இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மேலதிகமாக உள்ள ஊழியர்கள் 400 பேரை அவர்களுக்கு இழப்பீடு வழங்கி பணியிலிருந்து நிறுத்தவுள்ளதாக அந்நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 வருடங்களுக்கு மேலான காலப் பகுதியில் பணியாற்றியவர்களும் 52 வயதுக்கு குறைவானவர்களும் கூட தன்னிச்சையாக ஓய்வுபெறும் திட்டத்தின் கீழ் ஓய்வுபெற விண்ணப்பிக்க முடியுமென்று இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் ஹட்சன் சமரசிங்க' லங்கா பிஸ்னஸ் ஒன்லைனு' க்கு தெரிவித்துள்ளார். 400 பேரும் ஓய்வுபெற விரும்பினால் அவர்களுக்கு இழப்பீட்டு நிதியை வழங்க கூட்டுத்தாபனத்துக்கு 40 கோடி ரூபா தேவைப்படுமெனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இத்திட்டத்திற்கு திறைசேரி நிதி வழங்குமென எதிர்பார்க்கப்படுவதாக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனப் பணிப்பாளர் சமந்த வெலி வீரிய தெரிவித்திருக்கிறார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு தற்போது மாதாந்தம் ஊதியக் கொடுப்பனவுச் செலவினமாக 2 கோடி 40 இலட்சம் செலவிடப்படுவதாகவும் மேலதிக ஊழியர்களை நிறுத்தினால் 1 கோடி 50 இலட்சம் ரூபாவை இலாபமாக பெற முடியுமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1,068 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். போக்குவரத்து, பாதுகாப்பு பிரிவுகளிலேயே மேலதிகமாக ஊழியர்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் அநேகமான அரச நிறுவனங்களில் மேலதிகமாக ஊழியர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. தமது ஆதரவாளர்களை அரசியல்வாதிகள் அரச நிறுவனங்களில் நியமனங்களை வழங்கி நிரப்புவது தசாப்தங்களாக தொடர்வதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. அண்மைய வருடங்களில் சுமார் 3 இலட்சம் பேர் அரசதுறைக்கு திரட்டப்பட்டிருப்பதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். 2007 இல் வரி மூலமான வருவாயின் ஒவ்வொரு ரூபாவினதும் 55 சதம் அரசதுறையின் சம்பளங்கள், ஓய்வூதியங்களுக்கு செலவிடப்படுகின்றது.
இழப்பீடு வழங்க 40 கோடி தேவையென தெரிவிப்பு
Monday, 21 July 2008
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 400 ஊழியரை வீட்டிற்கு அனுப்ப மகிந்த அரசு திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment