பாக் விஞ்ஞானி அப்துல் காதீர் கான் |
இரானுக்கும் லிபியாவுக்கும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தந்ததாக ஒப்புக்கொள்ளுமாறு தனக்கு அழுத்தம்தரப்பட்டதாக பாகிஸ்தானின் அணு சக்தி விஞ்ஞானி, அப்துல் காதீர் கான் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆயுதத் திறனை ராணுவரீதியாக வளர்த்ததில் அவருக்கிருந்த பங்கிற்காக, ஏ.க்யூ,கான், தேசிய கதாபுருஷனாக பாராட்டப்பட்டர். ஆனால் 2001ம் ஆண்டில் அவர் தொலைக்காட்சி மூலம் ஒப்புக்கொண்டபோது, இந்த புகழின் உச்சியிலிருந்து அவர் கீழே வீழ்ந்தார்.
ஆனால், பிபிசிக்கு அவர் மிகக் கவனமாக வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து அளித்த பேட்டியில், அவர் ஒப்புக்கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டார் என்பதாக வரும் கருத்துக்களை அவர் அங்கீகரிப்பதாக தெரிந்தது.
இது பாகிஸ்தான் அணு ஆயுத ரகசியங்களை கசியவிடுகிறது என்று மேலை நாடுகளிலிருந்து வரும் குற்றச்சாட்டுகள் காரணமாக பாகிஸ்தான் மீது இருந்த அழுத்தங்களை தளர்த்துவதற்கே செய்யப்பட்டது என்று அவர் கோடி காட்டினார்
No comments:
Post a Comment