Saturday 31 May 2008

மலையகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் தமது செயற்பாடுகளை வியாபித்துள்ளது

மலையகப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் பல்வேறு வழிகளில் தமது செயற்பாடுகளை வியாபித்துள்ளதாக சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள பல இளைஞர், யுவதிகளின் பூர்வீகம் மலையகம் என தெரிவிக்கப்படுகிறது. 1983ம் ஆண்டு இனக்கலவத்தைத் தொடர்ந்து உயிரை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஆயிரக் கணக்கான மலையகத் தமிழர்கள் வடக்கு கிழக்கில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு சரணகதியடைந்த பல தமிழர்களின் வாரிசுகளே இன்றைய தமிழீழ விடுதலைப் புலிகளின் பல பிரிவுகளின் முக்கிய போராளிகள் என அந்த வார ஏடு தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் கல்வி பயின்று தற்போது மலையகப் பகுதிகளில் உயர் பதவிகளை வகிக்கும் பெரும்பான்மையானோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல முக்கிய பணிகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவருகிறது. அண்மையில் மலையகப் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அதிபர் மற்றும் உப அதிபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும், மலையக இளைஞர், யுவதிகள் பலர் வடக்கில் ஆயுத பயிற்சிகளை முடித்துக் கொண்டவர்கள் என அந்த பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: