கட்டுநாயக்கா விமான நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை காலை விமானப் படையின் குண்டு வீச்சு விமானம் தரையிறங்கிய போது அதன் பின்சக்கர ரயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அதிகாலை முதல் வன்னிப் பகுதியில் கிபிர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின. இந்தத் தாக்குதலை நடத்திவிட்டு கட்டு நாயக்கா விமானப் படைத்தளத்திற்கு திரும்பிய கிபிர் விமானங்களில் ஒன்று தரையிறங்கிய போது அதன் பின் சில்லுகளில் ஒன்று பெரும் சத்தத்துடன் வெடித்துள்ளது. இதனால், அந்த விமானம் ஓடுபாதையை விட்டு சற்று விலகி இழுத்துச் செல்லப்பட்ட போதும் விமானியின் சாதுரியத்தால் விமானம் கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு எதுவித ஆபத்துமின்றி நிறுத்தப்பட்டது. விமானப் படைத்தளத்தினுள் பாரிய சத்தம் கேட்டதால் அந்தப் பகுதியெங்கும் சிறிதுநேரம் பெரும் பரபரப்பேற்பட்டது.
Friday, 30 May 2008
விமானம் தரையிறங்கியபோது பின் சக்கர ரயர் வெடித்ததால் பெரும் பரபரப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment