3G வசதியினைப் பெற்றுக் கொள்வதற்கான பொருத்தமான சூழல் இலங்கையில் குறைவாகவிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள 'டீகோ' நிறுவனத்தின் புதிய நிறைவேற்று அதிகாரி எரிக் வான் வுல்பென், அதன்காரணமாகவே டீகோ இன்னமும் 3G வசதியினை இதுவரை அறிமுகப்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் இலங்கையின் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்கள் காலத்திற்கு மிகவும் முந்தியே பல வசதிகளைப் பெற்றுள்ளதாகவும், அதற்கான விலையை அவர்கள் தற்போது கொடுத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை கையடக்கத் தொலைபேசிப் பாவனையாளர்களுக்குத் தேவையான வசதிகளை சரியான நேரத்தில் டீகோ வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டீகோவின் தலைமை நிறுவனமான மிலிகொம், இலங்கை, கம்போடியா, லாவோஸ் உள்ளிட்ட 16 நாடுகளில் கையடக்கத்தொலைபேசி இணைப்புக்களை வழங்கிவருவதாகவும், ஆசிய நாடுகளில் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருவதன் இந்நாடுகளில் தமது முதலீடுகளை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"உலகின் ஒழுங்கு மாறி வருகிறது. ஆசியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவருகிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் டீகோ இணைப்புகளை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும், ஆகால் நாட்டின் சூழ்நிலை காரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அதனை விஸ்தரிக்கும் நோக்கம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment