Sunday, 13 July 2008

இலங்கை இந்திய உடன்பாடு கிழிக்கப்பட்டது போல் கச்சதீவு உடன்பாடு கிழிக்கப்பட வேண்டும் - விஜயகாந்

இந்தியாவின் வடமாநிலங்களில் ஏதேனும் பிரச்சினை என்றால் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண இராணுவம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் ஆனால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரினால் தாக்கப்படும் போது, அதனை கேட்க நாதியில்லை என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதையும், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத இந்திய மத்திய, தமிழக அரசுகளை கண்டித்தும் விஜயகாந்த் தலைமையில் நேற்று (யூலை13) ராமேஸ்வரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெரும்திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.


தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் பகுதியான கச்சத்தீவை இலங்கையிடம் கையளித்த போது, பதவியை காப்பற்றிக் கொள்ள எதிர்ப்பு எதனையும் தெரிவிக்காத கருணாநிதி,


தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு, உயிரிழக்கும் போது, மத்திய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காது, ‘கடலி;ல் தூக்கி எறிந்தால், கட்டுமரமாகி வருவேன் அதில் மீனவர்கள் பயணம் செய்யலாம்’ என கவிதை பாடுவதாகவும் விஜயகாந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

மீனவர்களின் வாக்குகளை பெற்றுச் செல்லும் இவர்கள் தமிழக மீனவர் நலனில் அக்கறை செலுத்தவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நிர்வாணப்படுத்தி, மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகவும் விஜயகாந்த் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தான் உடன்படிக்கைகள் மேற்காள்ளப்படுவதாகவும் எனினும் 1987 ஆம் ஆண்டு இலங்கை தமிழர்களின் நலனுக்கான இந்தியவுடன் செய்து கொண்ட இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாண ஒப்பந்தத்தை இலங்கை அரசு கிழித்து குப்பையில் எறிந்துள்ளது எனவும் விஜயகாந்த தெரிவித்துள்ளார்.


அதேபோல் பிரச்சினைக்குரிய கச்சத்தீவு உடன்படிக்கையை இந்திய மத்திய அரசு கிழித்து போட்டு விட்டு, தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 comment:

ttpian said...

Ayya Vijayakanth:do u know the policy of India?
GRAB,whatever possible from a burning house(srilanka)