Thursday 29 May 2008

நோர்வேயிலும் இந்தியாவிலும் ஏமாற்றுப்; பேர்வழிகள் தொடர்பாக விழிப்பாக இருங்கள்.

இந்தியாவில் கண்ணண் அல்லது விஸ்ணு என்ற பெயர்களில் நடமாடும் கிருபாகரன் விஸ்னுதாஸ் இலங்கைத் தமிழரான இவர் வெளிநாடு செல்வதற்காக இந்தியாவில் கடந்த 10 வருடமாக தமிழ்நாடு மும்பாய் பெங்களுர் ஆகிய பகுதியில் தங்கி வருகிறார்.

ஓர் வெளிநாட்டுக்குச் செலலு பயணியாக இருந்த கண்ணண் திடீரென வெளிநாட்டுக்கு ஆட்களை கடத்தும் முகவராக தன்னை இனம் காட்டிக்கொண்டு பலரிடம் முற்பணமாக பணத்தினைப் பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பாது ஏமாற்றி வந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

பணம் பெற்றவர்களிடம் தனது இருப்பிடத்தைக் காட்டாது தனது தொலைபேசி இடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டும் பயணிகளின் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.

அதுமட்டுமல்லாது பயணிகள் கொடுக்கும் முற்பணத்தில் மும்பாயில உள்ள போதைவஸ்து தரகர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி போதைவஸ்தினை இலங்கைக்கு அனுப்பி வருவதாகவும் இத்தொழிலுக்காக வெளிநாடு செல்ல வந்த பயணிகளையும் ஈடுபடுத்தி வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அண்மைக்காலத்தில் இவரால்; இலங்கைக்கு போதைவஸ்துடன் அனுப்பிய சிலர் மன்னாரில் கைதுசெய்யப்பட்டதாக அறியப்படுகிறது.

ஒரிசாவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இவர் மனைவியை பயணிகளிடம் பெற்ற பணத்தில் வேறு ஒரு ஆட்கடத்தும் முகரூடாக அமெரிக்கா அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதேவேளை இவருடன் சேர்ந்து சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட வெளிநாட்டு பிரஜை ஒருவர் இவ்வாறு இவருடன் சேர்ந்து ஏமாற்றிப் பெறப்பட்ட பணத்தில் அட்டலஸ்மிநகர் வளசரவாக்கம் என்ற இடத்தில் இந்தியப்பணத்தில் இரண்டு கோடிருபாவில் சொந்தமாக வீடுவாங்கியிருப்பதாக அறியப்படுகிறது.

குறிப்பிட்ட வெளிநாட்டுப்பிரஜை தற்போது தலைமறைவாகி நோர்வே நாட்டில் வசிப்பதாக தககவல் கிடைத்துள்ளது இவர் தொடர்பான விபரமும் விரைவில் நிதர்சனத்தில வெளிவரும்.

thank you:nitharsanam

No comments: