Friday, 30 May 2008

ஈழத்து மாணவன் சீ.பி.எஸ்.ஈ பரீட்சையில் முதன்மைச்சித்தி பெற்றுள்ளார்

இரகுநாதன் கவியழகன் மொத்தம் 500 க்கு 464 புள்ளிகபைபெற்றுள்ளார். அகில இந்திய ரீதியில் 9 இலடசத்திறகும் அதிகமான மணவர்கள் எழுதிய இத்தேர்வில் ஓர் ஈழத்து (அகதி) மாணவர் அணைத்துப்பாடங்களிலும் ஏ-1 இரக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார்

ஈழத்து இளைய கலைத்துறைச் சாதனையளன், ஓவியம், கலைமாமணி- இரகுநாதன்­-கவியழகன்(2006 ) கராத்தேயுவ கலாபாரதி- இரகுநாதன்- கவியழகன்(2005) 1992 ம்ஆண்டு ஆனிமாதம் 27திகதி ஈழத்தின்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கிழக்குக் கரையில் செம்லை என்ற ஊரில் பிறந்த இம்மாணவன் போராட்டச் சுழலில் வாழ்ந்தான்.


தந்தையார் இரகுநாதன்(எம்.ஐ.ஆர்) அவர்கள் நீண்டகாலம் போரளிகளின் பயிற்சி சம்பந்தப்பட்ட பொறுப்புக்களை வகித்து வந்தவர். குடும்ப சுழல் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்கு வந்தபோது இந்தியாவில் கைதாகி நீண்ட காலம் தடுப்பு முகாங்களில் அடைக்கப்படடு சிறைவாசம் அனுபவித்தார்.


அதனால் சிறுவயது முதல் கவியழகன் கல்வி கற்பதில் பல்வேறு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஆயினும் இவரிடம் காணப்பட்ட சிறப்புத்தன்மைகள் காரணமாக இவரை இவர் கல்வி கற்ற மகாத்துமா காந்தி நூற்றண்டுக் கல்விக்கூடம் விசேட பயிற்சிகளில் ஈடுபடுத்தியது.


அதனால் ஓவியம், மிருதங்கம் போன்ற நுண்கலைகளிலும் கோ-கோகிறிகட், பற்மிண்டன் (பூப்பந்து), மற்றும் தடகள விளையாட்டுக்களிலும் சிறந்த வீரனாக விளங்கி வருகிறார்.

எட்டாவது வயதில் தமிழ்நாடு ரீதியில் மணவர்கள் மத்தியில் நடைபெற்ற காரத்தே போட்டிகளில் பங்குபற்றி முதன்மைப் பதக்கங்கள் பெற்றுள்ளார்.

அகில இந்திய கராத்தே களகம் இவருக்கு யுவகலாபாரதிபட்டம் வழங்கி கவுரவப்படுத்தியுள்ளது. ஓவியத்துறையில் இவருடைய ஈடுபாடும் ஊக்கமும் ஒன்பது வயதிலேயே இவரை கலைமாமணி என்ற கௌரவப் பட்டத்திற்கு சொந்தக்காரனாக்கியது.

பங்கு பெறுகின்ற எந்தவொரு நிகழ்விலும் இவர் சாதனைகளைத் தனதாக்கிக்கிக் கொள்வதுடன் தான் கல்விகற்ற பாடசாலைக்கும் புகழ் சேர்ப்பதால் பள்ளி வட்டாரத்திலும் முதன்மை மாணவராகத் திகழ்கின்றார்.

திருச்சிராப்பள்ளி மாநிலத்திற்கும் இவரால் பெருமைகள் கிடைத்துள்ளது. இந்த இளைய சாதனையாருக்கு இலங்காசிறி இணையத்தளமும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது!

No comments: