கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கு அதிக வரப்பிரசாதங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை அமைச்சர்கள் சங்கத்தின் யோசனையொன்றை முன்வைக்க கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி கொடுப்பனவு உள்ளிட்ட அனைத்து கொடுப்பனவுகளும் உயர்த்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெரும்பான்மையான உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைக்கத் தீர்மானித்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதிக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவருக்கு 50 லட்ச ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் கொடுப்பனவாக 30,000 ரூபாவும், தொலைபேசிக் கட்டணக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்பட வேண்டும் என மாகாணசபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Thursday, 3 July 2008
எரிபொருள் கொடுப்பனவாக 30,000 ரூபாவும், தொலைபேசிக் கட்டணக் கொடுப்பனவாக 15,000 ரூபாவும் வழங்கப்பட வேண்டும்-கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment