Wednesday, 2 July 2008

எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை தோற்கடிப்பேன்-ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் கெஹெலிய தகவல்

அப்பாவிப் பொது மக்களை விட்டுவிட்டு என்னை பயங்கரவாதிகள் தமது இலக்காகக் கொள்வார்களானால் அதனை ஒரு சவாலாக நான் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

எனது உயிரைப் பணயம் வைத்தாவது பயங்கரவாதத்தை இல்லாதொழித்து எமது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளேன் என ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தம்மிடம் கூறியதகாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மததிய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

நாட்டின் இறைமையையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் பொறுப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நடவடிக்கையை தான் முன்னின்று நடத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிலைப்பாட்டில் இருந்து தான் ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லை என்றும் நாட்டுக்காக எந்தத் தியாகத்தையும் தான் செய்யத் தயார் என்றும் என்னிடம் ஜனாதிபதி மிகவும் துணிவுடன் தெரிவித்தார் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்

No comments: