இந்திய அரசாங்கத்தை தமிழ்மக்களுக்கு எதிராக திசைதிருப்புவதில் இலங்கை ஆட்சி யாளர்கள் வெற்றிகண்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் , இந்திய அதிகாரிகளின் வருகையை பேரின வாதக் கொள்கைளை பலப்படுத்துவதற்கே இலங்கை பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைக்கால அரசியல் மற்றும் இரா ணுவ நிலவரம் குறித்து "கேசரி?' வார வெளி யீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படித் தெரிவித் துள்ளார்.
இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட் டாலே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று தெ?வித்துள்ள அவர், படைவலுச் சமநிலை யில் பலமான நிலையில் இருந்துகொண்டே புலிகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் வடக்கை கைப்பற்றுவதாக இராணுவத்தினர் சூளுரைப்பது வழமை யான ஒன்றுதான் என்றும் கூறும் அவர் , கிழக்கு மாகாணத்தை காலம் கனியும்போது புலிகள் மீண்டும் தமது முழுமையான கட் டுப்பாட்டுக்குள் கொண்டுவருவர் என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்டத்திற்கு நிபந்தனை கள் விதிப்பதை மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இராணுவ மேலாதிக்கத் தில் இருந்து கொண்டு பேச முன்வருவதை யும் அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சுமுகமான சூழலில் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவு செய்யக் கூடிய பேச்சுவார்த்தை ஒன்றையே நாம் விரும்புகின் றோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் றுறைப்பொறுப்பாளர் பா.நடேசன் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய மின்னஞ்சல் செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இராஜதந்திரிகளின் வருகையை சிறிலங்கா அரசு தனது பேரினவாதக் கொள் கையைப் பலப்படுத்துவதற்கே பயன்படுத்தி யுள்ளது. இறுதியாக இந்திய அரசை தமிழ் மக்க ளுக்கு எதிராக திசை திருப்புவதில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் வெற்றியும் கண்டுள்ளனர் என்றும் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவின் செயற்பாடுகள் தமிழ் மக்கள் அனைவருக்கும் வேதனை தரும் செயலாகும்.
கனடாவின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கெதிரான செயற்பாடுகளுக்கு ஊக்கம் தருவதாகவே அமைந்துள்ளது என்றும் அவர் தனது மின்னஞ்சல் செவ்வியில் கூறியுள் ளார். அவரது செவ்வியின் முழு விபரம் வரு மாறு:
இந்திய உயர்மட்டக்குழு திடீர் விஜயம் ஒன்றை இலங்கைக்கு மேற்கொண்டிருந் தது. அந்தக்குழுவில் இந்திய வெளியுறவு செயலாளர், பாதுகாப்பு பிரதி செயலாளர், பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் அடங்கி யுள்ளனர். இதனை தமிழீழ விடுதலைப்புலி கள் எவ்வாறு பார்க்கின்றனர்?
பதில்: காலத்திற்குக் காலம் இந்திய இராஜ தந்திரிகளும் உயர் அதிகாரிகளும் சிறிலங்கா விற்கு வருவதும் அதேபோன்று சிறிலங்கா இராஜதந்திரிகளும் உயர் அதிகாரிகளும் இந்தி யாவிற்குச் செல்வதும் வழமையான நிகழ்வா கும். ஆனால் இந்திய இராஜதந்தி?களின் வரு கையை சிறிலங்கா அரசு தனது பேரினவாதக் கொள்கையை பலப்படுத்துவதற்கும், தமிழ் மக் கள் மீது பல்வேறு அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் மேலும் தீவிரப்படுத்து வதற்குமே பயன்படுத்தி வந்துள்ளது. இதனூ டாக இந்திய அரசை தமிழ்மக்களுக்கு எதிராக திசைதிருப்புவதில் சிறிலங்கா ஆட்சியாளர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். அத்துடன் சிறிலங்கா அரசானது எப்போதுமே இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு எதிராகவே செயற் பட்டுவருவதை நீண்ட கால வரலாற்றின் ஊடாக அறிந்துகொள்ளலாம். இந்திய அரசின் அணுகுமுறைகள் எவ்வாறாக இருப்பினும் அவர்களது நலன்களுக்கு எதிரான சக்திகளு டன் கூட்டுச்சேர்வதும் நெருக்கடியான கால கட்டங்களில் இந்தியாவிற்கு எதிரான நாடுக ளுக்கு இராணுவ ரீதியான ஒத்துழைப்புக்களை வழங்குவதும் சிறிலங்கா அரசின் வெளியுற வுக்கொள்கையாக இருந்து வந்துள்ளது. இக் கால கட்டத்தில் இந்திய அரசும் அதன் கொள்கைவகுப்பாளர்களும் இந்திய தேசத்தின் உண்மையான நேச சக்திகள் யார் என்பதை சரியாக இனங்காண வேண்டும் என்பதை வலி யுறுத்த விரும்புகின்றேன்.
ஆயுதங்களை கீழே வைத்த நிலையில் பேச்சுவார்த்தை என்பதை தமிழீழ விடு தலைப்புலிகள் முற்றுமுழுதாக நிராகரித்துள்ளனர். அப்படியாயின் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடைபெறும்? உங்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவீர்களா?
பதில்: தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் என்பது தமிழீழ மக்களின் விடு தலைப் போராட்டமாகும். எந்த ஒரு மக்களின் விடுதலைப்போராட்டத்தினையும் நிபந்தனை கள் விதிப்பதனாலேயோ அல்லது ஒடுக்கு முறையாளர்கள் இராணுவ மேலாதிக்கத்தில் இருந்துகொண்டு பேச முன்வருவதையோ மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சுமூகமான சூழலில் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யக் கூடிய பேச்சுவார்த்தை ஒன் றையே நாம் விரும்புகின்றோம்.
இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும்போது பேச்சுவார்த்தை சாத்தியமாகுமா?
பதில்: பேச்சுவார்த்தை என்பது இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகும்போதே பேச்சுவார்த்தை களை மேற்கொள்வதற்கான சாத்தியங்கள் உரு வாகும். அவ்வாறான பேச்சுவார்த்தைகளே உண்மையில் காத்திரமானதாகவும் பயனுள்ள தாகவும் இருக்கும்.
கிழக்கை கைப்பற்றியதைப்போன்று வடக் கையும் கைப்பற்றி தேர்தலை நடத்தவிருப்ப தாக அரசு சூளுரைத்துள்ளது. இதுபற்றி புலி கள் என்ன கூறுகின்றார்கள்?
பதில்: கிழக்கில் இப்போதும் எமது போரா ளிகள் நிலைகொண்டுள்ளார்கள். எமது அனைத்து நடவடிக்கைகளும் செயற்பாடுக ளும் அப்பிர தேசத்தில் தொடர்ந்தவண்ணமே யுள்ளன. சரியான காலநேரம் வரும்போது கிழக்கினையும் நாம் எமது பூரண கட்டுப்பாட் டினுள் கொண்டு வருவோம். வடக்கை முழு மையாக கைப்பற்றுவது என்று சிறிலங்கா அரசு சூளுரைப்பது ஒன்றும் புதியவிடயமல்ல. எமது விடுதலைப் போராட்டம் தோற்றம்பெற்ற காலத் தில் இருந்தே அவ்வப்போது பதவி வகிக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் இவ் வாறு சூளு ரைப்பது வழக்கமாகும். ஆனால் எச்சந்தர்ப்பத் திலும் இதற்கு நாம் இடமளிக்கப்போவதில்லை.
பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு சர்வதேசத்திடம் இருந்து அழுத்தம் எதுவும் வந்துள்ளதா?
பதில்: அவ்வாறான அழுத்தங்கள் எதுவும் எமக்கு இல்லை. ஆனால் சர்வதேச சமூகம் அரச தரப்பினருக்கே பாரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர் பார்க்கின்றார்கள். ஏனெனில் சிறிலங்கா அரதரப்பினரே போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முறித்துக் கொண்டு தன்னிச்சையாகவே வெளி யேறியுள்ளதுடன் தொடர்ச்சியாக இராணுவ நடவடிக்கைகளை தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசங்களிலே மேற்கொண்டு பல்வேறு உயிர்,உடைமை அழிவுகளை ஏற்படுத்திவரு கின்றார்கள். அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வாழ்விடங்களில் இருந்து சிறிலங்கா இராணுவ நடவடிக்கைகள் காரண மாக வெளி யேறி அகதிகளாக முகாம்களிலே வாழவேண் டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் கள். ஆகவே சர்வதேச சமூகம் சிறிலங்கா அர சிற்கே அழுத் தம் கொடுக்கவேண்டும்.
இதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் நிபந்தனைகள் விதிப்பதையோ அல்லது இராணுவ மேலாதிக்கத்திலிருந்து கொண்டு பேச விரும்புவதையோ தமிழ் மக்கள் விரும்பமாட்டார்கள் என்பதே தமிழ் மக்க ளின் விருப்பமாகும்.
போர் முனையில் தமிழீழ விடுதலைப்புலி கள் தோல்விகளைச் சந்திக்கும் பொழுது தம் மைப் பலப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்திற்காக பேச்சுவார்த்தைக்கு செல் வர் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.
இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?
பதில்: நாம் எப்போதும் படைவலுச் சம நிலையில் பலமான நிலையில் இருந்து கொண்டே பேச்சு வார்த்தைகளுக்கு சென்றுள் ளோம். போர் நடை பெறும் காலப்பகுதியி லேயே நாம் எமது மரபு வழி படையணிக ளைக் கட்டியெழுப்பி மக்கள் இயக்கமாக பலப் பட்டு வளர்ச்சி அடைந்து வந் துள்ளோம் என் பது வரலாறு பகரும் சான்றாக உள்ளது. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயமாகும்.
சர்வதேச ரீதியில் புலிகளுக்கு கூடுதலான அழுத்தம் கொடுக்கப்படுகிறது. தற்போது கனடாவில் உலகத் தமிழர் பேரவை தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் புலிகள் என்று கூறி இத்தாலியில் 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது பற்றி நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
பதில்: கனடாவின் இச்செயற்பாடு உலகத் தில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் வேதனை தரக் கூடிய ஒரு செயலாகும். தமிழீ ழத் தாயகம் மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற தமிழ் மக்கள் மற்றும் உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்களின் மனங் களை புண்படுத்திய செயலாக இந்த நட வடிக்கை அமைந்து விட்டது. சிறிலங்கா அர சின் பயங்கரவாத அடக்குமுறை ஒடுக்குமுறை செயற்பாடுகளுக்கு அஞ்சி புகலிடம் தேடி வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றவர் களை கைது செய்வது என்பது எவருக்குமே வேதனையளிக்கக் கூடிய ஒரு விடயமாகும்.
கனேடிய அரசின் இவ்வாறான செயற்பாடுகள் சிறிலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள், சிறிலங்கா அரசின் இரா ணுவ நடவடிக்கைகள் என்பனவற்றிற்கு மறைமுகமாக ஆக்கமும் ஊக்கமும் கொடுக் கும் ஒரு நடவடிக்கையாகவே தமிழ் மக்கள் இதனை பார்க்கின்றனர்.
Saturday, 5 July 2008
இந்திய அரசாங்கத்தை தமிழ்மக்களுக்கு எதிராக திசைதிருப்புவதில் இலங்கை ஆட்சி யாளர்கள் வெற்றிகண்டுள்ளனர் -பா.நடேசன்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment