Thursday 29 May 2008

மகிந்த ராஜபக்ஸ நடத்தி வரும் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் --ரணில் விக்கிரமசிங்க

பயங்கரவாத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ஸ நடத்தி வரும் போருக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது கேள்விகளை எழுப்பிய ஊடகவியலாளர்கள், ஊடக ஒடுக்குமுறையானது, யுத்தத்துடன் கைகோர்த்து கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து மற்றுமொரு ஊடகவியலாளர் யுத்தம் தொடர்பான ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு குறித்து கேட்டதுடன், ஊடக ஒடுக்குமுறைக்கு எதுவான அவசரகால சட்ட நீடிப்பு மீதான வாக்கெடுப்பில், ஐக்கிய தேசிய கட்சி ஏன் எதிராக வாக்களிப்பதில்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

இவற்றுக்கு பதிலளித்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், அவசரகால சட்டத்தை நீடிக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தால், ஐக்கிய தேசிய கட்சி நாட்டுக்கு துரோகமிழைத்துள்ளதாக கூறி அரசாங்கம் தவறான அர்த்தத்தை கற்பிற்கும்

எனவும் அதனால் இதன் மூலம் ஊடக ஒடுக்குமுறையை தடுக்க பின்னனியில் இருந்து அழுத்தம் கொடுக்க முடியும் என தான் நினைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அதேபோல் பயங்கரவாத்திற்கு யுத்தம் மூலம் பதிலளிக்க வேண்டும் எனவும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாத்திரமே அரசில் தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் ரணில் கூறியுள்ளார்.

தலைவரின் இந்த நிலைப்பாடானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வடக்கு கிழக்கு இனப்பிரச்சினை தொடர்பில் கொண்டுள்ள நிலைப்பாடு என்பதும் குறிப்பிடதக்கது.

No comments: