மாத்தளை மில்லவான தோட்டத் தமிழ்ப் பாடசாலை முற்று முழுதாக சிங்கள மொழி பாடசாலையாக மாறி விட்டிருப்பதால் ஐந்தாம் வகுப்பு வரை மாத்திரமே கற்பிக்கப்படும் இப்பாடசாலையில் தற்போது 25 பிள்ளைகள் கற்று வருகின்றனர்.
இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழைக் கற்க முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஒரேயொரு சிங்கள ஆசிரியரே இங்கு இருந்து வந்தார். இவரே அதிபருமாவார். இந்நிலையில் அண்மையில் கலேவெல கல்விப்பணிமனையால் இப்பாடசாலைக்கு மற்றுமோர் சிங்கள ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்பாடசாலை சிங்கள பாடசாலையாக மாற்றப்பட்டு வருவது பற்றியும் அதனால் அங்குள்ள பிள்ளைகள் தாய்மொழி கல்வியைப் பெற முடியாமல் இருப்பது பற்றியும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் சிரேஷ்ட இணைப்பாளர் எம். சிவஞானம் முன்னாள் மாகாணக் கல்வி அமைச்சர் வி. இராதாகிருஷ்ணனுக்கும் தற்போதைய மாகாணக் கல்வி அமைச்சர் எஸ். அருள்சாமிக்கும் பலமுறை எழுத்து மூலமும் நேரடியாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
எனினும் இது குறித்து எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. தமிழ் கல்வி அமைச்சினால் கைவிடப்பட்டுள்ள இத் தோட்டப்பாடசாலைக்கு சீடாதிட்டத்தால் கிடைக்கவேண்டிய கட்டிடங்கள் அண்மை யில் வழங்கப்பட்ட மலையக ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் எவ்வித நன்மையும் கிடைக்க வாய்ப்பின்றி போயுள்ளது.
புதியதாக வழங்கப்பட்ட மலையக ஆசிரிய நியமனம் இங்குள்ள யுவதியொருவருக்குக் கிடைத்திருந்தாலும் கூட அவர் இங்கிருந்து பல மைல்களுக்கு அப்பாலுள்ள வேறொரு பாடசாலை க்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே இப்பாடசாலை பிள்ளைகள் தாய் மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்ளும் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி இங்குள்ள பெற்றோர் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Thursday, 29 May 2008
தமிழ்ப் பாடசாலைகள் முற்று முழுதாக முடக்கப்பட்டு சிங்களதேசியம் திட்டமிட்டு திணிக்கும் சிங்களம் எனச் சுடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment