அமரர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அமரர் ஜெயராஜினால் 60 இணைப்பதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் ஏனையோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும் அதிகாரசபையின் தலைவர் எம்.பீ.எஸ்.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் திட்டங்களை கண்காணித்தல், உரிய பரிந்துரைகளை அமைச்சுக்கு வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட இணைப்பதிகாரிகள் எவ்வித பணிகளையும் மேற்கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
40,000 - 10,0000 வரையில் இந்த அதிகாரிகள் சம்பளமாகப் பெற்றுக் கொள்வதாக பெயர் குறிப்பிட விரும்பாத உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதில், 60 வீதமான அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் எரிபொருள் கொடுப்பனவாக 25,000 ரூபா வழங்கப்படுவதாகவும் தெரியவருகிறது.
வார இறுதி நாட்களில் கடமையில் ஈடுபடுவதற்காக 20ல் ஒரு பகுதி சம்பளம் வழங்கப்படுவதாகவும், சாரதியின் சம்பளம் உட்பட மாதாந்தம் 75,000 ரூபா இவர்கள் வருமானமாகப் பெற்றுக்கொள்ளவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த இணைப்பதிகாரிகளில் 42 பேரை பணி நீக்கம் செய்யுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் ரீ.பி. ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இவர்களில் பெரும்பான்மையானோர் எவ்வித கடமைகளையும் மேற்கொள்ளாது சம்பளத்தை பெற்றுக்கொள்வதாக அமைச்சர் ஒப்புக்கொண்டார்.
இவர்கள் அனைவரும் மறைந்த அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயினால் நியமிக்கப்பட்டவர்கள் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனினும், தமக்கு இவ்வாறானதொரு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் தெரிவித்தார்.
Saturday, 31 May 2008
ஜெயராஜ் ஆதரவாளர்கள் பலருக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் நியமனங்கள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் சர்ச்சை - ராவய
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment