Thursday 29 May 2008

இலங்கை இதுவரை காணாத புதிய வகை துப்பாக்கி மூதூரில் மீட்பு


திருகோணமலை மாவட்டம், ஹொறவப்பொத்தானைப் பகுதியில் உள்ள ஓரிடத்தில் முஸ்லிம் நபர் ஒருவரிடமிருந்து இலங்கையில் முதல் தடவையாக வெள்ளிரும்பினாலான ரி 56 ரகத் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றமை இலங்கைப் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக அறியவருகின்றது.
விடுதலைப் புலிகளிடமோ, பாதாள உலகக் குழுக்களிடமோ, அரசுப் படைகளிடமோ இல்லாத ஒரு ரகத்தில் ரி 56 ரகத் துப்பாக்கி முதல் தடவையாக அதுவும் முஸ்லிம் ஒரு வரிவிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றமை பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்திருக்கின்றதாம்.

இந்த நபருக்கும் "அல் குவைதா' போன்ற சர்வதேச இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் உள்ளனவா, அதன்மூலம் துருப்பிடிக்காத உயர் ரகத்திலான வெள்ளிரும்பில் தயாரிக்கப்பட்ட இந்த விசேட ரி 56 ரகத் துப்பாக்கி நாட்டுக்குள் கடத்தி வரப்பட்டதா என்பன போன்ற கோணத்தில் பாதுகாப்புத் தரப்பினர் தமது புலன் விசாரணைகளை முடுக்கி விட்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகின்றது.

தமக்குக் கிடைத்த விசேட உளவுத் தகவல் ஒன்றை அடுத்து திருகோணமலையில் இருந்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் சென்ற விசேட புலனாய்வுக்குழு ஒன்று நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணியளவில் ஹொறவப்பொத்தானைப் பகுதியில் வைத்து மேற்படி சந்தேக நபரை அந்த ஆயுதத்துடன் மடக்கியது என்றும் அச்சந்தேக நபர் திருகோணமலைத் தலைமையகப் பொலிஸாரினால் கடும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இது தொடர்பில்; கைதுசெய்யப்பட்ட நபர் மத்திய கிழக்கில் தொழில்புரிநதவர் எனவும், துப்பாக்கியை காலியை சேர்ந்த ஒருவர் தனக்கு வழங்கியதாக தெரிவித்துள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments: