Thursday 29 May 2008

புதிய மகிந்த சிந்தனை பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைப்பு?

எரிபொருளை சிக்கனப்படுத்த அரசாங்கம் பாடசாலை இயங்கும் நாட்களை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாடசாலை நடத்தப்படும் நேரத்தை நீடித்து, பாடசாலை நடைபெறும் நாட்களை 5 இல் இருந்து 4 நாட்களாக குறைக்கும் யோசனை ஒன்று ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர எரிபொருளை சிக்கனப்படுத்தும் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பாடசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை குறித்து, உரிய தரப்புகளின் கருத்துக்களை பெற்று இரண்டு வாரங்களுக்குள் தன்னிடம் வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: