Wednesday, 2 July 2008

சார்க் மாநாட்டிற்கு 288 கோடி ரூபா செலவு

இம்முறை இலங்கையில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டிற்காக 288 கோடி ரூபா செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற சார்க் மாநாட்டின் போது 15ஆவது சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்படி 15 ஆவது சார்க் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இம்மாதம் 27ம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 3ம் திகதி வரை கண்டியில் நடாத்துவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சார்க் மாநாட்டை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினரினால் முன்வைக்கப்பட்ட நிதி பாதீட்டுத் திட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி புனரமைப்பு செலவீனங்களுக்காக 401,801,272 ரூபாவும், முலீட்டு செலவீனமாக 2,478,299,060 ரூபாவும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மொத்தமாக 2,880,180,332 ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சிற்கு 354,417,497 ரூபாவும் கலாச்சார அமைச்சிற்கு 2,960,000 ரூபாவும், பொலிஸ் திணைக்களத்திற்கு 2,168,315,735 ரூபாவும், கண்டி மாவட்ட செயலகத்திற்கு 920,000 ரூபாவும், பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்திற்கு 123,267,100 ரூபாவும், தேசிய இளைஞர் சேவைகள் மத்திய நிலையத்திற்கு 7,500,000 ரூபாவும் மற்றும் கொழும்ப நகர சபைக்கு 222,800,000 ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: