Wednesday, 23 July 2008

இலங்கை உல்லாச துறைக்கு எதிரான ஜப்பானின் பிரச்சாரத்தை தடுக்க பிரதி வெளி நாட்டு அமைச்சர் ஜப்பான் பயணம்!

விடுதலைப் புலிகள் நாட்டின் பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையையும் இலக்கு வைத்துள்ளனர்.

இதேவேளை, உல்லாசப் பயணிகள் எதிர்கொண்டுள்ள அச்சம் காரணமாக கடந்த மே மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 9.3 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தது.

எனினும் சுற்றுலா மேம்பாட்டுக்கான அமைப்பினால் இந்த பாதிப்பைத் தடுத்து நிறுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு இதனை தடுத்து நிறுத்த சுற்றுலாத்துறைக்கு உதவ முடியும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.


இந்தநிலைமை தொடர்பாக கருத்துத் தெரிவித்த சுற்றுலாத்துறை செயலாளர் ஜோர்ஜ் மைக்கேல் இலங்கைக்கு எதிராக ஜப்பான் தெரிவித்துவரும் சுற்றுலா பயண அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பிரச்சினை பற்றி கலந்துரையாடுவதற்கு பிரதி வெளியுறவு அமைச்சர் டோக்கியோ சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பாலித கோஹண சுற்றுலாத்துறையின் நிலை பற்றி தெரிவிக்கையில்; கடந்த காலங்களில் பொருளாதார இலக்குகளை விடுதலைப் புலிகள் தாக்கியதன் மூலம் இராணுவ நடவடிக்கைகளில் வெற்றி பெற்றனர் எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு யுத்தங்களின் போதும் பொருளாதாரத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையிலேயே வெற்றி, தோல்விகள் மதிப்பிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: