Thursday 29 May 2008

கருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் -- சர்வதேச மன்னிப்பு சபை

amnesty-i.jpgகருணா மீண்டும் இலங்கைக்கு திரும்பினால், அவர் மீது இலங்கை அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.

அவர் இலங்கையர்களுக்கு மேற்கொண்ட குற்றச்செயல்கள் தொடர்பில் இந்த விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என அந்த சபை கேட்டுள்ளது. சர்வதேச மன்னிப்பு சபையின் பணிப்பாளர் நாயகம், அரினே கான் இன்று பி பி சி சந்தேசிய வானொலிக்கு வழங்கிய செவ்வியில் இந்தக்கோரிக்கைகளை விடுத்தார்.

அவர் எவ்வாறு விசாரணை செய்யப்பட்டு வழக்கு தொடரப்படுவது தொடர்பில் இலங்கையில் சட்டமுறை எவ்வாறு செயற்படுகிறது என்பதற்கு இது ஒரு பரீட்சையாகும் என கான் குறிப்பிட்டுள்ளார். கருணா இலங்கை மக்களுக்கு எதிராக குற்றம் செய்தமை காரணமாக அவரை தண்டிக்கவேண்டியது இலங்கை அரசாங்கத்தின் கடமை என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்யாது போனால், கருணா எந்;த நாட்டுக்காவது செல்லலாம் எனினும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பிரச்சினை இலங்கை அரசாங்கத்திற்கே மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தும் என கான் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் சபையி;ன் மனித உரிமைகளுக்கான ஆசியநிலை ஆசனத்தை இலங்கை இழந்தமை தொடர்பில் கருத்துரைத்த அவர், தாம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அவையில் குற்றச்சாட்டுக்கள் எதனையும் சுமத்தவில்லை என குறிப்பிட்டார்.

எனினும் இலங்கை மனித உரிமைகளை மதித்து செயற்படும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். மூதூர் தன்னார்வு பணியாளர்கள் கொலையில் படையினர் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது.

அண்மைக்காலத்தில் படையினரும் தமிழீழ விடுதலைப்புலிகளும் மேற்கொள்ளும் மோதல்களில் பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர். பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில் இலங்கை அரசாங்கம் பொதுமக்களை பாதுகாக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments: