழமை அதிகாலை வடபோர்முனையில் உள்ள சிறுத்தீவு பகுதியில் அமைந் திருந்த இராணுவ மற்றும் கடற்படை கூட்டுப்படை காவல்நிலை மீது விடுதலைப்புலிகளின் ஈரூடகப்படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சிறுத்தீவு, மண்டைதீவுக்கும் குருநகருக்கும் இடையில் அமைந்துள்ள சிறிய தீவாகும்.
அதற்கு அண்மையாக பூநகரியின் முனைப்பகுதி அமைந்துள்ளது. பூநகரியின் இந்த இந்த காவல்நிலையின் பாதுகாப்புக்கள், கடந்த வருடம் மே மாதம் நெடுந்தீவில் அமைந் திருந்த கடற்படையினரின் முகாம் விடுதலைப் புலிகளின் ஈரூடகப்படையினரின் தாக்குத லுக்கு இலக்கானதை தொடர்ந்து அதிகரிக்கப் பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் நகர்வுகளை கண் காணிப்பதற்காக சிறிய ராடார் நிலை ஒன்றும் அங்கு அமைக்கப்பட்டதுடன், ஏறத்தாள 2000 மீ. தூரவீச்சுக் கொண்ட 50 கலிபர் துப்பாக்கி, இலகு காலாட்படையினர் பயன்படுத்தும் 60 மி.மீ மோட்டார் என்பனவற்றுடன் இரண்டு பிரிவுக்குரிய தளமாக இந்த தளம் மாற்றமடைந்தது (பிரிவு என்பது இராணு வத்தின் மிகச்சிறிய பிரிவு, இது 7 தொடக்கம் 8 படையினரை கொண்டிருப்பதுண்டு) பூநகரி யின் கல்முனை புள்ளியில் உள்ள விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலையிடம் தொடர்பான தகவல்களை திரட்டும் மையமாகவும் இது தொழிற்பட்டு வந்தது.
அதிகாலையில் சமர் ஆரம்பித்ததும், சிறுத் தீவுக்கு அருகில் உள்ள மண்டைதீவு மற்றும் யாழ்.நகரப்பகுதியில் உள்ள இராணுவத்தளங் கள் உசார்படுத்தப்பட்டன. 2007 ஆம் ஆண்டு நெடுந்தீவில் அமைந்திருந்த கடற்படையின ரின் முகாமை விடுதலைப்புலிகள் தாக்கிய போதும், 51 ஆவது படையணியின் 2 ஆவது பிரிகேட்டை சேர்ந்த இரு பற்றாலியன்கள் தரையிறங்கிய புலிகளுக்கு எதிரான நடவடிக் கைக்கு தயார்படுத்தப்பட்டிருந்தன.
ஆழம் குறைந்த யாழ்.கடல்நீரேரியில் நீருந்து விசைப்படகுகள் மற்றும் சாதாரண படைத்துறை அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது பெரும் தாக்குதல் ஒன்று ஆரம்பிக்கும்போது விடுதலைப்புலிகள் தமது இலகுகாலாட் படையினருடன் ஈருடகப்படையிரையும் பயன்படுத்தும் சாத்தியங்கள் அதிகரித்துள்ளன. ஈரூடகப்படையினரை பொறுத்தவரையில் விரைவாக தரையிறங்கி எதிர்த்தரப்பு பாதுகாப்பு அரண்களை தாக்கி அழிப்பதன் மூலம் இலகுகாலாட்படையினரின் நகர்வை இலகுவாக்கும் தன்மை கொண்டவர்கள்.
இந்த நோக்கத்திற்காகவே உலகின் வலிமை மிக்க நாடுகள் ஈரூடகப்படையினரின்ன் நடவடிக்கைகளில் அதிகம் கவனம் செலுத்தி வரு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோர் மீது போரியல் குற்றம், இனஅழிப்பு போன்ற குற்றங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான கருத்துக்களை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் மனிதாபிமான பணிகளுக்கான பிரதிநிதி ஜோன் கோல்ம்ஸ் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் உலகளாவிய ரீதியில் மக்களை பாதுகாப்பதற்காக உத்தியோகப்பற்றற்ற நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு பாதுகாப்பு சபை தீர்மானித்துள்ளது.
போரில் பாதிக்கப்படும் பல மில்லியன் மக்களுக்கு உதவும் முகமாக இந்த நிபுணர் குழு அமைப்பது முன்னேற்றகரமானது என கோல்ம்ஸ் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துவரும் நாடுகளில் இலங்கையும் அடங்குவதாக அனைத்துலக மன்னிப்புச்சபை தனது 2008 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் முனைப்பகுதியில் இருந்து 6 விசைப்படகுகளில் வந்த புலிகளின் ஈரூடகப்படையினர் அதிகாலை 1.30 மணியளவில் சிறுத்தீவில் அமைந்திருந்த படை நிலை மீது தாக்குதல் நடத்தியதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்த தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதாகவும், 3 படையினரின் சடலங்களும், ராடார் சாதனங்கள், 12.7 மி.மீ கனரக இயந்திரத் துப்பாக்கி, 60 மி.மீ மோட்டார் உட்பட பெருமளவான ஆயுதங்களையும் வெடிபெருட்களையும் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் கைப்பற்றிய ஆயுத தளபாடங்களில் ஏறத்தாள ஒரு டசின் நச்சுவாயு பாதுகாப்பு முகமூடிகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாள 12 தொடக்கம் 18 பாதுகாப்பு தரப்பினர் இந்த சிறிய முகாமில் பணியாற்றுவது வழமை. யாழ்.குடாநாட்டின் தென்மேற்குபுற நுளைவாயிலில் சிறுத்தீவு அமைந்திருப்பதனால் விடுதலைப்புலிகள் கடல் வழியாகவோ அல்லது ஆகாயவழியாகவோ யாழ்.நகர பகுதிக்குள் ஊடுருவுவதை கண்காணிப்பதே இந்த முகாமின் பிரதான நோக்கம்.
முதலில் சிறிய காவலரணாக காணப்பட்ட கண்ணாடி இழைப்படகுகளையே கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதுண்டு.
எனினும் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குருநகரை அண்டிய பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த கடற்படையினரின் 3 உட்கரை யோர ரோந்து படகுகள் கடற்புலிகளின் தாக்குதலுக்கு உள்ள கியதைத் தொடர்ந்து நீருந்து விசைப்படகுகள் மண்டைதீவு கடற்படைத் தளத்திலேயே நிறுத்தி வைக்கப்படுவதுண்டு.
விடுதலைப்புலிகளின் தாக்குதலின்போது மண்டைதீவு கடற்படைத்தளத்தில் இருந்து நீருந்து விசைப்படகுகள் எவையும் உதவிக்கும் வரவில்லை.
தாக்குதல் ஆரம்பித்ததும் இந்த காவல்நிலையத்துடனான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுவிட்டதாகவும், மேலதிக உதவிகள் அங்கு சென்றடையும் முன்னர் விடுதலைப்புலிகள் தாக்குதலை முடித்துக் கொண்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலில் கடற்படைத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இரு கடற்படையினரும், ஒரு இராணுவச் சிப்பாயும் காணாமல் போயுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளை பொறுத்தவரையில் இந்த மாதத்தில் அவர்களின் ஈரூடகப்படையினர் நடத்திய இரண்டாவது கடல்தரை இணைந்த நடவடிக்கை இதுவாகும்.
கடந்த 5 ஆம் திகதி அதிகாலை மன்னார் நகரத்தின் கரையோரம் அமைந்திருந்த கொந்தைபிட்டி காவல்நிலையத்தின் மீதும் ஈரூடகப்படையினர் தாக்குதலை நடத்தியிருந்தனர்.
அதிகாலை 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று கடற்படையினர் கொல்லப்பட்டதுடன், ஒருவரது சடலமும், ஆயுத தளபாடங்களும் விடுதலைப்புலிகளின் சிறப்பு அணியினரால் கைப்பற்றப்பட்டிருந்தது. கொந்தைபிட்டி மற்றும் சிறுத்தீவு பகுதி களில் நடைபெற்ற தாக்குதல்கள் படையினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நடைபெற் றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறுத்தீவில் தாக்குதல் ஆரம்பமாகியதும், டு கடற்படையினரின் வடபிராந்திய கட்டளைப் பீடம் உசார்படுத்தப்பட்டதுடன், தாக்குதல் நடைபெற்ற பகுதிகளை நோக்கி கடுமையான பீரங்கி தாக்குதல்களும் பலாலி தளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும் ஆயுதங் களையும்,
படையினரின் சடலங்களையும் விடு தலைப்புலிகள் எடுத்து சென்றது, அவர்களின் சிறப்பு படையணிகளின் நடவடிக்கைகளின் வேகம் தொடர்பான ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் கடற்புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதுடன், கடற் படையினர் இழப்புக்களை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த காலப்பகுதியில் 4 கடற்படை கலங்கள் மூழ்கடிக்கப்பட்டதுடன், கடல்வழி தரையிறக்கம் மூலம் இரண்டு தாக்கு தல்களையும் விடுதலைப்புலிகள் மேற் கொண்டுள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் மண்டைதீவு கடற்படை முகாம் மீதான ஈருடகப்படையினரின் தாக்குதலை தொடர்ந்து, நெடுந்தீவு தரையிறக்கம், மன்னார் கரையோர தரையிறக்கம், சிறுத்தீவு தரையிறக்கம் என ஈரூடகப்படையினரின் தாக்குதல்கள் அதிக?த்து செல்வது குறிப்பிடத்தக்கது.
அதிகமான நீரேரிகளையும், குடாக்கடல்க ளையும் கொண்ட பகுதி வடபோர்முனை யாகும். இந்த பிரதேசத்தில் ஈரூடகப்படையின ரின் தாக்குதல்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. இலங்கை கடற்படையினரும் ஈரூடக கொமோண்டோக்களை கொண்டுள்ளபோதும் அவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டவை.
1996 ஆம் ஆண்டு சுண்டிக்குளம் பகுதியில் உள்ள பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்புலிகளின் ராடார் நிலையத்தை கைப்பற்ற அவர்கள் வான்படையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து பெரும் நடவடிக்கைகள் எதனையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை.
எனினும் திருமலையின் திரியாய் காட்டுப் பகுதிகளை அண்டிய பகுதிகளில் திடீர் தரையி றக்கங்களை மேற்கொண்டு தேடுதல் நடவடிக் கைகளில் அவர்கள் ஈடுபடுவதுண்டு. மேலும் துறைமுகங்களையும், கடற்படையினரின் முக்கிய தளங்களையும் பாதுகாப்பதும் அவர்க ளின் பிரதான தொழில்.
கின்றன. இலங்கை இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தாக்குதல் எல்லையில் இருந்து ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்தில் அமைந்திருந்த படைநிலை ஒன்று விரைவாக தாக்கி அழிக்கப்பட்டது பல தரப்பிலும் பலத்த ஆச்சரியங்களை தோற்றுவித்துள்ளது.
இதனிடையே, குடிநீர் குழாய்களுடன் கூடிய நச்சுவாயு தடுப்பு முகமூடிகளை இந்த தாக்குதலில் விடுதலைப்புலிகள், படையினரிடம் இருந்து கைப்பற்றி உள்ளதும், பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அதாவது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான பூநகரி பகுதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இந்த தளத்தையும், மண்டைதீவு தளத்தையும் படையினர் பூநகரி கல்முனை பகுதி மீதான ஒரு அதிரடி நடவடிக்கைக்கு தயார்படுத்தி வந்தனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வடபோர்முனையின் கட்டளை தலைமையகமான பலாலி கூட்டுப்படைத்தளம் மீதான விடுதலைப்புலிகளின் பீரங்கி தாக்குதல்களை நிறுத்தும் நோக்கத்துடன், மயக்க வாயுக்களை அல்லது இரசாயன புகை குண்டுகளை செறிவாக பயன்படுத்தி பூநகரியின் கல்முனை மீது படையினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகின்றனரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
சிறுத்தீவு கடற்படை காவல்தளம் மீதான கடற்புலிகளின் தாக்குதல், படைத்தரப்பின் ஆனால் விடுதலைப்புலிகளின் கடல் கொமோண்டோக்களின் நடவடிக்கை முற்றி லும் வேறுபட்டது. அவர்கள் இராணுவத்தின் உயர்பாதுகாப்பு வலயங்களுக்குள் தரை யிறங்கி தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
எனினும் விடுதலைப்புலிகள் தமது ஈரூடகப்தி படையினரை தொடர்ச்சியாக தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவது அவர்களின் பயிற்சி நடவ டிக்கையின் ஓரங்கமாக கூட இருக்கலாம் என பாதுகாப்பு கட்டமைப்புக்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அதாவது யாழ்.குடாநாட்டை சுற்றியுள்ள தீவுக்கூட்டங்கள் மற்றும் கரையோரப்பகுதிகளை பாதுகாப்பதற்கு பெருமளவான படையினரும், ஆயுதங்களும் அரசிற்கு தேவைப்படலாம் என்பது ஒருபுறமிருக்க, படையினரின் இரகசியத் திட்டங்களும் இந்த தாக்குதல் மூலம் அம்பலமாகி உள்ளதா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பேச்சுவார்த்தைக்கு மத்தியில் ஆயுதக்களைவும் வேண்டும்
போர் நிறுத்தம் என்பது ஆயுதகளைவுடன் தொடர்புபடுத்தப்பட வேண்டும். அரசியல் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் போது முறையான மேற்பார்வையின் கீழ் ஆயுதகளைவுக்கான நடவடிக்கைகளும் இடம்பெறவேண்டும். ஆனால் இலங்கையில் அந்நிலை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹென கூறியுள்ளார்.
சிங்கப்பூரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஆசிய பசுபிக் பாதுகாப்பு மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கொஹென இவ் வாறு தெரிவித்துள்ளார்.
நாம் இப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண விரும்புகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் (புலிகள்) ஆக்கபூர்வமான பேச்சுவார்தைக்கான விருப்பத்தை வெளிப்படுத்தவில்லை எனவும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத் தில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண மேலும் தெரிவித்துள்ளதாவது: பாலித ஹோகன்ன மேலும் தெ?வித்துள்ளதா வது: இலங்கை அரசாங்கம் இன்று விடு தலைப் புலிகளின் பயங்கரவாத யுத்தத் திற்கு முகம் கொடுத்து பல சவால்களை எதிர்கொண்டுள் ளது. கடந்த 30 வருடங்களாக இலங்கை மக்கள் இந்த யுத்ததிற்கென அளவுகடந்த விலைகளைக் கொடுத்துள்ளனர். பொதுமக்களை இலக்கு வைக்கும் தற்கொலைத் தாக்குதல்கள் அண் மைக்கலமாக அதிகரித்துள்ளன. இந்த தாக்குதல்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்துறை சவால்க ளைச் சந்தித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட தேர்த லில் மக்கள் தமது தலைவரைதேர்ந்தெடுத் துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர் களையும் சர்வதேச தொண்டுநிறுவனங்களை யும் கிழக்கின் அபிவிருத்தியில் பங்கெடுக் குமாறு அழைக்கிறோம்.
இலங்கை அரசாங்கம் இராணுவத் தீர்வில் நாட்டங்கொண்டுள்ளதாக செய்யப்படும் பிர சாரத்தில் எதுவித உண்மையுமில்லை. இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்பதற்காக அரசாங்கம் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவை உருவாக்கி தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த தீர்வுத் திட்டத்திற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தமது பெரும்பான்மையான ஆதரவைத் தெரிவித்துள்ளன. ஆனால் புலிகள் தொடர்ந்தும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்துகின்றனர்.
இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் வழிமுறைகளை எதிர்பார்த்திருக்கிறோம்.
ஆனால் புலிகள் இதுவரை அதற்கான சமிக் ஞைகளை வெளிப்படுத்தவில்லை. புலிகள் பேச்சு மேசைக்கு வரலாம். ஆனால் பேச்சு மேசையில் நேர்மையாக செயற்பட வேண்டும்.
அத்துடன் நிரந்தர சமாதானத்தை நோக்கியதாக அந்த பேச்சுவார்த்தை இருக்க வேண்டும் என் பதுடன் அவர்கள் ஆயுதங்களை ஒருபக்கமாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவும் சிங்கப்பூருக்கு நேற்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
கருணாவை நாடு கடத்தும் நடவடிக்கையினை துரிதப்படும் பிரித்தானியா
சிறிலங்கா இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கி வரும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் முன்னாள் தலைவரான கருணாவை சிறிலங்காவிற்கு நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கருணாவை நாடு கடத்தும் திட்டத்தின் முதற்படியாக கருணாவை நாடு கடத்துவதற்கு தேவையான பத்திரங்களை பிரித்தானியா அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அவருக்கான பயண ஆவணத்தையும் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ள போதும், கருணாவை வெளியேற்ற பிரித்தானியா தீவிரமாக செயற்பட்டு வருவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக அனுப்பப்பட்ட கடவுச்சீட்டின் அடிப்படையில் சிறிலங்காவிற்கான பிரித்தானியா தூதரகம் கருணாவிற்கான விசாவை வழங்கியது பிரித்தானியாவுக்கு பெரும் சங்கடங்களை ஏற்படுத்தி உள்ளது.
எனவே தான் பிரித்தானியா கருணாவை வெளியேற்றுவதில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றது.
கருணா விசா பெற்றுக்கொண்டதற்கும் தமக்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ள போதும், கருணாவால் சமர்ப்பிக்கப்பட்ட இராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டு அரசினால் வழங்கப்பட்டது என்பதில் பிரித்தானியா அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஹார்மொன்ட்வேர்த் என்ற இடத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கருணா சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி ஊடாக நேரடியாக அனுப்பப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை டொக்யாட் வீதியில் ஒரு பிள்ளையின் தந்தை கடத்தல்
திருகோணமலை டொக்யாட் வீதியில் வசித்த ஒரு பிள்ளையின் தந்தை 36வயதுடைய பத்மலிங்கம் ராஜேஸ்வரன் என்கிற புகைப்படப் பிடிப்பாளர் வெள்ளைவேன் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டதாக பிரதியமைச்சர் பெ.இராதாகிருஸ்ணனிடமும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடமும், திருகோணமலை காவல் நிலையத்திலும் உறவினர்களால் முறையிடப் பட்டுள்ளது.
எரிபொருள் விலை மேலும் அதிகரித்தால் பஸ் போக்குவரத்திலிருந்து விலக நேரிடும் - பஸ் சங்கத் தலைவர் மிரட்டல்
எதிர்வரும் நாட்களில் மீண்டுமொருமுறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் போக்குவரத்திலிருந்து விலக நேரிடும் என தனியார் பஸ் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளதாக ராவய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுத்துறை போக்குவரத்திற்கு உரிய பொறிமுறையொன்று உருவாக்கப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாவ அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் ஒன்றிணைந்த பஸ் சேவையொன்றை அமுல்படுத்துவதன் மூலம் நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும், இந்த யோசனை நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
26ம் திகதி நள்ளிரவுடன் பஸ் கட்டங்கள் 27.2 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டதாகவும், இது பொதுமக்களால் தாங்கிக் கொள்ள முடியாத நிலைமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் பஸ் போக்குவரத்துக்கு மாற்றீடாக வேறு போக்குவரத்து சேவையை பொதுமக்கள் நாடக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர்ந்து எரிபொருளில் விலையேற்றம் ஏற்பட்டால் பஸ் போக்குவரத்து சேவையிலிருந்து நிச்சயமாக விலகிக்கொள்ள நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனியார் பஸ் உரிமையாளர்கள் இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கவில்லை என போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் நேர அட்டவணைக்கு அமைய சில பிரதேசங்களில் தனியார் பஸ்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதகாவும், எதிர்காலத்தில் நாடு முழுவதும் இந்த நடைமுறை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜெயராஜ் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சர்ச்சை - ராவய
அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அமரர் ஜெயராஜினால் 60 இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏனையோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அதிகாரசபையின் தலைவர் எம்.பீ.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களை கண்காணித்தல், உரிய பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இணைப்பதிகாரிகள் எவ்வித பணிகளையும் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
40,000 - 10,0000 வரையில் இந்த அதிகாரிகள் சம்பளமாகப் பெற்றுக் கொள்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதில், 60 வீதமான அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் எரிபொருள் கொடுப்பனவாக 25,000 ரூபா வழங்கப்படுவதாகவும் தெரியவருகிறது.
வார இறுதி நாட்களில் கடமையில் ஈடுபடுவதற்காக 20ல் ஒரு பகுதி சம்பளம் வழங்கப்படுவதாகவும், சாரதியின் சம்பளம் உட்பட மாதாந்தம் 75,000 ரூபா இவர்கள் வருமானமாகப் பெற்றுக்கொள்ளவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த இணைப்பதிகாரிகளில் 42 பேரை பணி நீக்கம் செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பான்மையானோர் எவ்வித கடமைகளையும் மேற்கொள்ளாது சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
இவர்கள் அனைவரும் மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினால் நியமிக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், தமக்கு இவ்வாறானதொரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
(3rd lead)வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு--இருவர் பலி 9 பேர் காயம்:
கொழும்பு வெள்ளவத்தை இராயசிங்க வீதி பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் இன்று மாலை 8.50 அளவில் பாரியவெடிச்சத்தமொன்று இடம்பெற்ற கிறனேற் தாக்குதலில்இதில் 2 பேர் கொல்லப்பட்டு 9 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு; கிரான்ட்பாஸில் மின்மாற்றி குண்டு வைத்துத் தகர்ப்பு.
கொழும்பு கிரான்ட்பாஸில் வீரகேசரி அலுவலகத்துக்கு அருகில் உள்ள மின்மாற்றி ஒன்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சக்தி தொலைக்காட்சியின் செய்தியாளர் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
சக்தி தொலைக்காட்சியின் களுவாஞ்சிகுடி செய்தியாளர் எஸ் .ரவிந்திரன் புலனாய்வுதுறையினரால் இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பல மணித்தியால விசாரணைகளின் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல்களின் போது சேகரிக்கப்பட்ட செய்தி தொடர்பில் புலனாய்வுதுறையினர் இவரிடம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
வாயை கவனமாக வைத்துக் கொள் என பாதுகாப்பு செயலரை ஜனாதிபதி எச்சரித்துள்ளார்
ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவது, அவர்கள் அச்சுறுத்தப்படுவது மற்றும் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்பில் ஜனாதிபதி தலையிட்டு, அவற்றை தடுக்க வேண்டும் என நேற்று ஜனாதிபதியை சந்தித்த ஊடக ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
த நேசன் பத்திரிக்கையின் இணையாசிரியர் கீத் நோயார் கடத்திச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டமை, சக்தி மற்றும் சிரச ஊடகங்களின் யாழ்ப்பாண செய்தியாளர் பி.தேவகுமாரன் மிலேச்சத்தனமாக வெட்டி கொலை செய்யப்பட்டமை
மற்றும் லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்களான சனத் பாலசூரிய, போத்தல ஜெயந்த ஆகியோர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளாரின் அலுவலத்திற்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டமை போன்ற தொடர்ந்து இடம்பெற்று வரும் அச்சுறுத்தல் தொடர்பில் அரசாங்கமும், காவல்துறையினரும் குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை எடுக்காத நிலையில்
ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் மரண அச்சுறுதல் குறித்து இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. லங்காதீப நாளிதழ் மற்றும் வார இதழ்களின் ஆசிரியர்களான சிறி ரணசிங்க, ஆரியனந்த தொம்பகஹாவத்த ஆகியோரின் தனிப்பட்ட முயற்சியை அடுத்தே ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பு நடந்துள்ளது.
குறிப்பாக நேசன் பத்திரிக்கையின் இணையாசிரியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் லலித் அழககோனுக்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் த நேசன் பத்திரிக்கையின் ஆசிரியர் லலித் அழககோனும் கலந்துகொண்டுள்ளார்.
இதன் போது கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி ஊடக ஆசிரியர்கள் அச்சமின்றி தமது செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தேவை எனில் நேசன் பத்திரிக்கை ஆசிரியருக்கு பாதுகாப்பு வழங்க தயார் என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.
எனினும் காவல்துறையினர் சகல பயணங்கள் குறித்தும் பதிவு செய்வதால், அது அழககோனுக்கு தடையாக அமையுமோ தெரியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். லேக் ஹவுஸ் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் தான் பாதுகாப்பு செயலாளர் மீது குற்றம்சுமத்தியதுடன், வாயை கவனமாக வைத்துகொள் என எச்சரித்தாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த நிலையில் யாழ்ப்பாண ஊடகவியலாளர் தேவகுமாரன் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்த போது, அது குறித்து ஜனாதிபதி கருத்து கூறும் முன்னரே, ஒரு ஊடக ஆசிரியர் அது ஈ.பீ.டி.பியின் வேலை என தெரிவித்ததாகவும் இதனையடுத்து ஜனாதிபதி தலையை ஆட்டிய நிலையில், தேவகுமாரன் தொடர்பில் எதனை கூறவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கீத் நோயாரை கடத்திச் சென்று தாக்கியது யார் என்பது தொடர்பில் நேரடியாக சுட்டிக்காட்ட முடியாதுள்ளதாகவும் விசாரணைகளில் சில சிக்கல்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் ஊடக ஆசிரியர்களான சிறி ரணசிங்க, ஆரியனந்த தொம்பகஹாவத்த, சுந்தர நியத்தமஹான டி மெல், உபாலி தென்னகோன் மற்றும் லலித் அழககோன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அத்துடன் ஜனாதிபதியின் செயலாளர், பசில் ராஜபக்ஸவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:global tamil news
இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ஐம்பது லட்சம் ருபாவை மோசடி செய்ததாகக் கருதப்படும் ஹங்குராங் கெத்தையைச் சேர்ந்த போலி ஏஜண்ட் கைது
இத்தாலி நாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி சுமார் ஐம்பது லட்சம் ருபாவை மோசடி செய்ததாகக் கருதப்படும் ஹங்குராங்கெத்தையைச் சேர்ந்த போலி ஏஜண்ட் ஒருவர் பொலீசாரினால் 29ம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பொலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக ஹங்குராங்கெத்தையைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்தே பொலீசார் மேற்படி போலி ஏஜண்டைக் கைது செய்துள்ளனர்.
இவர் பத்து நபர்களிடம் இதேபோன்று பண மோசடி செய்திருப்பதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் கண்டி மஜிஸ்ரேட் முன்னிலையில் இவர் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையில் ஊர்காவல் படை வீரர் சுட்டுக்கொலை
திருகோணமலை மாவட்டம் சேருநுவரவில் இருந்து நீலபொல பிரதேசத்தை நோக்கி மோட்டார் சைக்களில் சென்று கொண்டிருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
காங்குவேலி என்ற பிரதேசத்தில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருடன் சென்ற படைச்சிப்பாய் ஒருவர் உயிர்தப்பியுள்ளார். இந்த துப்பாக்கி பிரயோகத்தை விடுதலைப்புலிகள் மேற்கொண்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர்.
அரசு ஊடகங்கள் மோதல் மோசமாக அதிகரிக்கும் அறிகுறி
காலகண்டன்
கடந்தவாரம் கொழும்பில் ""த நேசன்' ஆங்கில வார இதழின் பிரதி ஆசிரியர் கீத் நொயர் இனம் தெரியாதோரால் கடத்தப்பட்டார். இவ்விடயம் உடனடியாக ஊடகங்களுக்கும் ஊடக அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டதுடன், அரசாங்கத்தின் அதிஉயர்பீடத்திற்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, கீத் நொயர் கடத்தப்பட்டு எட்டு மணிநேரத்தின் பின் அவரது வீட்டிற்கு அருகில் கொண்டுவந்து விடப்பட்டார். ஆனால், கடுமையாகத் தாக்கப்பட்ட காயங்களுடன் விடுவிக்கப்பட்ட அவர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத நிலையில் கொழும்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளிக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அந்தளவிற்கு அடிகாயங்களும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி இருந்தார். இனம் தெரியாதோரால் பிரபலமான ஒரு பத்திரிகையாளர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளமை அனைத்து ஊடகவியலாளர்களையும் அதிர வைத்துள்ளது. ஐந்து ஊடக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. அலரி மாளிகைக்கு அண்மையாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டன.
இவ்வார்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையைக் கண்டிக்கும் விதமாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவரும் பொதுச் செயலாளரும் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு ""அரசாங்கத்தின் கீழ் பணிபுரியும் ஊடகவியலாளர்கள் எவரும் அர சாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிடவோ செயற்படவோ முடியாது' என்றவாறு கடும் தொனியில் அறிவுறுத்தப்பட்டதாக அறிய முடிகின்றது. இந்நடவடிக்கையானது அரசாங்க ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதனையும் அரசியல் கட்சியில் அங்கம் வகிப்பதையும் சுதந்திரமாக கருத்து வெளியிடுவதும் பற்றிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது. இதுபற்றி அரசியலமைப்புச் சட்டவிதிகள் கூறும் எல்லைகள் பற்றிய சட்ட சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், ஏரிக்கரை பத்திரிகை நிறுவனம் அரச நிறுவனமா? அல்லது அரசாங்க மேற்பார்வையில் உள்ள நிறுவனமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
அதேவேளை, கீத் நொயர் தாக்கப்பட்டமை பற்றிய உரிய விசாரணைகளும் அதன் ஊடாக அந்த இனம் தெரியாதோர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்குரிய எவ்வித அறிகுறிகளும் காணப்படவில்லை என்பது சிந்தனைக்குரியதாகும். இச்சம்பவத்திற்கு மட்டுமன்றி ஏற்கனவே கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விடயத்தில் கடைப்பிடிக்கப்பட்ட கவனத்திற்கொள்ளாமையே இப்போதும் இடம்பெறுகின்றது.
கொழும்பில் கீத் நொயர் தாக்கப்பட்டமையின் இரத்தக் காயம் ஆறுமுன்பாகவே யாழ்ப்பாணத்தில் சக்தி, சிரச, எம்.ரி.வி. என்பனவற்றின் ஊடகவியலாளர் பரநிருபசிங்கம் தேவகுமார் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் வழிமறித்து வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். அவருடன் பயணித்த அவரது நண்பரும் வெட்டிக் கொல்லப்பட்டிருக்கின்றார். இந்தக் கோரக் கொலையையும் இனம் தெரியாதோரே செய்திருக்கிறார்கள். வடபுலத்தில் இவ் ஊடகவியலாளர் கோரமாகக் கொல்லப்பட்டிருப்பது இது முதல் தடவை அல்ல. அல்லது முடிவானதொன்றாகவும் இருக்கமாட்டாது என்றே எதிர்பார்க்க முடியும். ஏனெனில், ஊடகவியலாளர்கள் மீதான வேட்டையாடுதல் சட்டரீதியாகவும் சட்டத்திற்கு அப்பாற்பட்டு ""இனம் தெரியாதோர்' என்ற பெயரிலும் தொடர்வதற்கான சமிக்ஞைகளே ஆளும் தரப்பில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன.
படுகொலை செய்யப்பட்ட இளம் குடும்பஸ்தரான தேவகுமார் யாழ்.மாவட்ட சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளராகக் கடந்த மூன்று வருடங்களாகப் பணிபுரிந்து வந்தவர். அங்குள்ள அசாதாரண சூழலில் ஏற்கனவே ஊடகவியலாளர் கொல்லப்பட்டு வந்த அச்சநிலையிலும் துணிவுடன் பணியாற்றி வந்த ஒரு ஊடகவியலாளராக இருந்து வந்தார். இக்கொலையைச் செய்ததன் மூலம் இதற்குரிய இனம் தெரியாத கொலையாளிகள் அடிப்படை மனித உரிமையையும் கருத்துச் சுதந்திர உரிமையையும் ஊடகவியலாளர்களின் துணிச்சலையும் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படுகொலை பற்றி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள ஐந்து ஊடக அமைப்புகள் தெரிவித்திருக்கும் ஒரு விடயம் மிக முக்கியமானதாகும். ""ஊடகவியலாளர்கள் ஊடக ஊழியர்களுக்கு எதிராக இடம்பெறும் கொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்தும் படியும் தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும் இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ந்தும் வற்புறுத்தி நாம் விரக்தியடைந்துள்ளோம். "முறையான விசாரணைகள் நடத்தப்படும்' என்பன போன்ற வாக்குறுதிகள் அர்த்தமற்றவையாகிவிட்டன. இந்நிலையைக் கண்டிக்கின்றோம்' என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த மூன்று வருடங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களில் சக்தி தொலைக்காட்சி ஊடகவியலாளர் தேவகுமார் ஒன்பதாவது நபராவார். இதே காலப்பகுதியில் மூன்று ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இத்தகைய சூழல் தொடர்ந்த வண்ணமே உள்ளன. கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் பற்றி வாராந்தம் செய்தியாளர் சந்திப்புகளில் கருத்து வெளியிட்டு வரும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் இந்நிலைக்கு என்ன சப்பை கட்டப்போகிறார்கள். விசாரணைகள் தொடர்கின்றன. அறிக்கையை எதிர்பார்த்திருக்கின்றோம் என்பதற்கு அப்பால் அரசாங்கத்தரப்பால் வேறு எதனையும் கூறமுடியாது.
ஏற்கனவே உலக ஊடகவியலாளர் பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள கண்ணோட்டத்தில் ""இலங்கை ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு அற்ற ஒரு நாடாக விளங்குகின்றது' எனக் கூறியிருந்தது. இதனையிட்டு அமைச்சர்கள் கொதித்தெழுந்தனர். இது திட்டமிட்ட புனைவு என்றும் கூறிக்கொண்டனர். ஆனால், இந்த நிமிடம் வரை இலங்கையில் ஊடகவியலாளர்கள் எவ்வித பாதுகாப்பும் அற்றவர்களாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் எவ்வித ஆயுதமும் கொண்டிருக்கவில்லை. பேனாவையும் எழுதுதாள்களையும் கொண்டு தமது கருத்துகளை வெளியிடும் ஊடகவியலாளர்களைக் கண்டு அரசாங்கமோ மற்றும் எவருமோ அஞ்சுவார்களேயானால் அதற்கு உள்ள ஒரே காரணம் கருத்துச் சுதந்திரத்திற்கு இருக்கும் வலிமையேயாகும்.
இத்தகைய கருத்துச் சுதந்திரம் ஊடக சுதந்திரம் பற்றிய அரசாங்க எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வேடிக்கைக்குரியதாகும். அதாவது, கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற சந்தர்ப்பவாத ஆளும்வர்க்க ஆட்சி முறைமையில் ஊடக சுதந்திரம் தத்தமது ஆளும் எதிர்த்தரப்பு சக்திகளின் வசதிக்கு ஏற்றபடியே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஊடக சுதந்திரத்திற்காக குரல் வைத்து கண்ணீர் வடிப்பதும் அரச தரப்பாகியதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கி ஒடுக்குவதும் மரபாகவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. தத்தமது ஆட்சி அதிகாரத்திற்கும் ஆதிக்க அரசியலுக்கும் எதிரான அதிருப்தி கண்டனங்கள் ஊடகங்கள் மூலம் வெளிவருவதை இத்தகைய சக்திகள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வதில்லை. கருத்து ஊடக சுதந்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரைக்குமே ஏற்றுக்கொள்ளப்படும். அதற்கு அப்பால் ஊடகங்கள் சென்று கருத்துகளையும் காட்சிகளையும் வெளியிடுமானால் அச்சந்தர்ப்பத்தில் வெவ்வேறு வழிகளிலான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படும். இதுவே இன்று இலங்கையில் இடம்பெறுகிறது.
இத்தகைய ஒரு சூழலிலேயே அண்மையில் ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையில் பிரதிநிதித்துவம் பெற இலங்கை அரசாங்கம் பகீரதப் பிரயத்தனம் செய்து நின்றது. ஏற்கனவே சர்வதேச அரங்கில் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கை அரசாங்கம் பல்வேறு மனித உரிமை அமைப்புகளால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டு வந்தது. அதன் வெளிப்பாட்டை ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கான தேர்தலில் இலங்கை தெரிவு செய்யப்படாமல் போன விடயத்தில் காணமுடிந்தது. அத் தோல்விக்குப் பின்புகூட அரசாங்கம் தன்னைச் சுயமதிப்பீட்டுக்கு உட்படுத்தி மனித உரிமை மீறல் பற்றிய நடைமுறையில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளது. மேற்படி தோல்விக்குப் பின்பே கொழும்பில் ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்திச் சென்று தாக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் சக்தி தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் தேவகுமார் கொல்லப்பட்டிருக்கிறார். இவை எதைக் காட்டுகிறது என்பதே நோக்கப்பட வேண்டியதாகும். ஊடகவியலாளர்களுக்கும் ஊடகத்துறைக்கும் எதிரான கொலைகளும் தாக்குதல்களும் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களேயாகும். மக்களை அச்சுறுத்தி பீதியடையச் செய்வதாகும். ஏனெனில், அரசியல் போக்குகள் பற்றியும் அரசாங்கத்தின் நிலைப்பாடு பற்றியும் எவரும் சுதந்திரமாகக் கருத்து வெளியிடலாம் என்றும் அது அடிப்படை ஜனநாயக உரிமை என்றும் கூறப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அத்தகைய ஜனநாயகம் முன்னெடுக்கப்படுவது அச்சுறுத்தப்படுகின்றது. ஒருசில ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்வது, கடத்துவது, தாக்குவது போன்றவற்றால் முழு ஊடகத்துறையினருமே அச்சுறுத்தப்படுகிறார்கள். இன்று அவர்களுக்கு நாளை உங்களுக்கு என எச்சரிக்கப்படுகின்றனர். இத்தகைய நிலை ஒட்டுமொத்தமாக ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கும் செயல்களேயாகும்.
மகிந்த சிந்தனை அரசாங்கம் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை முதன்மைப்படுத்தாது யுத்தத்தின் மூலம் இராணுவத் தீர்வையே முதன்மைப்படுத்தி வருகிறது. இதனால், நாட்டின் பொருளாதாரம் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே செல்கிறது. அத்துடன், தாராள தனியார்மயக் கொள்கை நடைமுறைகளாலும் பொருளாதார நெருக்கடிகள் பெருகி வருகின்றன. வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு தினம் தினம் உயர்ந்து செல்கிறது. மக்களின் அன்றாட வாழ்வு மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது. 108 அமைச்சர்களைக் கொண்ட அரசாங்கத்தினால் நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாத அவல நிலையிலேயே இருந்து வருகிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயர்ப்பலகையின் கீழ் அரசாங்கத்தின் சகல இயலாமைகளும் பொருளாதாரத் தோல்விகளும் மூடி மறைக்கப்படுகின்றன. அத்துடன், மக்கள் எவ்வித கேள்வி நியாயமும் எழுப்பாது தமது இடுப்புப் பட்டிகளை மேன்மேலும் இறுக்கிக் கொண்டு வாழ வேண்டும் என அரசாங்க கொள்கை வகுப்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இத்தகைய நிலையை விமர்சனம் செய்யும் வகையிலான கருத்துகளும் எழுத்துகளும் வெளிவருவதை அரசாங்கத் தலைமைகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாடும் மக்களும் எதிர்காலமும் எப்படிப் போனாலும் போகட்டும் நாமும் நம்மைச் சுற்றியுள்ள வசதி வாய்ப்புகள் சொத்து சுகமுள்ள ஆளும் வர்க்கத்தினர் மட்டும் சகலவற்றையும் அனுபவித்துக் கொண்டால் போதுமானது என்ற நிலையே கடைப்பிடிக்கப்படுகிறது. இவற்றைப் பற்றி கேள்வி எழுப்பும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் இலக்கு வைக்கப்படுகின்றனர். ஊடகங்களை எவ்வாறு கட்டுப் படுத்துவது என்பது பற்றி தீவிரமாக அரசாங்க உயர் மட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது எனவும் அறிய முடிகிறது.
இவ்வாறு அரசாங்கம் செயல்படுமானால் மீண்டும் மீண்டும் ஊடகங்களுடன் மோதும் நிலை வளரவே செய்யும். அதனால், அரசாங்கம் எதையும் சாதிக்கப்போவதில்லை. எனவே, ஊடக சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிய அர சாங்கத்தின் நிலைப்பாட்டால் உருவாகியுள்ள பாரிய இடைவெளியை குறைத்துக்கொள்ளும் நடைமுறை அரசாங்கத்தின் கைகளிலேயே தங்கியுள்ளது.
அம்பாறை தங்கவேலாயுதபுரத்தில் மக்களின் வீடுகளை உடைத்து உடைமைகளை சூறையாடும் படையினர்
அம்பாறை தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் இருக்கும் மக்களுடைய வீடுகளை உடைத்து நிலைகள், கதவுகள், ஓடுகள் என்பவற்றை சிறிலங்கா விசேட அதிரடிப்படையினர் எடுத்துச்சென்றுள்ளனர்.
இந்த மக்களினுடைய உடைமைகள் உடைத்து எடுக்கப்பட்டு தாண்டியடி காஞ்சிரங்குடா அதிரடிப்படை முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அப்பகுதி மக்களின் உழவு இயந்திரங்களை பலவந்தமாகப் பறித்து அவ் உழவு இயந்திரங்களிலே ஏற்றிச்செல்கின்றனர்.
இதனால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றநிலைமை தோன்றியுள்ளது.
2006 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினரின் இப்படியான அடாவடித்தனத்தினால் தங்கவேலாயுதபுரம் கிராமத்திலிருந்து வெளியேறி விநாயகபுரம், திருக்கோவில் ஆகிய பகுதிகளில் வசித்துவந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் நேற்றும் இன்றும் இடம்பெற்றுள்ளது.
சேருநுவேர பகுதியில் தமிழ் இளைஞர் சுட்டுப்படுகொலை
திருகோணமலை மாவட்டம் சேருநுவேர பகுதியில் சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் யோகராஜா கலியப்பு எனப்படும் 23 அகவையுடைய ஒருபிள்ளையின் தந்தை இனம் தெரியாத ஆயுததாரிகளால் மதியம் ஒரு மணியளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தாருடன் கிளிவெட்டி நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்ததாகவும் இச்சம்பவம் நிகழ்வதற்கு ஒருநாள் முன்னர் நோய்காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது
கனவிலும் தோண்றாத கொடுரம் - தமிழ் குழுந்தைகள் மரணம் பெற்றோர் கைது!!!
தெற்கு லண்டனில் கார்ல்ஸ்ரன் பகுதியில் இரு சகோதரங்கள் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இவர்களின் இன்னும்மொரு சகோதரன் கத்திக் குத்துக்கு ஆளாகி உள்ளார்.
இது தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் நேற்று (மே 30) இரவு 10:30 மணியளவில் இடம்பெற்று உள்ளது. 5 வயது மகனும் நான்கு வயது மகளும் கத்திக் குத்துக்கு இலக்காகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஆனால் அவ்விரு குழந்தைகளும் உயிருக்காகப் போராடி நடு இரவளவில் உயிரிழந்தனர். அவர்களுடைய 6 மாதமே ஆன குழந்தைச் சகோதரி இன்னமும் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக இக்குழந்தைகளின் பெற்றோர் 39 வயதான தந்தையும் 35 வயதான தாயும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இச்சம்பவம் பற்றி இக்குடும்பத்தினரது உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் தாயே குழந்தைகளை குத்திவிட்டு பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததாகத் தெரிவித்தார். அண்மைக் காலத்தில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் என்றே தாங்கள் நம்புவதாகவும் அவர் கூறினார்.
தற்போது அமைதியான கிராமப் புறமான அவர்கள் வாழ்ந்த வீட்டில் மரண விசாரணைக் குழுவினரும் சிறுவர் துஸ்பிரயோக விசாரணைக் குழுவினரும் விசாரணைகளில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று காலை மருத்துவநிலைப்படி ஆறு மாதப் பெண்குழந்தையின் உடல்நிலை தேறிவருவதாக அறியமுடிகிறது.
அயலவரின் தகவல்படி இலங்கையைச் சேர்ந்த தமிழர்களான இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்னரே அவ்வீட்டிற்கு குடிபெயர்ந்து உள்ளதாகத் தெரிகிறது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து 10 வரையா அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று அவ்வீட்டிற்கு வந்ததாக அயலவர்கள் கூறுகிறார்கள்.
இறந்த குழந்தைகளின் பிரேத பரிசோதணைகள் இன்று அல்லது நாளை நடைபெறும்.
அரச படைகளுக்கு எதிரான ஊடக நம்பிக்கைத் துரோகத்தை நிறுத்தும்படி - தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் அறிக்கை
இலங்கை திருநாட்டின் அரச படைகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடக நம்பிக்கைத் துரோகத்தை நிறுத்தும் படி,புலி முத்திரை பொறித்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில் நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள்.கடந்த 28 ஆண்டுகளாக நாட்டை மீட்டெடுப்பதற்காக பயங்கரவாதிகளுடன் போரிட்டு வருகிறோம்.
நாட்டில் தாண்டவமாடிக்கொண்டிருக்கும் பயங்கரவாதத்தில் சுமார் 70 000 க்கு மேற்பட்ட மக்கள் தங்களது வாழ்க்கையை இழந்துள்ளனர்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ள செய்தி,உண்மைகளையும் ஜனநாயகக் கருத்துகளையும் மக்கள் மத்தியில் விதைக்கும் ஊடகங்களை அச்சுறுத்தும் பாணியில் அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது
எகிப்தில் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடு;க்கப் போவதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது.
கைரோ நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் தமக்கு முறையான சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
எகிப்து நாட்டின் சட்டதிட்டங்களுக்கமைய ஆர்பாட்டங்களில் ஈடுபடல் போராட்டங்களை நடத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இலங்கையர்கள் அவ்வாறான ஒரு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப் பட்டுள்ளது இதனால் எந்நேரமும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இலங்கையர்கள் யாவரும் கைது செய்யப்படலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
இண்று நடேசன் நினைவு தினம் - ஜரோப்பாவில் அஞ்சலி செலுத்த மறுக்கும் சந்தர்ப்பவாத பத்திரிகையாளர்கள்.
இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் அய்யாத்துரை நடேசன் கொல்லப்பட்டு இன்று 4 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது ஆயுததாரிகளினால் அவரது உயிர்காவுகொள்ளப்பட்டது.
2002 ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதானம் மெல்ல மெல்ல செத்துக்கொண்டிருந்த காலப்பகுதி அது. இன்று அரசியல் அனாதையாக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கா குமாரதுங்க கோலோச்சியகாலம் அது.
விடுதலைப் கிழக்கின் தனித்துவம்பேசி புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறிய மிகப்பரபரப்பான காலம் அது. வீரகேசரி,ஐ.பீ.சீ மற்றும் உள்நாட்டு இலத்திரணியல் ஊடகங்களில் செய்தியாளராக கடமையாற்றிய நடேசன் சில நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
ரிச்சார்டீ சொய்சா முதல் நிமலராஜன், நடேசன், சிவராம், ரஜிவர்மன், ரேலங்கி செல்வராஜா, றமேஸ்நடராஜா, பாலநடராஜஐயர், சுகிர்தராஜன் சம்பத் லக்மால் என நீண்டு இறுதியாக மே28 ஆம் திகதி தேவகுமாரன் என 15க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களை இலங்கை பலிகொண்டிருக்கிறது. சில ஊடகவியலாளர்கள் காணமல் போனவர்களாகவே உள்ளனர்.
2005 ஆம் ஆண்டின் பின் மே 31 2008 வரை யாழ்ப்பாணத்தில் மட்டும் 9 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டு விட்டனர். இப்போ யாழ் குடாநாட்டில் ஊடகத்துறையின் பக்கம் தலைவைத்து படுக்கக் கூட ஊடகத்துறையினர் பயப்படுவதாக ஒரு ஊடகவியலாளர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்கு மட்டும் அல்ல இலங்கையின் எப்பாகத்திலும் இன்று ஊடகத்துறை தனது பணியை சுதந்திரமாகச் செய்ய முடியாதவாறு அராஜகம் தலைவிரித்தாடுகிறது. ஆரசாங்கத்திற்கு சார்பான திவயின பத்திரிகையின் பாதுகாப்பு பத்தி எழுதாளரின் பேனாகூட பாதுகாப்பு குறித்து எழுத வேண்டாம் என்ற கட்டளைக்கு உட்பட்டுள்ளது.
25க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். இவர்களில் 20ற்கும் மேற்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்கள். பலர் உள்நாட்டிலேயே மௌனமாக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் சிலர் வேறு தொழில்களை நாடிச் சென்று விட்டனர். குறிப்பாக இலங்கையில் தமிழ் ஊடகத்துறையின் உயிர் மூச்சு நின்றுவிடும் கட்டத்திலேயே உள்ளதென்பதனை எவரும் மறுக்க முடியாது.
பிரேஸிலின் காட்டுக்குள் மனித இனத்தைப்போன்ற மனிதர்கள் வாழ்கின்றார்க்ள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
உலகத்தின் கண்களில் இருந்து இது நாள் வரை தென்படாமல் இருந்த பழங்குடி இனமொன்று பிரேஸிலின் ரியோடி ஜெனீரோவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த அபூர்வமான பழங்குகுடியினர் உடம்பெங்கும் செம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறத்தை பூசியிருக்கின்றனர்.இவர்களின் இனம் எதுவென்று இதுவரை தகவல் வெளியாகவில்லை.ஹெலிகப்டரில் இருந்து எடுக்கப்பட்ட அற்புதமான புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
ஹெலிகப்டரில் இருந்து படம் எடுக்கும் போது அவர்கள் அதை நோக்கி அம்பெறிந்தமை குறிப்பிடத்தக்கது. பிரேஸில் நாட்டின் ஏக்கர் மாநிலத்தின் பெரு நாட்டின் எல்லைப்பகுதியில் இந்த இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். - தென்மாகாண முதலமைச்சர்
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிழக்கு மாகாணத்தை மீட்டு அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும். 24 ஆவது முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பௌதீக ஒருமைப்பாட்டைக் கட்டிக்காப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட கிழக்கு வாழ் மக்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவினைவாதத்தை இனங்கண்டு அதற்கு எதிராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டுவதாகத் தென்மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'
முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது
ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது.
இலங்கை தம்பதி
இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க தயாரானார்கள். அப்போது மீராவின் வயிற்றில் கண்ட காட்சி, டாக்டர்களை திடுக்கிட வைத்தது. குழந்தை, கர்ப்பப்பையில் இருப்பதற்கு பதிலாக, அதற்கு வெளியே உள்ள சினைப்பையில் இருந்தது. ஒரு சிலருக்கு இப்படி சினைப்பையில் கரு உருவாகி இருந்தாலும், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அந்த கருவை அழிக்க செய்து விடுவார்கள். ஏனென்றால், கர்ப்பப்பைக்கு வெளியே கரு வளர்ந்து பெரிதானால், அது தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.
உலகிலேயே முதல்முÛ
ஆனால், மீராவுக்கோ, முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே கரு வளர்ந்து குழந்தையாக உருவெடுத்துள்ளது. அது உயிருடனும் பிறந்து டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி நடப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பெண் குழந்தையை `அதிசய குழந்தை' என்று டாக்டர்கள் வர்ணிக்கிறார்கள். அந்த குழந்தைக்கு `துர்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெண்ணின் சினைப்பை உற்பத்தி செய்யும் கரு முட்டையுடன், ஆணின் உயிரணு இணைந்து கரு உண்டாகும். இந்த கரு, கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடைந்து குழந்தையாக வளரும். இதுதான் இயல்பான நடைமுறை. ஆனால், மீராவுக்கோ கரு, கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாமல், சினைப்பையிலேயே தங்கி குழந்தையாக வளர்ந்து விட்டது.
டாக்டர் பேட்டி
மீராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஆன்ட்ரூ மில்லர் கூறியதாவது:-
சினைப்பையின் வலப்புறத்தில் குழந்தையை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சினைப்பையின் தோல் மெல்லியதாக இருந்ததால், உள்ளே இருந்த குழந்தையின் தலை முடியையும், முக தோற்றத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. குழந்தை வளரும்போது சினைப்பை கிழியும் அபாயம் உள்ளது. எந்த நேரமும் சினைப்பை கிழிந்து, அதனால் தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மீராவுக்கு அப்படி நடக்கவில்லை. அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.
மருத்துவ அதிசயம்
இன்னும் சொல்லப்போனால், அவருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை வளர்வதை ஆரம்பத்திலேயே கண்டிருந்தால், அதை கலைக்க சொல்லி இருப்போம். ஆனால் அப்படி நடக்காமல், அவர் நன்றாக குழந்தையை பெற்றுள்ளார். இது மருத்துவ உலகிலேயே ஒரு அதிசய சம்பவம். இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இராணுவ வாகனம் விபத்து : இருவர் பலி: எட்டுபேர் காயம்
கட்டகமுவ கதிர்காமப் பகுதியில் இராணுவ வாகனம் இன்று காலை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது சிறீலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டு எட்டுபேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மக்கள் நலன் சார்ந்த மனிதாபிமான நில மீட்பு போர் ஒன்றை புலிகள் விரைவில் துவங்கக்கூடும்!
அண்மைக்காலத்தில் நாயாறு முதல் மண்டைதீவு கரைத்தீவு வரை விடுதலைப்புலிகளின் கடற்புலிப் பிரிவு மேற்கொண்டிருக்கும் கடல்வழித் தாக்குதல்கள் மூலம்,கடலில் கடற்புலிகளின் கை மேலோங்கி வருவதயே அவதானிக்க முடிகிறது.
சமீப காலமாக கடற்புலிகள் நடத்தியுள்ள மூன்றுக்கு மேற்பட்ட தாக்குதல் வெற்றிகள் இவற்றுக்கு ஆதாரமாக உள்ளன.இத் தாக்குதல்கள் தொடர்பாக வெளிவருகின்ற செய்திகள் ஊடாக விடுதலைப்புலிகளிடம் அதி நவீன கடற்கலங்களும்,நவீன போர்த் தளபாடங்களும் உள்ளதை மறைமுகமாகவோ,நேரடியாகவோ அரசாங்கம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
இதேவேளை இவ்வாறான தாக்குதல் முன்னோட்டங்கள் புலிகள் அடுத்த கட்டமாக மேற்கொள்ள அவாவி நிற்கும் பெருமெடுப்பிலான பாரிய தரைவழித்தாக்குதலுக்கான முன் அதிர்வுகளாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக நாயாற்றில் கடந்த மார்ச் மாதம் கடற்படையினரின் பீரங்கிப் படகு தாக்கப்பட்டதை தொடர்ந்து,புலிகள் தீவிரப்படுத்தி வரும் கடல் வழித் தாக்குதல்கள் தரைவழியாக புலிகள் பெரும் நில மீட்புச் சமரொன்றுக்கு தயாராகி வருவதை உறுதிப்படுத்துகிறது.
தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போரில்,புலிகளை பொறுத்தவரையில் கடல் வழி அணி நகர்த்தல்களும் முக்கியத்துவம் பெறும் அதேவேளை, எதிகாலச் சமர்க்களங்களில் புலிகளின் விமானப்படை பங்கேற்க போவதும் நிதர்சனம்:கிழக்கிலோ,அல்லது வடக்கிலோ உள்ள பெரும் பகுதி ஒன்றை விடுவிப்பதற்கு,விடுதலைப்புலிகள் தங்களது முப்படைப்பலத்தையும் இதன்போது பிரயோகிக்கக்கூடும்!
இதேவேளை கிழக்கை விட வட பகுதியான இலங்கையின் உச்சியில் நீண்டகாலமாக தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதப் பேரவலத்தை கருத்தில் எடுத்து,விடுதலைப்புலிகள் தாக்குதலை நெறிப்படுத்தக்கூடும்!
யாழ்ப்பாண மக்கள் கடந்த 3 அல்லது 4 வருடங்களாக பல்வேறு அழுத்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வரும் நிலையில்,இதுவரை சர்வதேச சமூகமோ, இந்தியாவோ மனிதாபிமான ரீதியில் மக்கள் துயர் போக்க,இரு தரப்பையும் இவ் விடயத்தில் இணங்க வைக்க அக்கறை காட்டாத போதும்,குடா நாட்டுக்கான ஒரே ஒரு தரவழிப் பாதையான A-9 வீதியின் முக்கியத்துவம் குறித்து பல தரப்பினரும் யதார்த்தபூர்வமான கருத்துக்களை முன்வைத்தே வந்துள்ளனர்.
இவ்விடயத்தில் இரு தரப்பினருக்கும் தீவிர அழுத்தங்களை கொடுத்து மூடப்பட்ட A-9 ஐ திறப்பதற்கு சர்வதேச நாடுகளும்,மனிதாபிமான தொண்டர் அமைப்புகளும்,தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால்,யாழ்ப்பாண மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிர்க்கதி நிலைக்குள் தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்.
அத்துடன் இது தொடர்பாக பலராலும் வலியுறுத்தப்பட்டு வந்த கருத்துகளும் சம்பந்தப்பட்டவர்களின் காதுகளில் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே உள்ளது.அரசாங்கத்தை பொறுத்தவரை வன்னியை மீட்பதே அதன் இறுதிக்கட்ட இலக்காகி திக்குமுக்காடி வரும் நிலையில்,மக்கள் நலன் சார்ந்த நோக்கில் விடுதலைப் புலிகள் முன்கூட்டியே பெருமெடுப்பிலான பாரிய நில மீட்புச் சமர் ஒன்றை எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடும்!
virakesari
சுவிசிலிருந்து வெளிவரும் 'நிலவரம்" வார ஏட்டுக்காக ப.தெய்வீகன் எழுதிய - படைத்துறையின் பாடப்புத்தகம் பால்ராஜ்: இழப்பினை முன்வைத்து சில பதிவுகள்
படைத்துறையின் பாடப்புத்தகமாக விளங்கும் பிரிகேடியர் பால்ராஜின் மரணத்துக்கு தாம் காரணமாகவில்லையே என்று கவலையும் அதேவேளை புலிகளின் கொழுகொம்பொன்று முறிந்துவிட்டது என்று மகிழ்ச்சியும் தெரிவித்து வருகிறது சிங்கள தேசம்.
ஆனால் பால்ராஜின் இழப்பை தமக்கு ஏற்பட்ட பேரிழப்பாக பார்க்கும் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் அது எமது போராட்டத்துக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகவும் நோக்கி நொந்து கொள்கிறார்கள் என்று அண்மையில் பால்ராஜ் நினைவு நிகழ்வில் சந்தித்த நண்பர் ஒருவரின் கேள்வி மூலமாக புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
எனது நண்பர் கொண்டுள்ள இந்த கவலையின் நியாயப்பாட்டை விரிவாக நோக்கும் முன் பால்ராஜை பற்றிய ஒரு பார்வை.
ஈழமண் மீது போர் தொடுக்கும் எதிரி எவனுக்கும் வயிற்றில் புளிகரைக்கும் சொல் ~பால்ராஜ்|. பாரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துக்கொண்டு பல முனைகளில் முன்னேற முயலும் இராணுவத்திருக்குää பால்ராஜின் படைகள் எங்கு நிற்கின்றன என்று அறிந்து கொள்வதுதான் முதல் வேலையாவும் பின்னர் பால்ராஜன் படைகளை தவிர்த்து வேறு முனைகளை உடைத்துக்கொண்டே சண்டையிடுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது என்று பால்ராஜின் பாசறையில் பயின்ற போராளி ஒருவன் பெருமையுடன் கூறினான்.
பால்ராஜ் என்பவன் சிங்களப் படைத்தளபதிகள் போல கொழும்பில் இருந்து கொண்டே கப்டன் மேஜர் லெப்ரினன்ட் கேணல் என்ற பதவிநிலைகளை கடந்து வந்தவன் அல்லன். ஒவ்வொரு களத்திலும் எதிரியை புரட்டி எடுத்து அவனது திட்டங்களை துவம்சம் செய்து எத்தனையோ விழுப்புண்களை அடைந்துதான் இத்தனை பெரிய தளபதியாக வளர்ச்சி பெற்றான். போர்க்களத்தையே தனது வதிவிடமாகக் கொண்டவன் அவன்.
'ஜெயசிக்குறு" படை நடவடிக்கைக்கு முன்னர் ஆனையிறவிலிருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவம் பெரும் எடுப்பிலான நகர்வு முயற்சியொன்றை முன்னெடுத்திருந்தது. இதனை இருமுனைகளால் எதிர்கொண்ட புலிகள் கண்டி வீதிக்கு கிழக்காக ஒரு அணியையும் மேற்காக மற்றைய அணியையும் நிறுத்தி எதிர்ச்சமரில் ஈடுபட்டனர். இந்த இரு அணிகளில் பால்ராஜ் தலைமையிலான அணி எங்கு நிற்கின்றது என்பதை வானலைகளை ஒற்றுக்கேட்டு அறிந்துகொண்ட இராணுவம் அந்தப்பிரதேசத்தை விட்டுவிட்டு மற்றைய முனையாலேயே தாக்குதலை மேற்கொண்டது.
இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவரது தலைமையின் கீழ் சண்டையிட்ட போராளி ஒருவர் பால்ராஜ் அண்ணா களத்தில் நின்றால் அங்கு தமது பருப்பு வேகாது என்ற பயம் இராணுவத்தினருக்கு மட்டுமல்ல அவர்களை வழிநடத்தி கூட்டி வரும் தளபதிகளுக்கும் தெரியும் என்றார்.
'எந்த ஒரு கட்டத்திலும் பதற்றப்படாமல் திட்டங்களை செயற்படுத்தும் திறமை என்பது பால்ராஜ் அண்ணா தலைவரிடமிருந்து படித்த மிகப்பெரிய பாடம். எதிரி எம் படைகளை முற்றாக தனது முற்றுகைக்குள் கொண்டுவந்து விட்டாலும் கூட பதற்றப்படாமல் அணிகளை ஒருங்கிணைந்துää தனது திட்டத்தை செவ்வனே முன்னெடுத்து சாதுரியமாக எதிரியின் கண்ணில் மண்தூவும் வித்தை பால்ராஜ் அண்ணா சண்டைகளிலும் காண்பிக்கும் சாகச விளையாட்டு.
'தாம் போட்ட திட்டங்களை செயற்படுத்த முடியாமல் போனவுடன்ää மாற்றுத்திட்டத்தை உடனடியாக வகுக்க முடியாமல் எமது வலையில் வீழ்ந்த எத்தனையோ சிங்கள தளபதிகளிலிருந்து பால்ராஜ் அண்ணா விலகி நிற்பது இந்த இடத்தில்தான். களநிலைமைகளுக்கு ஏற்ப திட்டங்களை முன்னெடுப்பதும் தலைவரின் நெறிப்படுத்தலை நேர்த்தியாக செயற்படுத்துவதும் அவர்பால் வியக்க வைக்கும் ஆற்றல்கள். அவரது போரியல் அனுபவமும் ஒவ்வொரு போராளியினதும் திறமையை குறிப்பாக அறிந்து வைத்திருக்கும் பக்குவப்பட்ட படைத்துறை அறிவும்தான் எமது வெற்றிகள் பலவற்றுக்கும் பலமான அடித்தளமாக அமைந்தன.
'களமுனையில் கடமையிலிருக்கும் போராளிகளை தினமும் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து நிலவரங்களை மதிப்பீடு செய்வதென்பது பால்ராஜ் அண்ணனின் அன்றாட கடமைகளில் ஒன்று.
'ஒவ்வொரு போராளியினதும் திறமைகளை அறிந்து அவற்றை தலைவரிடம் எடுத்துக்கூறி அவர்களுக்குரிய பணிகளை ஓதுக்குவதில் பால்ராஜ் அண்ணனின் பங்கு மகத்தானது" - என்று பால்ராஜின் பெருமை பற்றி அடுக்கிச்சென்றார் இன்னொரு போராளி.
இத்தகைய ஒரு தானைத்தளபதியை இன்று தமிழினம் இழந்திருக்கிறது. உண்மை. ஆனால் தமிழர்களின் போராட்டத்துக்கு இது ஒரு இழப்பா என்ற எனது நண்பரின் கேள்விக்கு வருவோம்.
அவரது கேள்விக்கு விடையä அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வில் பேசிய அவுஸ்திரேலிய ஈழத்தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவர் நித்தியகீர்த்தியின் பேச்சுடன் ஒப்பிட்டுப்பார்ப்போம்.
'தனிமனித இழப்புக்கள் எமது தமிழீழப் பயணத்துக்கு ஒருபோதும் தடையாக அமையாது. தலைவர் பிரபாகரனின் தலைமையில் எமது போராட்டம் தொடரும். பிரிகேடியர் பால்ராஜின் இந்த எண்ணத்துக்கு செல்வடிவம் கொடுப்பதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி" - என்று நித்தியகீர்த்தி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உண்மையை இழப்புக்களால் துவண்டு போயுள்ள எம்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். தமிழர்களின் போராட்டம் எத்தனையோ பல சாதனை வீரர்களை இழந்திருக்கிறது. எதிரியின் சதிவலையில் சிக்கி பல தளபதிகள் வீரச்சாவை தழுவியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தமிழினம் துவண்டு போயிருந்தால் இன்று சர்வதேசமே அங்கீகரிக்குமளவுக்கு எமது போராட்டம் இவ்வளவு தூரம் பரிணமித்திருக்காது.
இழப்புக்களால் மனம் உடைந்துபோயுள்ள இந்த மக்களின் மனநிலை அன்று தனது உற்ற நண்பன் சீலன் வீரச்சாவடைந்த போது தலைவர் பிரபாகரனுக்கு ஏற்பட்டிருந்தால் எமது விடுதலைப் போராட்டம் இவ்வளவு தடைகளை கடந்திருக்குமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த இழப்புக்களின் பின்னர் விடுதலைப் புலிகள் படைத்த வீர வரலாறுகளை புரட்டிப்பார்க்க வேண்டும்.
விடுதலைப் புலிகளின் விமானப்படைத் தளபதி கேணல் சங்கர் அன்று எதிரியால் ஊடுருவித்தாக்கி படுகொலை செய்யப்பட்டதால் புலிகளின் வான்படை படுத்து விடவில்லை. அனுராதபுரத்திலும் சிங்களத்தின் தலைநகரிலும் வான் வழியால் வந்து குண்டுவீசுமளவுக்கு இன்று புதுவீச்சையடைந்துள்ளது.
யாழ். மக்களின் செல்லப்பிள்ளையான மன்னார் யாழ். மாவட்டங்களின் முன்னாள் தளபதி ராதாவின் இழப்பு உயிரைப்பிசையும் உணர்ச்சி மிக்கதுதான். ஆனால் அவரது பெயரிலான விமான எதிர்ப்புப் படையணிதான் இன்று சிங்களப் படைகளின் உயிர்குடிக்கும் வல்லூறுகளை சுட்டுவீழ்த்தி கூறுபோடுகின்றன.
வன்னிக் காட்டுப்பகுதியால் தலைவரின் செய்தியுடன் வந்துகொண்டிருந்த மூத்த உறுப்பினர் ஜொனியை சதிசெய்து கொன்றார்கள். தலைவருடன் பேசி ஒரு தீர்வைப்பெறலாம் என இந்தியாவிலிருந்து கிட்டு கொடுத்த உறுதிமொழியை கேட்டுவிட்டு இங்கு வன்னி காட்டுக்குள் சதிவலையை பின்னி சாதனை படைத்ததாக எண்ணினார்கள். எதிரி இன்றுவரை அதன் பலனை அனுபவித்து கொண்டிருக்கிறான். ஜொனியின் பெயரில் வடிவமைக்கப்பட்ட மிதிவெடியால் அன்று மணலாறு காட்டுப்பகுதிக்குள் இந்திய இராணுவத்தை காலடி எடுத்து வைக்கவில்லை. இன்று அதன் பிந்தைய வடிவங்கள் முகமாலையில் இராணுவத்தின் கால்களை எண்ண வைத்திருக்கின்றன.
இம்ரான் - பாண்டியன் படையணிää மாலதி படையணி சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி குட்டிசிறி மோட்டார் பீரங்கிப் படையணி விக்டர் கவச எதிர்ப்பு அணி கிட்டு பீரங்கிப் படையணி என்று தரையிலும் கடலிலும் எண்ணிக்கொண்டே போகலாம்.
சாவை தழுவிக்கொண்ட சாதனையாளர்களின் கனவுகளை சுமந்து சக போராளிகள் தமது வீரத்தால் நனவாக்கிக்கொள்வதுதான் தமிழினத்தின் வரலாறு. அவ்வாறான ஒரு இழப்புத்தான் இன்று பிரிகேடியர் பால்ராஜினுடையதும் என்பதை தமிழினம் புரிந்துகொள்ள வேண்டும்.
எண்பதுகளில் எதிரியின் கண்களில் விரல் விட்டு ஆட்டிய சாதனைத் தளபதி கேணல் கிட்டு. அப்போது பால்ராஜ் அவர்கள் புலிகள் அமைப்பில் இளநிலை போராளியாக இருந்தார். ஆனால் 90 இல் மாங்குளம் முகாம் தாக்கியழிப்பு 96 இல் முல்லைத்தீவு முகாம் தாக்கியழிப்பு ஆகியவற்றின் பின்னர்தான் பால்ராஜ் என்றால் யார் என்றும் 2000 ஆம் ஆண்டு மேற்கொண்ட குடாரப்பு தரையிறக்கத்தின் பின்னர்தான் பால்ராஜ் என்னவெல்லாம் செய்வார் என்று எமக்கு மட்டுமல்ல எதிரிக்கும் தெரியவந்தது.
அதுபோலவே தலைவனின் பாசறையில் இன்று எத்தனையோ பால்ராஜ்கள் எதிரியைப் புரட்டி எடுப்பதற்கு காத்திருக்கின்றனர். அவர்களின் வீரம் செறிவடையப்போகும் களம் எதுவென்று எதிரியே தீர்மானித்துக்கொள்ளட்டும்.
தமிழினம் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.
இருபதினாயிரம் மாவீரர்களின் தியாகத் தீயின் முன் சத்திய வேள்வியாக கொழுந்து விட்டெரியும் எமது போராட்டம் தனிமனித இழப்புக்களால் நின்று விடப்போவதில்லை. தலைவர் பிரபாகரனின் பெருவெற்றியே அதுதான்.
எத்தனையோ படையணிகள் எத்தனையோ தளபதிகள் என தமிழீழ இராணுவம் இன்று இந்தப் போராட்டத்தை எத்தனை சந்ததிக்கும் தாங்கிச் செல்லக்கூடிய வகையில் தலைவரால் கட்டமைக்கப்பட்டு விட்டது.
இந்த சுதந்திர தாகம் கொண்ட தேசத்தின் பயணத்தில் எந்த தடை வரினும் அதனை எதிர்கொள்ளக்கூடிய - வளம்மிக்க - எழுச்சி உணர்வு மிக்க - சமுதாயமாக எமது மக்களும் சிலிர்த்தெழ வேண்டும். அந்த எழுச்சியும் அதன் தொடர்ச்சியுமே எமது விடுதலையின் ஆன்ம பலமும் ஆகும்.
நன்றி: நிலவரம் (30.05.08)