Thursday, 29 May 2008

உயர்தர வகுப்பு பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

susil-premajayantha.jpgஇலங்கையில் உயர்தர வகுப்பு பாடங்கள் அனைத்தையும் ஆங்கிலத்தில் கற்பிக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. விஞ்ஞாம், வணிகம், கலை பிரிவு பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதற்கென நாடாளாவிய ரீதியில் 53 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. மேல் மாகாணத்தில் 12 பாடசாலைகளும் மத்திய மாகாணத்தில் 8 பாடசாலைகளும். வடக்கில் 3 பாடசாலைகளும் கிழக்கில் இரண்டு பாடாசலைகளும், தென் மற்றும் வடமேல் மாகாணத்தில் 7 பாடசாலைகளும், சபரகமுவ மாகாணத்தில் 8 பாடசாலைகளும் மற்றும் ஊவா மாகாணத்தில் 4 பாடசாலைகளும் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த பாடசாலைகளில் கல்விபொது தராதர உயர்தர பாடங்கள் ஆங்கிலத்தில் போதிக்கப்படும் எனவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

No comments: