போர் நிறுத்த உடன்படிக்கை நடைமுறையில் இருந்த போது, வடக்கில் மாத்திரம் நிலவிய போர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் பரவியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் முன்னாள் அமைச்சர் மங்கள் சமரவீர தெரிவித்துள்ளார்.
யுத்ததை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும் அவரது சகோதரர்களும் நாட்டின் கிராமங்கள் வரை விரிவுப்படுத்தியுள்ளதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். யுத்தினாலோ, எரிபொருட்களின்; விலைக அதிகரிப்பினாலோ அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை எனவும் ராஜபக்ஸ நிறுவனத்தின் கொள்ளையடிப்பினால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவின் பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முதலாவது தேர்தல் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
யுத்தம் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஒத்துவராதது. உலகில் எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், முழு உலகத்திலும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் என அரசாங்கம் கூறுகிறது.
எனினும் இந்தியா, தாய்லாந்து, கொரியா ஆகிய நாடுகளில் மாத்திரம் அல்ல மாலைத்தீவிலும் 25 சத வீதத்தினால் மட்டுமே பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ஸ நிறுவனம், பாரியளவில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது. வீண் வீரயம் அதிகரித்துள்ளது, அரசாங்கம் ஊழல் மோசடிகளில் ஈடுபடுகிறது. இலங்கை வங்கியில், ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றில் இருந்து பணத்தை பெற்றுகொண்டு, அவற்றை பெருமளவில் அழித்துள்ளதாகவும் மங்கள சமரவீர குறிப்பட்டுள்ளார்.
மிஹின் எயாருக்கு என்ன நேர்ந்தது, இந்த நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பணத்தை இவர்கள் அழித்துள்ளனர்.
மக்கள் பிரிவினர் இந்த மிஹின் எயார் தொடர்பில் எதிர்க்காலத்தில் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது, ஜாதிக ஹெல உறுமயவின் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ, கோத்தாபாய ராஜபக்ஸ, சரத் பொன்சேக்கா போன்றவர்களின் தேவைக்கேற்றது போல் செயற்படுகிறது என குற்றம்சுமத்தியுள்ள மங்கள மீண்டும் கட்சியை நடுநிலைமைக்கு கொண்டு வந்து, மனித உரிமை தொடர்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கையை உரிய வழிக்கை கொண்டு வரபோவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment