Wednesday, 2 July 2008

கல்முனையைச் சேர்ந்த 1 வயதுக் குழந்தை உட்பட்ட குடும்பத்தினர் ஹொரனையில் கைது

கல்முனையில் இருந்து ஹொரனைப் பகுதிக்கு சென்ற 1 வயதுக் குழந்தை உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ளர்.

திருமண நிகழ்வொன்னிற்காக புகையிரதமூலம் ஹொரண சென்று பேருந்து தரிப்பிடத்தில் நின்ற வேளை கைது செய்யப்பட்டதாக கைது செய்யப்பட்ட குடும்பத்தின் இளைய மகன் ராஜரட்ணம் லோரன்ஸ் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணனிடம் முறையிட்டுள்ளார்.

இந்தக் கைது குறித்து தகவல்களைப் பெறச்சென்ற அருட் தந்தை பற்றிக் லோறன்ஸை ஹொரன காவல் நிலையப் பொறுப்பதிகாரி அனுரறன்தெனிய கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

57 வயதுடைய ராஜமணி ராஜரட்ணம், 27 வயதுடைய ராஜரணம் கிறிஸ்ரோபர் பிறின்ந், 23 வயதுடைய ராஜர்ணம் கிறிஸ்ரோபர் பிரியாளினி, 23 வயதுடைய அருண் தர்மினி சொலமன், 1 வயதுடைய பிராங்லின் தெரேசா ஆகியோரே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் தமது ஆள் அடையாள அட்டை, தமது பகுதி கிராம சேவகரின் கடிதம், திருமண அழைப்பிதழ் என அனைத்து ஆதாரங்களையும்; காவற்துறையினரிடம் காண்பித்த பின்பும், இவர்கள் கல்முனைத் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: