Thursday, 29 May 2008

முஸ்லிம் இனவாதம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் - ஜாதிக ஹெல உறுமய


தறபோது தலைதூக்கியிருக்கும் முஸ்லிம் இனவாதத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜாதிக ஹெலஉறுமய கோரிக்கை விடுத்துள்ளது.

ஜாதிக ஹெலஉறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரரினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துச் செல்லும் முஸ்லிம் கடும் போக்குவாதத்தை கட்டுப்படுத்திää சிங்களää தமிழ்ää முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிள்ளையான் முதலமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹிஸ்புல்லா பின்னர் அமைச்சுப் பதவியொன்றைப் பெற்றுக் கொண்டார். இந்த நிலைமை பிரபாரகரன் மற்றும் முஸ்லிம் கடும் போக்காளர்கள் அடைந்த படுதோல்வி என ஜாதிக ஹெல உறுமய சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமை மிக உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும். இதனால் இரத்தவெறி பிடித்த பிரபாகரனுக்கே சாதகமான சூழ்நிலை உருவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் இடம்பெறும் வன்முறைகளின் பின்னணியில் பிரபாகரனும்ää முஸ்லிம் கடும்போக்காளர்களும் இருப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டுகின்றது.

இந்த வன்முறைச் சம்பவங்களினால் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டுள்ள பிள்ளையானுக்கு பாரிய தடைகள் ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் கடும்போக்காளர்களின் செயற்பாடுகளை ஒத்துழைப்பு வழங்குவதன் மூலம் அப்பாவி தமிழ் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை சரியான முறையில் அணுகப்படாவிட்டால் முஸ்லிம் கடும் போக்குவாதத்தை தடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: